புத்தக உள்ளடக்கம்:
1. கலைகள் நிகழ்த்து கலைகள் அறிமுகம் விளக்கம்
2. சங்க கால நிகழ்த்து கலைகள்.
3. சங்க இலக்கியத்தில் நிகழ்த்து கலைஞர்கள்
4. சங்க இலக்கியத்தில் நிகழ்த்து கலைகள், நிகழ்களங்களள்,0சூழல்கள் பிறவும்.
5.சங்க இலக்கிய நிகழ்த்து கலை,
6. கலைஞர்களின் எச்சங்கள்.
பக்கங்கள்: 424
கலைகள் நிகழ்த்து கலைகள் அறிமுகம்:
முதல் இயல் கலை விளக்கம், கலை சொற்பொருள் விளக்கம், கலைத்தோற்றம், வளர்ச்சி, கலைக் கொள்கையும் கோட்பாடும், கலைமரபு, கலையின்சிறப்பு, கலையின் வகைகள் கலையின் பயன்கள், கலையின் இயல்புகள், கலையின் பிரிவுகள், கலைஞர்கள், நிகழ்த்துகைைலகள், நிகழ்த்து கலைகளின் தோற்றமும் வளர்ச்சியும், பழங்கால மக்களின் நிகழத்துகலைகள், நாட்டுப்புற நிகழ்த்துகலைகள், செவ்விய நிகழ்த்து கலைகள், சங்ககால நிகழ்த்துகலைகள், தொல்காப்பியத்தில் நிகழ்த்துகலை கள், போர் பற்றிய ஆட்டங்கள், தெய்வ வழிபாடு பற்றிய ஆட்டங்கள் பொழுதுபோக்கு பற்றிய கூத்துகள் விளையாடல் பற்றிய ஆட்டங்களைப் பற்றிய செய்திகளை பவ்வேறு உட்தலைப்புகளின் கீழ் இவ்வியலில் ஆராயப்பட்டுள்ளன.
சங்க கால நிகழ்த்துகலைகள்:
சங்க காலச் சமூகத்தில் மக்களின் பொழுதுபோக்கு நிகழ்வாக வாழ்வியல் வழிபாட்டுச் சடங்குகளில் இணைவாக விழாக்களில் பொதுக்கூறாக நிகழ்த்தப்பட்ட கலைகளை தொகுத்து இவ்வியலில் ஆராயப்பட்டுள்ளது. கலை தொழில் முறை சார்ந்த நிகழ்த்து கலைகள், தொழில்முறையல்லாத நிகழ்த்து கலைகள் அகம் சார்ந்த நிகழ்வுகள், புறம் சார்ந்த நிகழ்வுகள், பிரிவுகள், நிகழ்த்துகலைகளான ஆடல், கூத்து, நாட்டியம், நாடகம், இசை, இசை இலக்கண நூல்கள் சங்க இலக்கியத்தில் பதியப் பெற்ற நிகழ்த்துக்கலைகளான துணங்கை, வெறியாட்டு, குரவைக்கூத்து, வள்ளிக்கூத்து, துடிக்கூத்து, வாள அமலைக்கூத்து, கழல்நிலைக்கூத்து. பாவைக்கூத்து, தோளி, கழைக்கூத்து, மல்லாடல், கொடுகொட்டி, பாண்டரங்கம், கபாலக்கூத்து, உரற்கூத்து போன்ற நிகழ்த்து கலைகளின் பொது. பெயர், சிறப்பு, விளக்கங்களை பல்வேறு உட்தலைப்புகளின் கீழ் இவ்வியலில் ஆராயப்பட்டுள்ளன. சங்க கால நிகழ்த்து கலைஞர்கள் :
சங்க கால சமூகத்தில் தொழில் முறையல்லாத நிகழ்த்து கலைஞர்கள், தொழில்முறை நிகழ்த்து கலைஞர்கள் என இருபெரும் பிரிவுகளாகச் செயல்பட்டமையும், இதில் தொழில் முறைகலைஞர்கள் மிதவைச் சமூகமாய் இயங்கிய விதங்கள், அவர்கள் வாழ்க்கை சமூகநிலை குறித்தும் இவ்வியலில் ஆராயப்பட்டுள்ளது. தொழில் முறைக்கலைஞர்களான பாணர், பாடினி, விறலியர், கூத்தர், கோடியர், பொருநர், வயிரியர், கண்ணுளர், துடியர், பறையர், கிணைவன், பாண்மகள், ஆடு மகள், கினைமகள் ஆகியோரைப் பற்றியப் பொதுவான விளக்கங்களும், சொற்பொருள் விளக்கங்களும் அவர்கள் கலைத்திறன், வாழ்க்கை, சமூக அரசியல் எனப் பல உட்தலைப்பு களின் கீழ் சங்க காலச் சமூகத்தில் அவர்கள் பெற்றிருந்த சமூக மதிப்புகள், இயங்கிய விதங்கள் என உட்பகுப்பின்கீழ் இவ்வியலில் ஆராயப்பட்டுள்ளது.
