விடுமுறை நாட்களையெல்லாம் விளையாட்டுகளைத் தேடும் பணிக்காகச் செலவிட்டு, தமிழர் நலம் பேணும் நல்ல நூலைத் தந்துள்ள குமரி ஆதவனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதுவரைக்குமான இவரது நூல்களுள் ஆகச் சிறந்த நூலாக, நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாக, தமிழக கிராமிய விளையாட்டுகள்’ என்ற பண்பாட்டுப் புதையலை தேடிக் கண்டுபிடித்து தமிழரின் சொத்தாகத் தந்துள்ளார்
– பொன்னீலன்
இரண்டு ஆண்டுகள் களப்பணி: நூற்றி முப்பதுக்கும் மேற்பட்ட தமிழகச் சிற்றூர்களுக்குப் பயணம்: திரட்டிய செய்திகளை வாழ்வியல், அறநெறி அறிவுத்திறன், உடற்பயிற்சி, பொழுதுபோக்கு, கலைவடிவு எனப் பகுத்து நூற்றி எழுபத்தொன்று விளையாட்டுகளை ஆசிரியர் ஆவணமாக்கியுள்ளார்.