தியாகராய நகர், அன்றும் இன்றும்

தியாகராயர்

பாண்டி பஜார் பகுதிக்கு தியாகராயா ரோடு என்று பெயர். அது பிட்டி தியாகராயச் செட்டியார் என்ற நீதிக்கட்சி தலைவர் நினைவாக வைக்கப் பட்டது. சிலர் எழுதுவது போல அவர் பி. டி தியாகராய செட்டியார் அல்ல, ‘பிட்டி என்பது தெலுங்குப் பெயர். தி. நகர் பற்றிய புத்தகத்தில் அவரைப் பற்றியும் பிற நீதிக் கட்சிப் பிரமுகர்கள் பற்றியும் எழுத வேண்டியது அவசியம்.

பிட்டி தியாகராய செட்டியார் நீதிக் கட்சியின் தந்தை என்று போற்றப்படுகிறார். சென்னையில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி. ஏ. பட்டம் பெற்றவர். நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். நெசவுத் தொழில் துறையில் விசைத்தறிகள் அதிகம் இடம் பெறுவதை விரும்பினார்.

இந்த இடத்திற்கு அவர் பெயர் இடப்பட்ட தனாலோ என்னவோ இன்று இங்கு அதிக அளவு துணிக்கடைகள் இருக்கின்றன. சென்னையின் ஜவுளி மார்க்கெட் என்றாகி விட்டது தியாகராய நகர்.

தியாகராயர் பொதுப் பணியில் ஆர்வம் கொண்டி ருந்தார். நற்பணிகளுக்கு நன்கொடை கொடுத்து வந்தார். மெட்றாஸ் நேடிவ் அசோசியேஷன் என்ற அமைப்பை 1881-ல் தொடங்கினார். இவர் நகராட்சி உறுப்பினராகவும் மேலவை உறுப்பினராகவும் இருந்தார். சென்னை நகரின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட பிட்டி தியாகராய செட்டியாரின் சிலை சென்னை மாநகராட்சி வாயிலில் இருப்பது பொருத்தமே. இவர் பெயரில் கோபதி நாராயணசாமி செட்டி சாலையில் சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான ஒரு கலை அரங்கமும் இருக்கிறது.

நீதிக்கட்சி அமைச்சரவை அமைக்க நேர்ந்த தருணங்களில் போட்டியில்லாமல் பிரதம அமைச்சராகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. நன்கு படித்தவர், செல்வாக்கு மிக்கவர். பொதுத் தொண்டில் நாட்டம் உண்டு. இருந்தபோதிலும்பிரதமர் பதவிக்கு வேறு ஒருவரை சிபாரிசு செய்தார். உயர் பதவிகளுக்குக் கடும் போட்டி நிலவும் காலத்தில் பதவிகளுக்கு ஆசைப்படாத அவரது தொண்டுள்ளம் போற்றத்தக்கது.
(நூலிலிருந்து)

தியாகராய நகர், அன்றும் இன்றும் – நல்லி குப்புசாமி செட்டியார்
விலை: 100 /-
வெளியீடு: கவிதா வெளியீடு
Buy this book online: https://www.heritager.in/product/thiyagaraya-nagar-andrum-indrum/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers