தமிழ்நாட்டின் பெரிய ஆறு என்றால் என்னைப் பொருத்த வரை கொள்ளிடந்தான். காவிரி, வைகை, தாமிரபரணி போன்ற ஆறுகளைப் பக்கம் பக்கமாக பதிவு செய்துள்ள இலக்கியங்கள் ஒற்றை வரியில் கூட கொள்ளிடத்தை நினைவு கூர்ந்ததில்லை.
கொள்ளிடக் கரையில் உள்ள என்னுடைய ஊர் நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதன் சுருக்கமே இந்த நூல். அப்போது எட்டாவதுக்கு மேல் படிப்பதற்கு ஆற்றில் நீச்சலடிக்க வேண்டியிருந்தது. ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த தெய்வசிகாமணி கடந்த 1974 ஆம் ஆண்டில் சொந்த நிலத்தைக் கொடுத்து உயர்நிலைப் பள்ளிக் கொண்டு வந்தார். அனைவரும் படிக்க வாய்ப்புக் கிடைத்தது.
ஆற்றை நடந்தும் நீந்தியும் கடந்துப்போன காலம் முடிந்துவிட்டது. கொள்ளிடத்தில் பாலம் கட்டிவிட்டார்கள். முந்தைய தலைமுறை வரை படகில் நடந்த பயணம் யாருக்கும் நினைவில் இல்லை.
தபால்களுக்காவும் தந்திகளுக்காவும் தபால்காரரை எதிர்பார்த்து நின்றது முடிந்து விட்டது. நலம், நலம் அறிய ஆவல் என்ற சொல் புழக்கத்தில் இல்லை.
நிலம் உள்ளவன் வீட்டு முன் வேலை கேட்டு தொழிலாளி காத்திருந்தான். இப்போது தொழிலாளி இன்றாவது வேலைக்கு வருவானா என்று முதலாளி ஏங்குகிறான்.
முன்பு வயதுக்கு வந்தப் பிறகு பெண்களை பள்ளிக்கு அனுப்பமாட்டாகள். இப்போது எல்லா வீட்டுப் பெண்களும் பட்டதாரிகளாக உள்ளனர். பெண் தனியாகப் பயணம் செய்யக்கூடியவளாக மாறி இருக்கிறாள்.
இரண்டு ஆயிரம் ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் கிடந்த கிராமங்களை அறிவியல் கண்டுபிடிப்புகளும் அரசின் முனைப்புகளும் மாற்றி விட்டன. நகரத்துக்கும் கிராமத்துக்கும் வேற்றுமைகள் குறைந்து உள்ளன.
காலரா போன்ற தொற்று நோய்களால் பல குடும்பங்கள் முற்றிலுமாக அழிந்த கதை உண்டு. இப்போது தொற்று நோய் இல்லை. ஆனால் புதுப் புது நோய்கள் தோன்றி பாடாய் படுத்துகிறது. முன்பு மரம் ஏறும் போது தவறி விழுந்து இறந்துப் போவான். இப்போது மோட்டார் சைக்கிள் விபத்தில் இறக்கும் செய்தியை அடிக்கடி கேட்க முடிகிறது.
எங்கள் ஊரில் தண்ணீர் கண்ட இடமெல்லாம் மீன்களைப் பார்க்க முடிந்தது.இப்போது அது இல்லை. கொள்ளிடத்தில் வைகாசி. ஆனியில் கிடைத்த ‘உள்ள மீன்’ என்பது தனிச்சுவை கொண்டது.அது அழிந்துவிட்டது. அறுபது வயதை கடந்துவிட்டவர்களுக்கு உள்ள மீன் பற்றி தெரியவில்லை.
தோட்டங்களில் உலவிக்கொண்டிருந்த கானாங்கோழி, கவுதாரி, கீரிப்பிள்ளை, காட்டுப்பூனை, மர மரநாய் போன்றவை அரிதாகிவிட்டன. மரங்கொத்தி பறவைகள், கிளிகள், சிட்டுக்குருவிகள் எங்கே போனது என்று தெரியவில்லை.
விவசாயத்தில் நட்டக்கணக்கு தொடர்ந்தபடி இருக்கிறது. நிலத்தை மட்டுமே நம்பி இருந்த குடும்பங்களின் பொருளாதாரத்தில் ஏற்றமிலலை. நிலத்தையும் விவசாயத்தையும் புறந்தள்ளி விட்டு புத்தகப் பை சுமந்தவர்களின் வாழ்க்கை மேம்பட்டு இருக்கிறது.
பள்ளிக் கூடப் படிப்புக்கு வெளியே கதைப் புத்தகங்கள், நாவல்கள்படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பொங்கிய காலம் அது. ஆனால் படிப்பதற்கு புத்தகங்கள் கிடைக்காது. அவற்றைத் தேடி பல மைல் அலைந்தது உண்டு.
நான் பிறந்த ஊர் சிறு வயதில் எப்படி இருந்தது என்பதை பதிவு செய்துள்ளேன்.
இந்தக் கதையில் ஒரு சில நிகழ்வுகளைத் தவிர மற்றவை நான் அனுபவித்தது, பார்த்தது, அல்லது கேட்டது. நிறைய தகவல்களை நூலுக்குள் கொண்டு வரமுடியவில்லை. விட்டுப் போன மனிதர்களையும் நிகழ்வுகளையும் இன்னொரு நூலில் சந்திக்கலாம்.
கொள்ளிடம் – ராஜா வாசுதேவன்
விலை: 360/-
Buy this book online: https://www.heritager.in/product/kollidam/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers