கிபி. ஏழாம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த முக்கியமான பயணி யுவான் சுவான் ஆவார். இவர் வட மற்றும் தென்னிந்தியாவில் உள்ள பௌத்த அடையாளங்களைக் காணவும், நூல்களைத் திரட்டிச் செல்லவும் வந்ததாகக் கூறப்படுகியது.
தென்னகத்தில் யுவான்சுவாங் பயணம் மேற்கொண்டபோது காஞ்சி வருவதற்கு முன்பு சாளுக்கிய நாட்டை அடைந்தார். அந்நாட்டை ஷத்திரிய வம்சத்தை சேர்ந்த இரண்டாம் புலிகேசி திறம்பட ஆட்சி செய்து வந்தான். அவன் பல்லவர்களின் பரம எதிரி. பல்லவர்கள் தென்னகத்தில் வளரவிடாமல் தங்களின் சாளுக்கியப் பேரரசுக் கனவை தகர்த்தவர்கள் என்று அவர்கள் மீது ஓயாத பகை உணர்வால் அடிக்கடி போர் செய்து வந்துள்ளான்.
சாளுக்கிய நாட்டு மக்கள் தங்கள் நாட்டிற்காக உயிரையே தர அஞ்சாதவர்கள், அந் நாட்டில் வீரமிக்க பல போர் வீரர்கள் இருந்ததாக தனது நூலில் யுவாங் சுவான் குறிப்பிடுகிறார். அந்நாட்டின் தளபதின் போர்களின் போது வெற்றிச் செய்தியைத் தவிர வேறு எதையும் அரசனுக்கு கொண்டுவந்ததில்லை எனவும் குறிப்பிடுகிறார்.
அதற்கு காரணம் என்னவென்றால், எந்த போரிலாவது தோற்று நாடுதிரும்பினால், அந்த தளபதிகளை அவன் சிறைச்சேதம் செய்யவில்லை. மாறாக அவர்களுக்கு “சேலை உடுத்தி, பெண்வேடமிட்டு” அரசவைக்கு வரச் சொல்வானாம், இரண்டாம் புலிகேசி. அது தான் அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையாகும்.
இந்த அவனமானதிற்கு அஞ்சிய தளபதிகள் பலர் தற்கொலை செய்துகொண்டதாக யுவான்சுவாங் குறிப்பிடுகின்றார்.
இப்போது தெரிகிறது, ஏன் ஒரே போரில் சாளுக்கியனும், பல்லவனும் தாங்கள் தான் வெற்றிப் பெற்றதாக இருவருமே அறிவித்துக்கொண்டனர் என்று. ..
நன்றி
ராஜசேகர் பாண்டுரங்கன்