இந்துநதிக் கலாசாரம் :

இந்தியாவென வழங்கும் பாரதநாட்டின் பழம் பெரும் நாகரிகமாக சனாதனதர்மம் எப்போது உருவானது என்பதை அறுதியிட்டுக் கூறமுடியாமல் ஆராய்ச்சியாளர் மூளையைக் குழப்பிக் கொண்டி ருந்தவாறே, அந்த நாகரிகம் என்னும் பண்பாடு பாரத நாட்டில் எந்த மூலையில் முதலில் ஆரம்பித்தது என்பதையும் ஆராய்ந்தறிவதற்கு இடர்ப்பட்டார்கள்.

இற்றைக்கு நூற்றுத்தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர், 1786 ஆம் ஆண்டில் சேர் வில்லியம் யோன்ஸ் என்பார் இராசாங்க ஆசிய சங்கம் என்னும் றோயல் ஏசியாட்டிக் சோசயிற்றியின் சார்பில் வங்காள தேசத்தில் பேசிய ஆராய்ச்சியுரை, பண்பாட்டா ராய்ச்சியாளர் பலரைச் சிந்திக்கத் தூண்டியது. சென்ற நூற் றாண்டிலே மாக்ஸ் முல்லர் என்பாரின் தலைமையில் அறிஞர்கள் பலர் இதனை நன்காராய்ந்து வந்தார்கள்.

இந்தியாவின் பூர்வீக மக்கள் ஆரியரல்லர் என்று கூறிய ஆராய்ச்சியாளர், ஆரியரே பாரத நாட்டில் நாகரிகத்தை உருவாக் கினார்கள் எனக் கருதினர். ஆரியரின்மொழி லத்தீன், கிறீக் முதலிய மொழிகளின் குடும்பத்தைச் சேர்ந்தது என்றனர். ஆராய்ச்சியாளர் முதலில் கண்டு கூறியவை மேலேசொன்ன பகுதியாகும். அவர்கள் வேதங்களில் ஆதாரங்கள் உள்ளன என்றனர். அவர்களால் வேறெ துவுங்கூற முடியவில்லை. அக்காலத்திலேதான் அசிரியர், எகிப்தியர், பாரசீகர் நாகரிகத்தை நோக்கிக்கொண்டிருந்தனர் என்பது த் தெரிந்ததே.

அக்காலத்திலே தென்னிந்தியாவில் திராவிடமொழியும் களுக்கில் பல்வேறிடங்களில் கொல்முண்டா (Kol. – Munda) மொழி களும் நிலவின என்று ஒரு சாரார் கண்டனர். ஆரியர் எனவந்த வர்கள் திராவிடருடனும் கொல்முண்டா இனத்தவருடலும்(பிற்காலத்தில் திபெத்தி சீனருடனும்) கலந்து இந்துநாகரிகம் என ஒன்றைக் கண்டார்கள். இந்துநாகரிகம் ஒரு கலப்பு நாகரிகம். அது கொண்டுங் கொடுத்தும் கூடிய கூட்டத்தால் வளர்ந்து வந்தது. இந்தப் பண்பாட்டை ஆரியர் என்பார் தனிமையாக உருவாக்கவில்லை என்று பேராசிரியர் கலாநிதி எஸ். கே. டீ. (S.K.De) என்பார் அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார். இந்துநாகரிகம் உருப்படுவதற்குத் திராவிடரும் கொல்முண்டா என்போரும் அதிகமாக உபகரித் துள்ளார்கள். கொல் என்பார் வங்காளத்தேசத்தில் அதிகமாகச் சென்றுறைந்தனர்.

திராவிடர் :

இந்துநாகரிகத்தை உருவாக்குவதில் திராவிடர் என்பாரின் உபகரிப்பு மிகவும் அதிகம். அவர்களின் உற்பத்தியைப்பற்றி அறிய முடியாது ஆராய்ச்சியாளர் அலுத்துப்போயினர். இந்த மக்கட்கூட்டந்தான் சிந்து, பஞ்சாப், பிரதேசத்திலேயும் நிலையாக வாழ்ந்தவர்கள். இவர்களே ஆரியர் என்பாரைத் தெற்கே போகவிடாமல் தடுத்து நிறுத்தியவர்கள். இவர்கள் ஆரியர் வருவதற்கு முன்னரேயே இந்தியாவில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இன்று தென்னகம் என்னும் தமிழ்நாட்டில் வாழ்கின்றார்களேயாயினும். முற்காலத்தில் இவர் களே பலுசித்தானம் முதல் வங்காளம் வரையும் வாழ்ந்தவர்கள். இவர்களின் நாகரிகம் இந்தியாவின் நாகரிகமாக அக்காலத்தில் நிலவியது.

வேதகாலத்துக்குப் பிறகு வேதமொழியான சமஸ்கிருதம் திராவிட நாகரிகத்தால் நன்கு வளர்ச்சியடைந்தது நன்றாகச் செய்யப்பட்டது. மொழி வளர்ச்சி மாத்திரமன்றி நாகரிகவளர்ச் சிக்கும் திராவிடர் கைகொடுத்தனர். இந்து மதத்தில் இன்று இடம் பெற்றுள்ள கிரியைகள் அநுட்டானங்களிற் பல திராவிடரின் உபகரிப்பேயாகும் என்று பெரியவர்கள் கருதுகிறார்கள்.

வடமொழியின் சிறப்பியல்புகள் பலவற்றிற்கும் திராவிட மொழி உதவியுள்ளது என்று இரு மொழிகளையும் நன்கறிந்த வர்கள் கூறியுள்ளார்கள். முன்னர் திராவிடரும் கொல் வகுப் பினரும் கங்கைச் சமவெளிகளில் வாழ்ந்த காலத்திலே தான் சமய வுணர்ச்சியும் அநுட்டானங்களும் தோன்றியிருத்தல் வேண்டும் என்றும், அவை திராவிடரின் நாகரிகமாயிருத்தல் வேண்டும் என்றும், கலாநிதி எஸ்.கே.டீ. அவர்கள் நாகரிகத்தின் ஆரம்பம்என்னும் தமது கட்டுரையில் எழுதியுள்ளார். அதற்கு ஆதாரமாக அவர் ஆரிய வேதங்களிலே சொல்லப்படாத பல விடயங்கள் இந்துநாகரிகத்தில் இடம் பெற்றிருப்பதைக் குறிப்பாகக் காட்டுவர் ஆரியர்களின் ஹோமம் என்னும் பலியிடும்கிரியை. இன்று பூஜை ஆன நடை பெறுகின்றதைக் காட்டுவர் பதை வேறு தேஹாய் பூனஜ என்பர். ஹோமத்தில் அக்கினி மூலம் தேவர்களுக்கு அல் யுணவு கொடுத்த முறை மாறி பூஜையில் அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை, நிவேதனம் என்பன அருமையாக இடம் பெறுகின்றன. என்பர். பூஜையில் வழிபடு கடவுள் நேரில் வந்து திருவுருவம் எனப்பெறும் விக்கிரகத்தில் எழுந்தருளிச் சாந்நித்தியமாயிருப் பதாகக் கருதிக் காதலுடன் வழிபடுவர். சப்தபூஜை, நாட்டிய நடன பூஜையும் செய்வர். இவற்றில் வழிபடுவோருக்கு அந்தரங்கமாகவும் வெளிவெளியாகவும் அளவுகடந்த பக்தி விசுவாசம் உண்டாகிறது. அது வெறும் நம்பிக்கை என்பதல்ல. இங்ஙனமாக வேதங்களிற் கூறப்பெறும் ஹோமம், யக்னம் என்பன பூஜையாக மாறியமை வதை நன்கு காணலாம். பூஜைமுறைவேறெங்காயினும் குறிக்கப்

பெறவில்லை. முற்காலத்தில் திராவிடர் மத்தியில் பாம்பு வணக்கம்,பs வணக்கம் முதலியன நடைபெற்று வந்தன. அவை பபிலோனியர் மத்தியிலும் இடம் பெற்றன. சிவலிங்கவழிபாடு திராவிடர் மத்தி யில் பழைய காலத்திலேயே இடம்பெற்றதாகும். இவை அநுமானிக் காமல் புதைபொருளாராய்ச்சி முடிபைக் கொண்டு உலகப் பெரியார் பலரோடு உசாவியறிந்து கூறுவதாக அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் கற்காலம், செம்புக்காலம் முதலியன நிலவின என்பர். அக்காலத்தில் ஆரியமுறைகள் இங்கே இடம் பெறவில்லை. திருநெல்வேலியில் ஆதித்த நல்லூரிற் கண்டெடுக்கப்பெற்ற புதை பொருள்கள் மிகப்பழைய காலத்து நாகரிகத்தைக் காட்டுவன. அவை சைப்பிறஸ், கிறீட், அனாரோலியா முதலிய இடங்களில் நடைபெற்ற இடுகைமுறை போன்றனவாகும். ஆதித்தநல்லூரின் எவக்கப்பட்ட மண்டையோடு தமிழனின் மண்டை ஓடு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தமிழருக்கும் சுமேரியருக்கும் தொடர்பிருந்தது என்பர்.

விலை: 170
Buy this book online: https://www.heritager.in/product/origins-of-hindu-civilization/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in

Social Media Handles:
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு

#books #tamilbookstore #Heritager wwww.heritager.in

Buy History and Heritage Related book online:

Buy Tamil Inscription Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/inscriptions/
Buy Tamil Literature Books: https://www.heritager.in/product-category/books/tamil/literature/
Buy Tamil Archaeological Books: https://www.heritager.in/product-category/books/tamil/archaeology/
Buy Tamil Temple Architecture and Art Books: https://www.heritager.in/product-category/books/tamil/art/
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/