தென்னார்க்காடு மாவட்டம்
18ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆற்காடு பகுதிகள் முழுமையும் படிப்படியாக ஆங்கிலேயர் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், ஏற்கனவே ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஆற்காடு நவாபின் நிர்வாகமே இவர்களது ஆதரவுடன் தொடர்ந்து இருந்து வந்தது. இதற்கிடையில் ஆங்கிலேய ஆளுநர் இராபர்ட் கிளைவ் உத்தரவின் பேரில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ரெவினியூ போர்டு மற்றும் ஆற்காடு நவாப் அசீம் உத்தௌலத் பகதூர் இடையே 1801இல் ஒரு உடன்படிக்கை உண்டானது. இதன்படி, ஆற்காடுப் பகுதியிலுள்ள சிவில் மற்றும் இராணுவ அரசாங்கம் கம்பெனியின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 1801 ஆகஸ்டில் தென்னார்க்காடு மாவட்டத்தின் முதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டார் கேப்டன் கிரஹம்.
நவாபுகளின் ஆட்சிக்காலத்தில் இப்பகுதியின் தலைநகராக ஆற்காடு இருந்தது. இதனால் தெற்கில் புதிதாக உருவாக்கப்பட்ட (Southern Division of Arcot) மாவட்டத்திற்கு ஆங்கிலேயர்கள் SOUTH ARCOT எனும் பெயரை வழங்கினர். வடக்கே பாலாறு, தெற்கே வெள்ளாறு ஆகியவை இம்மாவட்டத்தின் எல்லைகளாகும். இதன் பரப்பளவு 4 ஆயிரத்து 873 சதுர மைல்.
1878இல் தென்னார்க்காடு மாவட்ட ஆட்சியராக இருந்த J.H.Garstin தொகுத்து வெளியிட்ட Manul of the South arcot district எனும் நூலில் இடம்பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இம்மாவட்டம் தொடர்பான பின்வரும் விவரங்களைப் பார்க்கலாம்:
தாலுகாக்கள்: மாவட்ட ஆட்சியர் கேப்டன் கிரஹம் தலைமையிலான தென்னார்க்காடு மாவட்ட நிர்வாகத்தில் பின்வரும் 20 தாலுகாக்கள் அடங்கியிருந்தன. 1. சேத்பட் 2 வந்தவாசி 3. செஞ்சி 4. திருவெண்ணெய்நல்லூர் 5. விழுப்புரம் 6. திண்டிவனம் 7. திருவதிகை 8. வழுதாவூர் 9. புவனகிரி 10. திருவண்ணாமலை 11. விருத்தாசலம் 12. திட்டக்குடி 13. எலவனாசூர் 14. திருக்கோவிலூர் 15. கள்ளக்குறிச்சி 16. அன்னியூர் 17. ஆற்காடு 18. வேலூர் 19. திருவத்தூர் 20. போளூர்
விழுப்புரம் தாலுகாவில் கோலியனூர், குமாரக்குப்பம், கோட்டக்குப்பம். சின்னபாபு சமுத்திரம்,தென்பேர், நெடுமொழியனூர், பாக்கம், பூவரசங்குப்பம், இராம்பாக்கம், விக்கிரவாண்டி, வேங்கடாத்ரி அகரம், பொம்மையார்பாளையம் ஆகிய ஊர்களும், திண்டிவனம் தாலுகாவில் கிடங்கில், ஒலக்கூர், நடுக்குப்பம், மரக்காணம், ஆலகிராமம் ஆகிய கிராமங்களும், கள்ளக்குறிச்சி தாலுகாவில் கரடிச்சித்தூர், கொங்கராயப்பாளையம், பல்லகச்சேரி, பெரியமாம்பட்டு, இராயபுதூர், வடக்கநந்தல் கிராமங்களும், திருக்கோவிலூர் தாலுகாவில் கள்ளமருதூர், சித்தலிங்கமடம், திருவெண்ணெய் நல்லூர், பாதூர், பிடாகம், மணலூர்பேட்டை, ரிஷிவந்தயம் ஆகியவையும் அடங்கியிருந்தன.
நீதி நிர்வாகம்: தேவனாம்பட்டணத்தில் தனது பரிபாலனத்தை 1691லேயே தொடங்கிவிட்டது, பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி. ஆனாலும் கிறிஸ்துவர்களிடையே நீதி ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குதான் அப்போது இவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கர்நாடகப் பகுதி (ஆந்திரா, மைசூர், தமிழ்நாடு) முழுமையும் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகத்துக்குள் வந்துவிட்டது.
விழுப்புரம் மாவட்டம் கல்தோன்றிய காலம் முதல் – கோ.செங்குட்டுவன்
₹350
Buy Link: https://heritager.in/product/viluppuram-maavattam-kalthonriya-kaalam-muthal/
இந்நூலினை எப்படி வாங்குவது?
1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம்.
இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.
எங்கள் முயற்சியில் எவ்வாறு நீங்களும் பங்கெடுக்கலாம்?
1. எங்கள் நூல் அறிமுக பதிவுகளைப் பகிர்ந்து பலரை சென்றடைய உதவுங்கள்.
2. உங்களுக்கு தேவையா நூல்களை எங்கள் மூலம் பெறுங்கள்.
3. வரலாற்றில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு எங்களின் Heritager .in The Cultural Store பற்றி தெரிவியுங்கள்.
உங்களின் தொடர் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றிகள்