களப்பிரர்தான் முத்தரையர் என்பதற்குச் சில சான்றுகள்

களப்பிரர்தான் முத்தரையர் என்பதற்குச் சில சான்றுகள்

1.கூரம் செப்பேடு, “முதலாம் நரசிம்மவர்மன் சேர, சோழ பாண்டிய,களப்பிரருடன் போரிட்டான்.” என்று கூறகிறது. இங்கே களப்பிரர் என்போர் தமிழ்முத்தரையரும், வானவக்கோரையரசரும் தான் 2. இலங்கையை நோக்கி படைஎடுத்துப் போன சோழர்ப் படை களப்பிரர் படையே! கி.பி. 480இல் தமிழகத்தை ஆண்டவர் களப்பிரர்களே ஆவார். 3. “கோவிசைய நரைசிங்க பருமற்கு யாண்டேழ்வது மேற்கோவலூர் மேல்வாணகோ முத்தரசர்நாடு பாவிதஞ் சிற்றப்படிகளை பொன்மாந்தனார் மேற்வந்த ஞான்று பொன்மாந்தனார்க் காய்ப்பட்டான். கடுக வந்தையார் மகன் விற்சிரைகள் வாணக்கோடமர்” (செங்கம் நடுகற்கள் கல்வெட்டு த.நா.தொ.எண் 1971-68) நரசிம்மவர்மர் காலத்தில் புதுக்கோட்டை பக்கம் சென்று தன்னாட்சி நடத்தி இருக்கின்றனர். அப்போது இருந்த முத்தரையன் தென்னவன் இளங்கோ முத்தரையர் பட்டத்தரசர் யாராக இருக்கக் கூடும்? ஏனெனில் பெயர் தென்னவன்; பட்டம் பெறாத இளவரசன் இளங்கோ காலம் கி.பி. 630- கி.பி.670) முடிய இவருடைய தந்தையார் பூவிக்ரமன் ஆவார். பூவிக்ரமன் இவரது தந்தை திருவிக்ரமன் காலத்தில் முதலாம் கடுங்கோனும் சிம்ம விஷ்ணு பல்லவனும் புரட்சி செய்யவே மீண்டும் தலையணைபுரம் (தலைக்காடு) சென்று பாதுகாப்பாக இருந்திருக்கக் கூடும் குறுநில அரசர்கள் எல்லாம் அவரவர் இடத்தில் இருந்து ஆண்டிருக்கிறார்கள். அப்போது இருந்த குறுநில மன்னர்கள்.

1.தஞ்சை முத்தரையர்கள் (நியமம்) 2. வானகோவரையர்கள் (வேலூர்வல்லம்), 3. கொடும்பாளூர் வேட்டரையன், 5. கொங்கு நாட்டு முத்தரையர், 6. காஞ்சி முத்தரையர், 7. பளுவேட்டரையன் என்றவாறு அப்படி அப்படியே கங்க அரசருக்குக் கீழ் (களப்பிரர்களுக்கு ) பிரதிநிதியாக சிற்றரசர்களாகத் தொடர்ந்து ஆண்டு வந்தனர். வேள்விக்குடி செப்பேடுப்படி கங்க (களப்பிரர்)ப் புரத்திற்குச் சென்று விட்டான். அவன் தான் ஸ்ரீ விக்ரமன் அல்லதுதிருவிக்ரமன் அங்கே தொடர்ந்து அவனுக்குப் பிறகு பூவிக்ரமன் தலைவனப்புரத்தில் (தலைக்காடு) (ஸ்கந்தபுரம் ) ஓசையில்லாமல் ஆண்டு வந்தான். இதில் திருமங்கை ஆழ்வார் ஆண்ட நீலி நாடு ஒன்றாகும். பாண்டியநாடு தன்னிச்சையாகப் பாண்டியர்களால் ஆளப்பட்டது. அதைப் போல பல்லவநாடு பல்லவர்களால் ஆளப் பட்டது. பல்லவர்கள் பக்கம் தஞ்சையும், புதுக்கோட்டையும் சாய்ந்தன. மேலும் பொன்பாண வானகோரையர் நாடும் பல்லவர் பக்கமே இருந்தது என்பதற்கு இந்த கல்வெட்டுக்களே சான்று.

”கோவிசைய மயீந்திர பருமற்கு பதினெட்டாவது மீ வேணாட்டு ஆந்தைபாடி ஈகை பெரும் பாணரைசரு மருமக்கள் பொற்சேந்தியாஞ் சேவகரு தொருக் கண்ட ஞான்று மீட்டுப் பட்டான் வேணாட் (டு) நந்த (யார்) கல்க” (செங்கம் நடுகல் த.மநா.தொ.ஆ.தொ எண் 1971-77 ஆகவே களப்பிரர் பக்கம் இருந்த பெரும்பாண அரசர் பல்லவர் பக்கம் சாய்ந்து விட்டதற்கான சான்று கல்வெட்டு. மலைபோல இருந்த கங்க(களப்பிர) அரசு சிறு சிறு குண்டான் கற்களாக மாறியது நன்கு புலனாகிறது. அதில் ஒன்று முத்தரையர் அரசு.

மெல்ல மெல்ல பரப்பிலும் உருவத்திலும் சிறுக சிறுகசிறிதாகத் தொடங்கியது. அதற்கு இன்னொரு காரணம் கொடும் பாளூர் இருக்கு வேளூர் முத்தரையர் அரசு பாண்டியர் பக்கம் சாய்ந்தது.இதனால் முத்தரையர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் போனது. இருக்கு வேளிர் முத்தரையர்களுக்குள் இருந்த முத்தரைய பெருநிலக்கிழார் அம்பலக்காரர், அம்பலம்,சேர்வை,என்று உள்பிரிவுகளாக மாறினர். புதுக்கோட்டைப் பகுதியில் சேர்வை என்றும் திண்டுக்கல்,கரூர் பகுதிகாரர் முத்தரையர்,வன்னியகுல சத்திரியர் என்றும் மாறினர். புதுக்கோட்டை, நியமம்,தஞ்சை, திருபைஞ்ஞீலி ஆண்ட குறுநில அரசர், பெருநிலக்கிழார், மக்கள் முத்தரையர் காவல்காரன் ஆக மாறிப் போயினர்.மறவர் குல மக்களான முத்தரையர்கள் போர் இல்லாத காலங்களில் காட்டிற்கு வேட்டையாட பரிவாரங்களுடன் சென்றனர். அதனால் வேடர், வேட்டுவக் கவுண்டர் ஆயினர். சிலர் வலைகளை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்க உள்நாட்டு நீர்நிலைகளான ஆறு, ஏரி, குளம், குட்டை பக்கம் குடியேறினர். அதனால் ‘வலையர்’ ஆனார்.

தற்போது உயர்ந்த சாதியினரால் “வலப்பசங்க” என்று இழித்துக்கூறக் கேட்டுள்ளோம். அதே வலையர்கள் மற்ற முத்தரையர்களை சாதியில் இருந்து தள்ளி வைத்த செயல்பாடு புதுக்கோட்டையில் ஒன்று உண்டு.

தேவேந்திர முத்தரையன் :

காலம்: மேலைக் கூவ தேவேந்திர முத்தரையன் கல்வெட்டு பு.க.எண் 847, இடம்: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம். இப்பகுதியில் வாழ்ந்த முத்திரியர்கள் பிற சாதியினரின் சாவுக்கு முக்காடு போட்டு பிணத்திற்கு முன்னே செல்லுதல், மறுநாள் கடாத்துதல் போன்ற இழிவான தொழில்களைக் கட்டாயத்தின் பேரில் செய்துள்ளனர்.

அப்போது இப்பகுதியில் வாழ்ந்த வலையர்கள் தங்கள் சாதி இழிவாய் நடத்தப்படுதைப் பார்த்து அந்த முத்தரையர்களிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று வேண்டிக் கொண்டனர். கட்டாயத்தின் பெயரில் தொடர்ந்து செய்யவே அந்த முத்தரையர் களைச் சாதிநீக்கம் செய்தனர். ஆட்சியாளர்களைக் கண்டு போராடி ளார்கள். அதில் இனி முத்தரையர் சாவுக்காரியங்களில் அப்படி செய்யவேண்டாம் என்று கூறி கல்வெட்டு வெட்டி வைத்தனர்.

இப்படியான இழிநிலைக்குக் காரணம் இந்த அரச முத்தரையர்கள் கி.பி. 700 – 850 முடிய அரையர்களாக இருந்து அதிகாரம் செலுத்தியவர்களை நாயக்கர் காலத்தில் பழிவாங்கவே அப்படி செய்யச் செய்தனர். அவர்களது உடன்பிறப்பு அரையர்கள் போரில் இறந்தபொழுது எப்படி நடந்து கொள்வார்களோ அப்படியே நடந்து கொள்ள செய்து அதையே சம்பிரதாயமாகக் கொள்ள சமுதாயத்தில் செய்துவிட்டனர்.

கி.பி. 700- 850 முடிய முத்தரைய மக்கள் (வலையர்) பட்டுக் கொள்ளாமல் இருந்ததால் சம்பிராயத்தில் இருந்து நீக்கிவிட்டனர் விடுவித்து விட்டனர். ஆனால் வலையர்கள் தமது உடன்பிறந்தார் இழிவாக நடத்தப்படுவதை விரும்பாமல் போராடினார்கள். இதனால் தமது இனம் முத்தரையர்களை அப்படி செய்ய வேண்டாம் என்று வேண்டினார்கள். முடியாத காலத்தில் இழிவான காரியம் செய்த முத்தரையர்களை ‘சாதிநீக்கம்’ செய்து புரட்சி செய்தனர். பல போராட்டங்களுக்குப் பின்னால் அந்த இழிசெயலைசெய்ய வேண்டாம் என்று வேண்டி கல்வெட்டுகளில் பொறித்துகொண்டனர். இதனால் வலையர்கள், முத்தரையர் இருவரும் ஒரே இனத்தவர்கள் என்று அறியலாம்.

சேர,சோழ,பாண்டியர்களை வென்று தமது ஒரே கொடியின் கீழ் வைத்து அரசாண்டார்கள் களப்பிரர் (கங்கர்); மிகப்பெரிய பேரரசர்களாக விளங்கியவர்கள்; பின்னால் சுடுகாடு வரை முக்காடு போட்டு வேலைகளைச் செய்துள்ளனர். வாழ்வு ஒரு காலம் தாழ்வு ஒரு காலம்! ஒரு காலத்தில் பேரரசனாக இருந்தவர் இன்று ஆண்டியாகி விட்டனர்.

களப்பிரர் காலத்தில் பேரரசன் அல்லது சக்ரவர்த்தியாக இருந்தவர்கள் மெல்ல மெல்ல இழிநிலைக்கு கி.பி.1450இல் தள்ளப்பட்டனர். கி.பி.350இல் அரசாண்ட மாதவ முத்தரசன் மிக உயர்ந்த நிலை. துர்வீநீதன் முத்தரசன் மிக உயர்ந்த நிலை. பேரரசர்கள். தமிழகத்தை மிகப் பெரிய பேரரசர்கள் விவரம் அடுத்த இதழில் தரப்பட்டுள்ளது. (நூலிலிருந்து)

முக்காலம் தொடும் முத்தரையர் வரலாறு – சவரிமுத்து
விலை: 225/-
வெளியீடு: சங்கர் பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/the-history-of-mutaraiyar-spanning-three-periods/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers