தமிழ் கிறிஸ்தவத்தில் சமஸ்கிருத மந்திரங்கள்
ஐரோப்பிய பண்பாட்டு மயப்படுத்தப்பட்ட கத்தோலிக்கம் ஈழத்தில் பரப்பப்பட்ட போது ஈழக் கிறிஸ்தவர்கள் தங்கள் பாரம்பரிய பண்பாட்டுக் கூறுகளினின்று முற்றாக அந்நியமயப்படுத்தப்படவில்லை. ”கிறிஸ்தவம் தன்னை ஒரு அந்நிய மதமாக வைத்துக் கொள்ள விரும்பாமல் தமிழுடன் இணைத்து கொள்ளவே விரும்பிற்று. முஸ்லிம்கள் செய்தது போன்று அறபுத்தமிழ் என்ற தற்காப்பு முறை எதையும் வைத்துக் கொள்ளாமல் நேரடியாகப் பயன்படுத்தும் முறையில் இறங்கினார்” (சிவத்தம்பி. 2001: 16). போர்த்துக்கேயர் காலத்தில் மதம் மாறிய ஈழத் தமிழ்க் கிறிஸ்தவர்கள் பிற்பட்ட காலங்களில் தமிழர்களுடைய கலாசார பண்பாட்டு அம்சங்களைத் தொடர்ந்தும் பேணினர். குறிப்பாகத் தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களுடன் ஈழத்துக் கிறிஸ்தவர்களை ஒப்பிடுமிடத்து ஈழத்துத் தமிழ்க் கிறிஸ்தவர்கள் அதிகளவு ஒதுங்குநிலைப் போக்குகளைக் கடைப் பிடிப்பதில்லை எனலாம். மொழி வழிப்பண்பாட்டு உணர்வும், மொழி வழித் தேசிய உணர்வும் ஈழத்துத் தமிழ்க் கிறிஸ்தவர்கள் மத்தியில் அதிகளவு வேரூன்றியிருப்பதே இதற்கான பிரதான காரணமாகும்.
சமயமும் மொழியும் பண்பாட்டின் இரு வேறு கூறுகள் என்ற வகையில், கிறிஸ்தவர்களாகத் தமிழர்கள் மதம் மாறிய போதும் தாம் முன்னர் பேணிவந்த வாழ்வியல் அம்சங்களைத் தொடர்ந்தும் பேணலாயினர். பிறப்பு, இறப்பு, பூப்பெய்தல் சடங்கு, திருமணம் உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகளில் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகள் சிறிய அளவிலான மாற்றங்களுடன் பின்பற்றப்பட்டன. உதாரணமாக, ஈழத்தில் கத்தோலிக்கர் திருமணத்தின் போது கூறைச்சேலை அணிதல், தாலி கட்டுதல் குங்குமம் வைத்தல், நிறைகுடம் வைத்தல், ஆராத்தி எடுத்தல், மாலை அணிவித்தல் ஆகிய விடயங்களை இன்றும் இறுக்கமாகப் பின்பற்றி வருவதைக் காணலாம்.
திருமணம் உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகளில் தமிழர் மத்தியில் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகள் சிறிய அளவிலான மாற்றங்களுடன் கத்தோலிக்கத் திருமணங்களிலும் பின்பற்றப்பட்டு வருகின்றன. கத்தோலிக்கத் திருமணங்களில் கிறிஸ்தவத் திருமண உடையான வெள்ளை நிற உடை, தேவாலயச் சடங்கு வேளையில் அணியப்படுகின்ற அதே வேளை, சடங்கு முடிந்ததும் தமிழ்ப்பண்பாட்டின் அடையாளமாகத் கருதப்படும், சிவப்பு நிறக் கூறைச்சேலை மணப் பெண்ணால் அணியப்படு கின்றது.அதுபோல திருமணத்தின் போது மோதிரம் மாற்றிக் கொள்ளுதல் என்பது மேற்கத்தேயப் பண்பாட்டையொட்டிய கிறிஸ்தவத் திருமண நடைமுறையாகும். தமிழ்ப் பண்பாட்டில் தாலி கட்டுதல் என்பது முக்கிய மானது. மஞ்சள் கயிற்றில் பிள்ளையார், அம்மன் அல்லது தமது குல வழக்கத்தின் படியான தங்கச் தாலியையோ மஞ்சள் துண்டு ஒன்றையோ கயிற்றில் கோர்த்து மூன்று முடிச்சிட்டுத் தாலிகட்டுவர். ஈழத்தில் மஞ்சள் கயிற்றில் மூன்றுமுடிச்சிட்டுக் கட்டும் வழக்கத்திற்கு பதிலாகத் தங்கத்திலான கொடியை அணிகின்ற வழக்கமே வழக்கிலிருக்கின்றது. ஈழத்தில் கத்தோலிக்க திருமணத்தின் போதும் தற்காலத்தில் தங்கத்திலான தாலிக் கொடி அணிகின்ற வழக்கமே பின்பற்றப்படுகின்றது. பிள்ளையார். அம்மன் தாலிச் சரடுகளுக்குப் பதிலாக புறா, சிலுவை உள்ளிட்ட கிறிஸ் தவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குறிகளை இவர்கள் தமது தாலிகளாக
தமிழர் பண்பாட்டை ஒட்டிய சடங்குகளேயாகும். இவ் அம்சங்களை இன்றும் கத்தோலிக்கர் ஈழத்தில் இறுக்கமாகப் பின்பற்றி வருவதைக் காணலாம்.
