இராஜேந்திரச் சோழன் கால கதைகள் – சிறுகதைப் போட்டி

தளி அறக்கட்டளை மற்றும் ஹெரிட்டேஜர் இதழ் சார்பாக இராஜேந்திரச் சோழன் காலத்தில் நடந்த போர்கள், மக்கள் வாழ்வியல் முறைகள், கல்வெட்டுச் செய்திகள், செப்பேடு செய்திகள், அகழாய்வுகள், சமூக மற்றும் நிர்வாகம் போன்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டு “இராஜேந்திரச் சோழன் கால கதைகள்” என்ற போட்டிக்கு சிறுகதை ஒன்றை எழுதி அனுப்பலாம்.

வரலாற்றுச் சிறுகதைகள் எழுத பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். 20 பேர்கள் மட்டுமே அனுமதி, படிவம் கீழே.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSckCihTng86gAjSpZxSkydUnSf1Eq38a9_FzjIn1dhpu8813A/viewform

சிறுகதைக்கு நிபந்தனைகள்.

  1. கதைக்களம் ராஜேந்திர சோழன் காலத்தில் நடந்த நிகழ்வை, மேற்கண்ட ஆவணங்களில் வரும் செய்தியை ஒட்டி முழு புனைவாக இருக்கலாம்.
  2. கதையின் தலைவன் ராஜேந்திரசோழன் ஆக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆவணச் செய்திகளில் குறிப்பிடப்படும் யாரை வேண்டுமானாலும் மையப்படுத்திக் கதையை எழுதலாம்.
  3. ஆனால் குறைந்தது கதையின் ஏதோ ஒரு பகுதியில் ராஜேந்திர சோழன் பற்றி வரவேண்டும்.
  4. மாயாஜாலங்கள், அதீத கற்பனை உலகில் அமைந்த கதைக்களமாகக் கூட இருக்கலாம்.
  5. முழுக்க முழுக்க புனைவுக் கதையாக இருப்பினும் சோழர் கால சமூக நிர்வாக நிலையைப் பற்றிய வாலாற்று தகவல்களை அறிந்து அதன்படி, கதையை எழுப்பினால் அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  6. கதையின் இறுதியில் “ மூலங்கள்” என்ற தலைப்பில் கதையில் கூறப்பட்ட வரலாற்று தகவல்களை தனி குறிப்பாக இணைத்து எழுத வேண்டும். வரலாற்று தகவல்களைத் தங்கள் கதையில் தேவையான அளவு பயன்படுத்தும் கதை எழுத்தாளருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  7. ராஜேந்திர சோழன் பற்றிய வரலாற்று தகவலுக்காக கீழே உள்ள இணைப்பில் சில புத்தகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதனை ஆதாரமாக வைத்துக்கொண்டு புனைவுக் கதையை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்.
  8. கதை 5 பக்கங்களுக்கு குறைவில்லாமல் 20 பக்கங்கள் மிகாமல் இருக்கவேண்டும்.
  9. சிறுகதைகளை அனுப்பக் கடைசி நாள் 30.07.2020 முதலில் வரும் கதைகளுக்கு, போட்டியில் முன்னுரிமை அளிக்கபடும்
  10. சிறுகதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

Download Books: https://bit.ly/37LQEAq

சிறுகதை எவ்வாறு எழுதவேண்டும் என்பதை கீழ்கண்ட தளத்தில் அறியலாம்.

சிறுகதை எழுதுவது எவ்வாறு?

Leave a Reply