பாடல்களும் மீனவர் பாடல்களும் :
நாட்டுப்புறவியல் என்பது மரபுகள், வழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள், நாட்டுப்புற இலக்கியங்கள் ஆகியவை நாட்டுப்புற மக்களிடம் மட்டுமின்றி நகர்ப்புற மக்களிடமும் எப்படி உள்ளன என்பதைப் பற்றி ஆராய்வதை நோக்கமாகக் கொண்டதாகும்! நாகரிக சமுதாயம், நாகரிகமற்ற சமுதாயம், படித்த சமுதாயம், படிக்காத சமுதாயம் என்ற எந்தவிதமான வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வியல் வழக்காறுகளை நாட்டுப்புறவியல் உள்ளடக்கியதாகும். அதைப் பழக்கவழக்கங்கள், கலைகள், தொழில்நுட்பம், மருத்துவம், இலக்கியம் ஆகிய ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம். இலக்கியமென்பது பாடல்கள், கதைகள், பழமொழிகள் போன்ற பகுப்பைக் கொண்டவையாகும். இவ் வியலில் முக்கியத்துவம் கருதிப் பாடல்களின் வகைகள் அவற்றில் தொழில்பாடல்கள் பெறும் இடமும், தொழில் பாடல்களில் களப்பகுதி மீனவர் பாடல்கள் பெற்றுள்ள சிறப்புகளும் ஆராயப் பெறுகின்றன.
பாடல்கள் :
நாட்டுப்புறப் பாடல்கள் எளியவை; பகட்டில்லாதவை; பொய்க்கலப்பில்லாதவை; பரிசுத்தமானவை; நேரானவை; உள்ளத்தை ஈர்க்கும் இனிமையும் இசைப் பொலிவும் நிறைந்தவை; செழுமையின் மனோபாவமும் கற்பிக்கப்படாத கட்டுப்பாடற்ற கற்பனையும் கொண்டவையாகும்.’ இப்பாடல்களைக் கதைப் பாடல்கள், தனிப்பாடல்கள் என இருபிரிவாகப் பிரிக்கலாம். ஒரு நீண்ட கதை பாடலாகப் பாடப்படும்போது அது கதைப்பாடலாக அமைகின்றது. இவை பெரும்பாலும் தனி நபர் வரலாறுகளை மையமாக வைத்துப் பாடப்படுபவையாகும். தனிப்பாடல் என்பது அன்றாடம் மக்கள் தம் வாழ்க்கையில் சந்தித்த நிகழ்வுகளை மையமாக வைத்துப் பாடப்படுவதாகும். இதில் பெரும்பகுதி மக்களின் வாழ்க்கைச் செய்திகள் உதிரிகளாக இடம்பெறுகின்றன. இவற்றின் வகைகள் குறித்துத் தொடர்ந்து காணலாம்.
வகைகள் :
நாட்டுப்புறப் பாடல்களை வகைப்படுத்துவதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. சி.எம். பௌரா (Bowra) நாட்டுப்புறப் பாடல்களை இயற்கைப்பாடல்கள் (Nature). காதல் பாடல்கள் (Love), மணவாழ்வு (Marriage), தாலாட்டு (lullaby), தொழில்பாடல் (work), விழாப் பாடல் (Festival) ஆகிய ஆறு வகைகளாகவும்,’ மரியா லீச் (Maria Leach), உணர்ச்சிப் பாடல்கள் (Emotional), வாழ்வியல் பாடல்கள் (Crucial Movement of Life), குழந்தைப் பாடல்கள் (Child), சமயப் பாடல்கள் (Religious) என்று ஐந்து வகையாகவும் பிரிக்கின்றனர். மரியாலீச் தான் பிரித்துள்ள வாழ்வின் முக்கிய நிகழ்வின் பாடல்கள் என்பதில் கிளைப்பிரிவுகளாக பிறப்பு (Birth), மணம் (Marriage), இறப்பு (Death), பிரிவு (Parting), தாயக நாட்டம் (Nostalgia), போர்ப் பாடல் (war) ஆகியவற்றையும் குறிப்பிடுகின்றார்.
தமிழக நாட்டுப்புறப் பாடல்களை வகைப்படுத்தும் மு. அருணாசலம், தாலாட்டுப் பாட்டு, விடுகதைப்பாட்டு, நடவுப் பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, ஏற்றப்பாட்டு, வள்ளைப்பாட்டு, கண்ணன் பாட்டு, பரிகாசப்பாட்டு, கும்மிப்பாட்டு, ஏசல்பாட்டு, வேல்பாட்டு, இசைப்பாட்டு என வகைப்படுத்துவர்.’ கி.வா. ஜெகந்நாதன் தெம்மாங்கு, தங்கரத்தினமே, ராசாத்தி, ஆண், பெண் தர்க்கம், கள்ளன்பாட்டு, தொழிலாளர் பாட்டு, குடும்பம், தாலாட்டு, சிறுவர் உலகம், புலம்பல், கும்மி, தெய்வம், பல கதம்பம் ஆகிய பதிமூன்று பிரிவுகளாகப் பிரிக்கின்றார். செ. அன்னகாமு கடவுள் துதி, மழை, நாட்டுச்சிறப்பு, பிறப்பு வளர்ப்பு, குழந்தைகளின் விளையாட்டு, திருமணம், தொழில், நவீனம், களியாட்டத்தில் கதைப்பாடல், வாழ்க்கையில் சோதனைகள், வேதாந்தப்பாடல்கள், ஆதிவாசிப் பாடல்கள், மங்கலம் ஆகிய பதினான்கு பிரிவுகளில் பாடல்களைப் பிரிக்கின்றார்? தமிழக நாட்டுப்புறவியலின் தந்தை எனப் போற்றப்படும் நா. வானமாமலை தெய்வங்கள், மழையும் பஞ்சமும், தாலாட்டு, விளையாட்டு, காதல், திருமணம், குடும்பம், சமூகம், உறவும் தொழிலும், ஒப்பாரி ஆகிய பத்துப்பிரிவுகளாகப் பகுத்துக் கூறுகின்றார்.”
நாட்டுப்புறவியல் பல்கலைக்கழகக் கல்வியாக ஒப்புதல் பெற்றவுடன் பலரும் நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரித்து வகைப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களில் ஆறு. அழகப்பன் நாட்டுப்புறப் பாடல்களைக் குழந்தைப் பாடல்கள், பக்திப் பாடல்கள், தொழில் பாடல்கள், கொண்டாட்டப் பாடல்கள், உணர்ச்சிப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், பன்மலர்ப் பாடல்கள் என வகைப்படுத்துவர்?
மா. செல்வராசன், ஆறு. அழகப்பன் பிரித்ததிலிருந்து கூடுதலாக வேடிக்கைப் பாடல்கள், காதல் பாடல்கள், விவசாயப் பாடல்கள், வேதாந்தப் பாடல்கள் ஆகியவற்றைச் சேர்த்துப் பிரித்துள்ளார். இவர் ஆறு அழகப்பன் குறிப்பிடும் பன்மலர்ப்பாடல்கள் என்பதைப் பல்கலைப் பாடல்கள் என்கிறார். இவர்கள் பிரித்துள்ள பக்தி, காதல், தாலாட்டு, தொழில், ஒப்பாரி ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளும் க. கிருட்டிணமூர்த்தி மங்கல வாழ்த்து, சமுதாயம் என்னும் பிரிவினையும் தருகின்றார்.”
இக்காலத்தில் நாட்டுப்புறவியல் துறை நிலைபெறுவதற்குக் காரணமாக அமையும் சு. சண்முகசுந்தரம், ஆறு. இராமநாதன், சு. சக்திவேல், ஆகியோர் பின்வருமாறு வகைப்படுத்துகின்றனர். சு. சண்முகசுந்தரம் தாலாட்டுப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள், தொழில் பாடல்கள், காதல் பாடல்கள், மணவாழ்த்து, பக்திப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், ஆட்டப் பாடல்கள், கதைப் பாடல்கள் ஆகிய பிரிவுகளாகப் பாடல்களைப் பிரிக்கின்றார்.” ஆறு. இராமநாதன், சு. சண்முகசுந்தரம் குறிப்பிடும் ஆட்டப் பாடல்களைக் கொண்டாட்டப் பாடல்கள் என்றும் குறிப்பிடு கின்றார். அவர் புதிதாகப் பல்பொருள் பற்றிய பாடல்கள் என்றும் பிரிவைத் தருகின்றார்.” மற்றவை எல்லாம் சு. சண்முகசுந்தரம் பிரித்த பிரிவுகளேயாகும். சு. சக்திவேல், ஆறு. இராமநாதன் வகைப் படுத்தும் முறைகளை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில் ஒவ்வொரு வகைக்கும் பல்வேறு உட்பிரிவுகளைத் தருகின்றார்.” மேற்கண்ட பிரிவுகளில் காதல் பாடல்கள் பெரும்பாலும் தொழிற் பாடல்களின் ஒரு பிரிவாக அமைந்துவிடுகின்றன. குழந்தைப் பாடல்கள் தாலாட்டுப் பாடல்களின் ஒரு பகுதியாகிப் போய் விடுகின்றன. அதனால் சிறுவர் பாடல்கள் என்ற பிரிப்பு இங்கு அவசியமாகின்றது. பல்சுவைப் பாடல்கள் என்பது வகைப்படுத்த முடியாத பாடல்களின் தொகுப்பாக அமைகின்றது. மேற்கண்ட செய்திகள் அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் நாட்டுப்புறத் தனிப்பாடல்களைத் தாலாட்டுப் பாடல்கள், சிறுவர் பாடல்கள், தொழில் பாடல்கள், ஆட்டப்பாடல்கள், பக்திப்பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் என்ற ஆறு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். மேற்கண்ட அனைத்துத் தரப்பினர் வகைப்பாடுகளிலும் தொழில் பாடல்கள் என்ற பிரிவு இடம்பெற்றுள்ளது என்பது இந்தப் பிரிப்பு நாட்டுப்புறப் பாடல்களின் பிரிப்பில் மிக இன்றியமையாதது என்பதையே வலியுறுத்துவதாக அமைகின்றது. தொடர்ந்து பாடல்களில் வகைப்பாடுகளைக் காணலாம்.(நூலிலிருந்து)
மீனவர் சமுதாய நாட்டுப்புறப் பாடல்கள் – ஆ.திருநாகலிங்கம்
விலை: 35/-
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
Buy this book online: https://www.heritager.in/product/meenavar-samuthaya-naattuppura-paadalgal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers