To Buy: https://heritager.in/shop/thamizhaga-nattuppura-kattadakkalai-marabu/
சங்க கால இலக்கியங்களில் கூரை ஓடு பற்றி ஓரிடத்தில் கூடக் குறிக்கப்படவில்லை. “புல் வேய்ந்த கூரைகள்”, “வேயா மாடங்கள்” பற்றிப் பல செய்திகள் அக்காலப் புலவர்களால் கட்டப்பட்டுள்ள நிலையில் ஓடு பற்றிய செய்தியைக் கூறவில்லை.
இலக்கியத்தில் “ஓடு” என்னும் சொல்லாட்சி இடம்பெறவில்லை என்பதால் ஓடுகளே அக்காலத்தில் இல்லை எனக் கூறும் முடிவிற்கு வர இயலுமா? ஆம் என்றால் சான்றுகள் உண்டா? எனும் இக்கட்டான ஆய்வுச்சூழல் ஏற்படுகின்றது.
சங்க காலப் புலவர்கள் அனைவரும் ஒரே ஊரையோ, நாட்டையோ, சுற்றுப்புறச் சூழலுடைய பண்பாட்டையோ கொண்டவரில்லை. பழந்தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்திருக்கக் கூடிய ஓடு வேய்ந்த வீடுகளைக் கூறிச் சென்றிருக்கலாம். ஆனால் அப்படிப் பெற்ற குறிப்புகள் எதுவும் இல்லை.
தமிழகத்தில் பல்வேறிடங்களில் பல்வேறு காலத்திற்குரி தொல்லியல் ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளனர். இவற்றில் கடைச்சங்க காலத்திற்குப் பின்னர்க் கி.பி மூன்று. நான்கு நூற்றாண்டு காலத்திற்குரிய அகழாய்வு இடங்களில் கூரை ஓடுகள் கிடைத்துள்ளள” இவை உட்குழிவான வளைந்த ஓடுகளாகவும் இல்லை. ஆறு அங்குல நீளமும், இரண்டு அங்குல அகலமும் கொண்ட நீள்சதுர வடிவமாகவும், எடை குறைந்த தட்டையான தோற்றத்தையும் பெற்றுள்ளன.
இதே வடிவமைப்புடைய நீள்தட்டைச் சதுர வடிவத்துடன், சிறிய மேற்புற வளைவுடன் கூடிய கூரை ஓடுகள் வல்லம் கோட்டை அகழாய்வில் எ. சுப்பராயலு அவர்களது அகழாய்வில் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளது. இவ்வகைக் கூரை ஓடுகள் “L” வடிவக் கூரை ஓடுகள் என்றழைக்கப் படுகின்றன. கி.பி.45 ஆம் நூற்றாண்டிற்குப் பின் இவ்வகை ஓடுகள் பல்வேறு இடங்களிலும் கிடைக்கின்றன. எனவே, கூரை ஓடுகளில் பயன்பாடு தமிழகத்தில் கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் அறிமுகப் படுத்தப்பட்டிருந்திருக்கக்கூடும் எனக் கருதலாம். தமிழகத் தொல்லியல் ஆய்வின் முன்னோடி ராபர்ட் புரூஸ்பூட்டின் கூரை ஓடு பற்றிய கருத்து வருமாறு
“மண்ணினால் செய்யப்பட்ட கூரையோட்டைத் தாங்கிய வீடுகளைப் புதிய கற்கால மக்கள் கட்டியதாகத் தெரியவில்லை. மட்கலத்துண்டுகள் நிறைய கிடைத்தும் நான் ஒருபோதும் கூரை ஓட்டுத் துண்களைக் கண்டெடுக்கவில்லை. புதிய கற்காலத்திலும் சரி, இரும்புக் காலத்தி லும் சரி, புல்கூரையிலான குடிசைகள் கட்டுவதுதான் வழக்கமாக இருந்திருக்க வேண்டும்”
இக்கூற்றும் சங்க காலக் கட்டடக்கலை ஆய்வின் முடிவும் ஒன்றாக உள்ளன. ஏனெனில் சங்க காலம் என்பது இரும்புக் காலத்துடன் தொடர்புடையது. எனவே, சங்க கால இலக்கியங்களில் கூரை ஓடுகள் பற்றிய குறிப்புகள் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
பழந்தமிழரின் கட்டடக்கலை வரலாற்றை அறிய உதவும் சிறப்பான சான்றுகளில் மற்றொன்று தொல்லியல் சான்றுகளாகும்.
பண்டைய கட்டுமானங்களைப் பற்றி கீழ்க்கண்ட நூலில் விரிவாக கூறப்பட்டுள்ளது.
மூலம்: தமிழக நாட்டுப்புறக் கட்டடக்கலை
ஆசிரியர்: இராசு. பவுன்துரை
விலை: 200+50 Shipping
புத்தக உள்ளடக்கம்
- அறிமுகம்
- மனித இயக்கமும் சுற்றுச் சூழலும்
- வீடு, வெளி, காலம்
- வீட்டமைவும் மரபும்
5.தொல் பழங்காலக் கட்டடக்கலை - சங்க காலக் குரம்பைகளும் கூரை வீடுகளும்
- சங்க கால மனைகளும் வடிவமைப்பும்
- தமிழக மலையக மக்களும் வீடுகளும்
- தமிழக சமவெளி மக்களும் வீடுகளும்
10.வீடுகளும் கட்டுமான வடிவங்களும் - வீடு:பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்
எண் குறிப்புகள்
துணை நூற்பட்டியல்
விலை: Rs. 200
To Buy: https://heritager.in/shop/thamizhaga-nattuppura-kattadakkalai-marabu/
Whatsapp Order: https://wa.me/919786068908
Phone Order: +91 9786068908