வீரமாமுனிவரின் திருக்குறள் இலத்தீன் மொழியாக்கம், 1730, 1731, 1732, 1733 (ஓர் ஆய்வு)

50

Add to Wishlist
Add to Wishlist

Description

வீரமாமுனிவரின் திருக்குறள் இலத்தீன் மொழியாக்கம்

இந்த நூல் திருக்குறள் இலத்தீன் மொழிபெயர்ப்பின் மூலம் வீரமாமுனிவர் (பெஸ்சி) தமிழ் இலக்கியத்தின் தனித்துவத்தை ஐரோப்பிய இலக்கியத்தளத்திற்கு வெளிப்படுத்தியுள்ளது பற்றி விரிவாக அலசுகிறது. ஒவ்வொரு குறளுக்கும் அவர் முதலில் தமிழ் உரைகள் எழுதி. அடுத்து அதன் ஒலிபெயர்ப்பு, தொடர்ந்து மொழிபெயர்ப்பு மற்றும் கருத்துகள். அதற்கடுத்து ஒவ்வொரு வார்த்தையையும் மொழிபெயர்த்து அதில் உள்ள இலத்தீன் மொழியின் தனித்தன்மைகளைக் கூறி, அவருடைய சொந்த அர்த்தங்களையும், விளக்கங்களையும் கொடுத்துள்ளது பற்றி தெளிவாக விவரிக்கிறது.

வீரமாமுனிவர் 1730ஆம் ஆண்டு முதன்முதலாக திருக்குறள் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் மொழிபெயர்ப்பைத் தொடங்கினார். 1731ஆம் ஆண்டு, 1732ஆம் ஆண்டும் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். ஆனால் 1733ஆம் ஆண்டு திருக்குறள் இலத்தீன் மொழிபெயர்ப்புகள் இறுதி செய்திருப்பதைக் காண்கிறோம். இது அவருடைய முந்தைய மொழிபெயர்ப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, செந்தமிழில் காணப்படுகிறது. குறளின் மீது ஆழ்ந்த பற்றிருந்ததால், இவ்வாறு ஒரே குறளுக்குப் பல்வேறு மொழிபெயர்ப்புகளை பெஸ்சி அவர்கள் பல்வேறு காலத்தில் பரவலாகச் செய்திருப்பதைக் காண்கிறோம். மனமகிழ்வோடு நாம் கண்டது என்னவென்றால். சொற்கள் அவரால் மாற்றப்படுகின்றன. ஆனால் அதன் பொருள் ஒரே வகையாக உள்ளது. மொழிபெயர்ப்பாளராக வெவ்வேறு ஆண்டுகளில் வெளிப்பட்ட அவருடைய சிந்தனை மற்றும் கருத்துக்களின் முன்னேற்றம். முதிர்ச்சி ஆகியனவற்றை 1733ம் ஆண்டு இலத்தீன் மொழிபெயர்ப்பு உறுதியாகக் காட்டுகிறது. இந்தத் திருக்குறள் இலத்தீன் மொழிபெயர்ப்புதான் இதர ஐரோப்பிய மொழிகளான ஜெர்மன் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கு வழிகோலியது.

முன் அட்டைப்படம்: வீரமாமுனிவர் உருவப்படம். அச்சிடப்பட்ட முத்துசாமிப்பிள்ளை நூல். சென்னை. 1840 (தேசிய நூலகம், பிரான்சு)

Additional information

Weight0.250 kg