பிறப்புச் சடங்குகள்
தமிழ்க் கிறிஸ்தவர்களின் குழந்தைப் பிறப்பின் போதான சடங்குகளிலும் தமிழ்ப் பண்பாடு பிரதிபலிக்கப்படுகின்றது. குறிப்பாகக் குழந்தை பிறந்து முப்பத்தோராம் நாள் குழந்தைக்குத் தூய்மைச் சடங்குகள் செய்வது தமிழர் மரபு. அதன் போது குழந்தைக்கு முடி எடுத்துத் துடக்குக் கழித்து விருந்தளிப்பது தமிழர் மரபு. அதன் தொடர்ச்சியாகக் குழந்தைக்கு காப்புக் கயிறு, அரைஞாண் கயிறு என்பனவற்றைக் கட்டுவதுடன் குழந்தையைத் தொட்டிலிடும் நிகழ்வும் நடைபெறும். கத்தோலிக்கத் தமிழர்களிடத்திலும் குழந்தை பிறந்த 31ஆம் நாள் துடக்குக் கழிக்கும் சடங்கு நடைமுறை யிலுள்ளது. அந்ந நாளில் குழந்தைக்கு மொட்டையடித்து துடக்குக் கழித்து உற்றார் உறவினர் நண்பர்களை அழைத்து விருந்தளிப்பர். இந்துசமய மதகுரு வந்து துடக்குக் கழிப்பதற்குப் பதில் கிறிஸ்தவ குருவானவர் வந்து குழந்தையை ஆசீர்வதித்துச் செல்வார். காப்புக்கயிறு, அரைஞாண் என்பவற்றைக் கட்டித் தொட்டிலிடும் வழக்கமும் கத்தோலிக்கரிடத்தில் காணப்படுகின்றது. இக் காப்புக்கயிறும் தமிழ் மரபுக்கேற்ப முத்து, மணி, பாசி, வச்சிரம் என்பவற்றால் அமைக்கப்படுவதுடன் குழந்தையின் தாய்மாமனால் தாய்மாமன் அல்லாத விடத்தில் பூட்டனால் இச்சடங்கு நடாத்தப்படுகின்றது. பிறந்த குழந்தையின் ஜாதகத்தைக் கணிக்கின்ற பழக்கமும் தற்காலத்தில் கத்தோலிக்கரிடத்தில் பரவலாக ஏற்பட்டுக்கொண்டு வருகின்றது.
பூப்பெய்தல் சடங்கு
பெண் குழந்தைகள் பருவமடைதலின் போதும் தமிழ் பண்பாட்டுடன் ஒட்டிய சடங்கு முறைகளே பின்பற்றப்பட்டு வருகின்றன. பருவமடைந்த அன்று குப்பைத்தண்ணீர் வார்த்தல் என்னும் பெயரில் குப்பையின் மேல் அமரச் செய்து நீராட்டல், அவள் உடுத்திய உடையைச் சலவைத் தொழி லாளிக்கு வழங்கல், குறிப்பிட்ட காலப்பகுதிக்கு வீட்டிலேயே மறைவாகப் அப்பெண்ணை இருத்தி வைத்து உடலுக்கு வலுவைத் தரும் முட்டை, நல்லெண்ணெய், களி உள்ளிட்ட உணவு வகைகளைக் கொடுத்தல், அதன் முடிவில் சாமர்த்திய வைபவம் நடத்தல் என்பன ஈழத்தில் கிறிஸ்தவரிடம் உண்டு.(நூலிலிருந்து)
ஈழத்துத் தமிழ்த் கிறிஸ்தவ இலக்கியம் – ஹறோசனா, ஜெ
விலை: 170/-
வெளியீடு: குமரன் புத்தக இல்லம்
Buy this book online: https://www.heritager.in/product/eezhaththu-thamizhh-kiristhava-ilakkiyam/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers