திருநெல்வேலி சாணார்கள்
திருநெல்வேலி சாணார்கள்
திருநெல்வேலி மிசன் பற்றிய வரலாறு அதன் பொருளாதார நிலை.வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் போன்றவற்றை உள்ளடக்கிய தகவல்களுடன் கூடிய அறிக்கைகள் அவ்வப்போது நமக்குக் கிடைத்து வருகின்றன. ஆனால் அவ்வறிக்கைகள் ஒருபுறம் இருந்த போதிலும் இங்கிலாந்தில் இருப்பவர்கள் இப்பிராந்தியத்தில் நடைபெற்றுவரும் மிசனரி ஊழியத்தின் தன்மை. அது எதிர்கொள்ளும் அளப்பரிய இடர்ப்பாடுகள் அவற்றால் உருவான விளைவுகளுக்கு ஏற்ற மதிப்பீடுகளை, புறச்சமயத்தாரின் நிலைமை மற்றும் குணாம்சங்கள் போன்றவை குறித்த குறிப்பிடத்தகும் தகவல்கள் பற்றித் தெரியாமல் பெறுவது மிகமிகக் கடினம்.
புறச்சமயத்தார் பல சாதிகளாகவும் வகுப்புகளாகவும் பிரிந்து இருக்கிற நிலையில் அவர்கள் மத்தியில் மதம் மாறியவர்களில் பெரும்பான்மையானவர்கள் பூர்விகக் குடிகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் மீது நமக்குச் செல்வாக்கு இருக்கிறது. அவர்களின் சமூக நிலையையும் அறிவுக் கூறுகளையும் பார்க்கையில் இதுநாள் வரை அவை அவர்களின் சமூக ஒழுங்கிற்கும் முன்னேற்ற வாய்ப்புகளுக்கும் தடையாகவே இருந்து வந்திருக்கின்றன. அவற்றை உள்ளடக்கிய புறச்சாதியாரின் சமயம் மற்றும் வாழ்வியல் நெறிமுறைகளைப்பற்றிய சுருக்கமான பார்வையானது மிசனரி ஊழியத்தின் போக்கில் எழும் தெளிவான கருத்தியலை உருவாக்கவும் அவ்வூழியத்தின் மீது உண்மையான ஆர்வத்தை தூண்ட ஏதுவாகவும் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
எந்தவொரு மக்களின் சமயம் அல்லது சமூக நிலைப்பாடு குறித்து விளக்க முயலுகிற போதும் அவர்கள் யார், எவ்வாறு இருக்கிறார்கள். ஏனைய வகுப்பாரோடு ஒப்பிடுகையில் அவர்களின் நிலைமை என்னவாக இருக்கிறது என்பவை நம்மைப்பொறுத்த அளவில் அடிப்படையாக அமைகின்றன. திருநெல்வேலிக்கு தெற்கே இருக்கும் தமிழ்ச் சாதிகளில் நம் கிராம சபைகளில் உறுப்பினர்களாக இருப்பவரே எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள். மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் அவர்கள் பெரும்பான்மையினராக இருக்கக் கூடும்.
கிறிஸ்தவர்களில் அநேக வகுப்புகளாக இருப்பவர்கள் துணைச் சாதிகளாகவும் (sub castes) கிளைச் சாதிகளாகவும் (off-shoots) இருக்கும் சாணார்களே. அடுத்து பறையர்களும் பள்ளர்களும் உள்ளனர். அவர்கள் நிலவுடமை வர்க்கத்தாருக்குப்பரம்பரை அடிமைகள். இவ்வரிசையில் வருபவர்கள் முறையே மறவர்கள், குறைந்த எண்ணிக்கையினரான வெள்ளாளர்கள், நாயக்கர்கள், ரெட்டிகள் மற்றும் ஏனைய உயர்சாதிகள் ஆவார். மிசனரி ஊழியங்கள் நடைபெறும் மாவட்டங்களின் மொத்த மக்கள் தொகையில் முகமதியர்களைத் தவிர்த்துப்பார்த்தால் சுற்றுப்புறங்களில் வாழும் உள்ளூர் கிறிஸ்துவர்களே எண்ணிக்கையின் அடிப்படையில் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். புறச்சமயத்தவர் மிகுதியாக வாழும் நாட்டில் நான் குறிப்பிட்டுள்ளபடி உள்ளூர்க் கிறிஸ்தவர்கள் ஏனைய வகுப்பாரின் குணாம்சங்களையே பெற்றிருப்பதானது அவர்களின் வாழ்க்கை நிலையை வெளிச்சமிட்டுக் காட்டுவதாக அமைகிறது.