சங்க கால நிகழ்த்து கலைகள் நிகழ் களங்கள், சூழல்கள் பிறவும்:
சங்க கால நிகழ்த்து கலைகள் நிகழ்த்தப்பெற்ற களங்கள். சூழல்கள், அரங்குகள், இசைக்கருவிகள், ஒப்பனைகள் பற்றிய செய்திகள் பல உட்தலைப்புகளின் கீழ் இவ்வியலில் ஆராய்ப் பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் காணப்படும் விழாக்கள் சங்ககால இசைக்கருவிகள், சங்க காலத்தில் நிகழ்த்து கலைகளில் இடம்பெற்ற ஒப்பனைகள் எனும் உட்தலைப்புகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.
சங்க இலக்கிய நிகழ்த்து கலை / கலைஞர்களின் எச்சங்கள்:
சங்க இலக்கியத்தில் காணப்படும் நிகழ்த்துகலை, கலைஞர்களின் இன்றைய தொடர்ச்சி, எச்சம் என்ற நிலைகளின் அடிப்படையில் இக்கலைகளின் பெயர், வடிவம், நிகழ்த்தும் தன்மைகள் அடிப்படையில் ஒப்புமைப்படுத்தி அதில் காணப் படும் ஒற்றுமைகளின் அடிப்படையில் அக்கலைகளின் இன்றைய தொடர்ச்சி, எச்சத்தைக் காணும் விதமாக இத்தலைப்பின் கீழ் ஆராயப்பட்டுள்ளன. அறிமுகம் கலை, வடிவநிகழ்வு, மாற்றங்கள் எச்சங்கள், வழித்தடங்களின் மாற்றம், கலைஞர்கள் பற்றிய விழுமியம், சமணபுத்த சமய காலத்துக் கலைகள் என்ற நிலை யிலும், நாடோடியின மக்கள் கலைகள், கலைஞர்கள், தொல்குடி, பழங்குடி மலையின மக்கள் கலைகள், கலைஞர்கள், மண்சார்ந்த நாட்டுப்புற மக்கள் கலைகள், கலைஞர்கள், செவ்விய நிகழ்த்து கலை கலைஞர்கள் என சங்ககால நிகழ்த்துகலை கலைஞர்களின் தொடர்ச்சியாக இவ்வகைப் பாடுகளில் காணப்படும் ஒற்றுமை கள் வழி ஆராயப்படுகின்றன. மேலும் சங்ககால நிகழ்த்து கலைகளின் கூறுகளை இன்றைய நிகழ்த்து கலைகளில் காணுதல், பண்டைய இசைக்கருவிகளின் தொடர்ச்சி எனும் வகையில் இவ்வியலமைந்துள்ளது.
Reviews
There are no reviews yet.