திருநெல்வேலியின் தென்கிழக்குப்பகுதியில் பிற சமயத்தாரிடையே வாழும் சாணார்கள் பலவகைப்பட்ட வகுப்புகளாக அறியப்படுவதாலும் அவர்கள் மிசனோடு தொடர்பு வைத்துள்ள மிகப்பெரிய அமைப்பாக இருப்பதாலும் வேறு வகுப்பினரைக் காட்டிலும் அத்தகு அமைப்பிற்கான நடத்தை மற்றும் நம்பிக்கையுடன் கூடிய தனித்த பண்புகளைக் கொண்டிருப்பதாலும் அவை இப்பகுதியில் வாழும் மக்களின் பொதுப்பண்பாக உணரப்படுவதாலும் சாணர்கள் பொதுவாக வட கர்நாடகம் மற்றும் திருநெல்வேலிக்கு வடக்கு மாவட்டங்களில் வாழ்வோரை விட மிகவும் வேறு பட்டிருக்கிறார்கள். அதனால் என்னுடைய குறிப்புகள் எல்லாம் சாணார்களைப்பற்றியதாகவே இருக்கும். சிலநேரங்களில் சுற்றி வளைத்துப்பேசுவதைத் தவிர்ப்பதற்காக கீழ்ச்சாதியினர் அனைவரையும் அவர்களுக்கான முதன்மைப்பெயர்களாலேயே குறிப்பிடுகிறேன். இங்கு சாணார்கள் வெள்ளாளர்களுக்கும் அவர்களுக்கு அடிமைகளாக இருக்கும் பறையர்களுக்கும் இடைப்பட்ட சாதியினராகவே இருக்கிறார்கள்.
அவர்களின் பரம்பரைத் தொழில் விவசாயமும் பனைமரம் ஏறுதலுமாகும். பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் கள் இந்து வழக்கப்படி ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களுக்கானதேயாகும். அதே சமயம் விவசாயமும் வர்த்தகமும் அனைவருக்கும் பொதுவானதாகவே இருந்தன. சாணார்கள் தங்கள் இனத்தாருக்கு ஒதுக்கப்பட்டிருந்த கடினமான களைப்பினைத் தரக் கூடிய வேலைகளைச் செய்தனர். ஆனால் அவர்களில் குறிப்பிடத்தக்க சிலர் சிறுவிவசாயிகளாகவும் உழுதொழில் செய்வோரை தம்மிடத்தே அமர்த்திக் கொள்ளும் அளவிற்குப்பெரிய நில உடமையாளர்களாகவும் அல்லது வர்த்தகத்தில் ஈடுபடுவர்களாகவும் இருந்தனர்.
அவர்கள் கீழ்ச்சாதியினரை விட உயர்ந்தவர்களாகவும் இடைப்பட்ட சாதியினரை விடக் கீழானவர்களாவும்; இருந்தார்கள். அவர்கள் ஏழைகள். ஆனால் வெறுங்கையர் இல்லை, முரடர்கள், செல்வாக்கு இல்லாதவர்கள். ஆனால் காட்டு மிராண்டிகள் இல்லை. வரலாற்று அறிக்கைகளும் நினைவுச் சின்னங்களும் இல்லாத நிலையில் அவர்களின் பூர்வீகம் மற்றும் சாதி வரலாறு போன்றவற்றினை அறிவதற்குப்போதிய தகவல்கள் பெறுவது கடினம். தெரிந்த தகவல்கள் எல்லாம் செவிவழிச் செய்திகள் தான். சாணார்கள் சிலோனின் வடக்குக் கடற்கரை வழியே இங்கே குடியேறிவர்கள் என்பதற்கான மரபுவழிச் சான் றாதாரத்தைப்பார்த்திருக்கிறேன். சாணார்கள் அல்லது அவர்களைப்போன்ற இலக்கண சுத்தமான, தெளிவான ‘சான்றோர்’ என்னும் பெயரில் இன்றைக்கும் ஒரு சாதி இருக்கிறது. சான்றோரிலிருந்தே சாணார் என்னும் சொல் பிறந்திருக்கலாம்.
திருவனந்தபுரத்தில் தென்னை விவசாயம் செய்கிறவர்களான ஈழவர்கள் மற்றும் தீயர்கள் (அதாவது சிங்களர் மற்றும் தீவுக்காரர்கள்) போன்றோர் சிலோனில் சான்றோர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் வழித் தோன்றல்களே ஆவார் என்பதை உறுதியாக ஏற்றுக் கொள்ளலாம். அவர்கள் அனைவருக்கும் பொதுவான பூர்வீகம் ஒன்று இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. ‘சாணார்’; என்பது திருவாங்கூர் ஈழவர்களிடையே இன்றும் வழங்கிவரும் விருதுப்பெயர் என்பது அறியத் தக்கதாகும்.
நான் குறிப்பிட்டபடி மரபு வழியில் பார்த்தோமானால் திருநெல்வேலியில் வாழ்ந்துவரும் சாணார்கள் சிலோனில் யாழ்ப்பாணத்திற்கு அணுக்கமாய் இருக்கும் பகுதிகளில் இருந்தவர்களாக இருக்கலாம். அவர்களில் ஒரு வகுப்பினர் தற்போது ‘நாடான்கள்’ (மண்ணின் சொந்தக்காரர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் இராமநாதபுரம் வழியே திருநெல்வேலிக்கு வந்தார்கள், அவ்வாறு வரும் போது கீழ்த்திசை நாடுகளிலிலே சிறந்ததாகக் கருதப்படும் யாழப்பாணப்பனைமரத்தின் விதைகளைக் கொண்டு வந்தார்கள், அவற்றை பாண்டிய இளவரசனிடம் கேட்டுப்பெற்ற அல்லது தாங்களாகவே ஆக்கிரமித்துக் கொண்ட திருநெல்வேலியின் தென் கிழக்கில் உள்ள மாரநாடு என்னும் பகுதியில் அதாவது (பனை விவசாயத்திற்கு மிகவும் பொருத்தமான பகுதி) மணல் சார் பாழ்நிலத்தில் விதைத்து விவசாயம் செய்தார்கள். தற்போது அப்பகுதிக்கு அவர்கள் முன்னுரிமை கொண்டாடுகிறார்கள். யாழ்ப்பாணத்தை விட்டுக் கடல் வழியாக வெளியேறி திருவாங்கூரின் தென்பகுதியில் குடியேறிய பிறிதொரு சாரார் கீழ்ச்சாதியாகக் கருதப்பட்டு இன்றும் அப்பகுதியில் வாழ்கிறார்கள். அங்கே அவர்களுக்கு கொஞ்சம் நிலம் இருந்தது. அவர்கள் படிப்படியாகத் திருநெல்வேலிக்கு இடம் பெயர்ந்தார்கள். திருநெல்வேலியில் நாடான்களும் ஏனைய நிலவுடமையாளர்களும். தங்களிடம் ஏராளமாக இருக்கும் பனந்தோப்புகளில் வேலை செய்வதற்குத் தொழிலாளிகள் தேவை என்று கருதிய நிலையில் அழைப்பு விடுக்கவே அவர்கள் இடம் பெயர்ந்தார்கள். அண்டையராக இருந்த அந்த மரமேறும் ஏழைத் தொழிலாளர்களின் உழைப்பின்றி நிலவுடமையாளர்கள் தங்களின் பரந்துபட்ட பனந்தோப்புகளில் இருந்து சிறிதளவு வருமானத்தையும் பெற்றிருக்க முடியாது. இப்படிப்பட்ட குடியேற்றங்களில் சில கிறிஸ்து பிறப்புக் காலத்தில் இருந்து தொடங்கி இருக்க வேண்டும்.
திருவனந்தபுரம் வாழ் சிரியன் கிறிஸ்தவர்களின் முன்னோர்கள் தங்கள் நிலங்களில் தென்னை விவசாயம் செய்வதற்காக பழங்குடிகளில் ஒரு பகுதியினரான ஈழவர்களை சிலோனிலிருந்து கொண்டு வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. தெளிவான பொருளில் சொன்னால் சாணார் இனம் சிங்கள இனத்தோடு தொடர்புடையது என்று சொல்லுவதற்கு மரபுவழிச் சான்றுகள் இருக்கின்றன என்று கருத முடியாது. புத்த சிங்கள மரபுகளோ அவர்களைத் தேசம் மற்றும் சமய அடிப்படையில் பேபரோடும் (Bebar) அதனைத் தொடர்ந்து பிராமணக்குடிகளோடும் தொடர்பு படுத்துவதாகத் தெரிகிறது. இக்கருத்திற்கு நேர்மாறாக சாணர்கள் சிலோனில் இருந்து புலம்பெயர்ந்து வந்து இங்கு குடியேறி இருந்தாலும் தம்மளவில் பிராமணிய மரபு வழிப்படாத தமிழர் அல்லது பூர்வீகக் குடிகளான இந்துக்களே ஆவர். சிலோனின் வடக்குக் கடற்கரையில் வாழ்ந்த தமிழர்கள் அல்லது அவர்களின் வழித் தோன்றல்களாகக் கருதப்படும் இவர்கள் பண்டையத் தமிழர் குடியேற்றத்தின் வழிப்பட்டவர்களாகவோ அல்லது கிறிஸ்து பிறப்பிற்கு முன்னும் பின்னும் சோழர்கள் அடிக்கடி நடத்திய கொள்ளைகளைத் தொடர்ந்து ஏற்பட்ட தீடீர்த்திடீர் அத்துமீறல்களை நடத்தியவர்களாகவோ இருக்கிறார்கள்.
சிலோனைப்பூர்வீகமாகக் கொண்ட சாணார்களை தங்களின் முன்னோர்களாகக் கொண்டவர்கள் அந்த சாதியில் தோன்றிய ஏனைய கிளையினரைக் (off-shoots) காட்டிலும் சமூகத் தளத்தில் மரியாதைக்குரியவர்களாக வாழ்கிறார்கள். அவர்கள் உயர்சாதி மக்களிடையே வாழ்ந்து வரும் நெருக்கத்தினால் குறிப்பிட்டுச் சொல்லத் தகும் பண்பாட்டில் வளர்ந்திருக்கிறார்கள். பல தரப்பட்ட குடியிருப்புகளில் திருநெல்வேலி சாணார்களே மிகுதியாக இருக்கிறார்கள் ஏனைய வகுப்பாரோடு உறவுகள் வைத்துக் கொள்கிறார்கள், அதுவே அவர்கள் தங்களின் பழைய நிலைமையைக் காப்பாற்றிக் கொள்ளவும் தாங்கள் பிரிந்து சிதறுண்டு போனதற்கும் முன்னால்.இருந்த குடும்பம் முழுவதற்குமான சமய சமூக தகுதியை பிரதிநிதித்துவப்படுத்துவதைச் சாத்தியமாக்குகிறது.
சாணார்கள் மற்றும் திருநெல்வேலியில் அவர்கள் தொடர்பு வைத்துள்ள அல்லது செல்வாக்குச் செலுத்துகிற ஏனைய தாழ்ந்த சாதிகளின் சமய நம்பிக்கைகள்; மரபுவழி ஒழுக்கங்கள் முதலியவற்றை விவரிக்கும் போது விழிப்புணர்ச்சியற்ற எல்லா மனிதர்களோடும் சாணர்களையும் பறையர்களையும் ஒருசேர வைத்துக் காணும் பாரபட்சமோ சார்புணர்ச்சியோ நடைமுறையோ என்னிடம் இல்லை இயல்பாகவே அவர்கள் கோபத்தின் குழந்தைகள், தீங்கை நேசிப்பதையும், உணர்ச்சி வசப்படுவதையும் தங்களின் பலமாகவும் கொள்கையாகவும் வைத்திருப்பவர்கள். அத்தகு பலவீனத்தால் நல்லதை வெறுத்தல் போன்ற பழுதுடைய குணமுடையவர்களாக இருக்கிறார்கள்.
இங்கோ அல்லது வேறு நாடுகளிலோ வாழும் வகுப்பாரிடமிருந்து வேறுபடும் இவர்களின் சமயம் மற்றும் மரபு வழிப்பட்ட ஒழுக்கம் பற்றிய குறிப்புகள் மீதான எனது பார்வைகளை நான் கட்டுப்படுத்திக் கொள்கிறேன். பொதுவாக ‘வழிதவறிப்போன ஆடுகள், தம் வழியில் அவை திரும்பி வரும்’ என்று சொல்வதுண்டு. அப்படித்தான் எல்லோரும் இந்த மாகாணத்தில் நிலவும் பழமொழி குறித்த விசித்திரமான பண்புகளை பரிசீலனை செய்கிறபோது சில சாதகங்கள் கிடைக்கலாம். ஆர்வங்கள் பிறக்கலாம்.
திருநெல்வேலி சாணார்கள் – ஆர். கால்டுவெல்
₹200
இந்நூலினை எப்படி வாங்குவது?
1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம். இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.
எங்கள் முயற்சியில் எவ்வாறு நீங்களும் பங்கெடுக்கலாம்?:
1. எங்கள் நூல் அறிமுக பதிவுகளைப் பகிர்ந்து பலரை சென்றடைய உதவுங்கள்.
2. எங்கள் சமூக வலைத்தள பக்கங்களை Subscribe செய்யுங்கள்
3. உங்களுக்கு தேவையா நூல்களை எங்கள் மூலம் பெறுங்கள்.
4. வரலாற்றில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு எங்களின் Heritager .in The Cultural Store பற்றி தெரிவியுங்கள்.
5. பிறந்தநாள், திருமண நாள் போன்ற முக்கிய நாட்களில் எங்கள் மூலம் உங்கள் நண்பர்களுக்கு நூல்களை பரிசாக அனுப்புங்கள்.
உங்களின் தொடர் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றிகள்