Menu

உலக வரலாறு (H.G. வெல்ஸ்)

நூறாண்டுகளுக்கு முன் அறிவியலாளரும் வரலாற்றாளருமான எச்.ஜி. வெல்ஸ் எழுதி வெளிவந்த புகழ்பெற்ற ‘ஏ ஷார்ட் ஹிஸ்டரி ஆஃப் தி வேர்ல்ட்’ என்ற நூலின் மொழிபெயர்ப்பு. பூமியைச் சுற்றிலும் வெறு மை, வெறுமை. சூரிய குடும்பம், அண்டவெளியில் பரந்து விரிந்துள்ள நட்சத்திரங்கள், கிரகங்கள் பற்றி வியந்து தொடங்கும் வெல்ஸ், பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்துடன் உலகை ஒப்பிட்டு அறிவியல் நோக்கில் நூலை எழுதியுள்ளார்.

நூலாசிரியர் உயிரியல் ஆசிரியரும் என்பதால் உயிரினங்களின் தொடக்கம், மீன்களின் காலம், ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என்று விவரித்து, குரங்குகள், வாலில்லாதவை, நியாண்டர்தால் மனிதர்கள் என்று வரிசைப்படுத்தி, உண்மையான முதல் மனிதர்களை அறிமுகப்படுத்துகிறார்.

புத்தரைக் குறிப்பிடும்போது, சிறந்த அறிமுகத்துடன் அவருடைய சமகாலத்தவர்களைப் பற்றியும் விவரிக்கிறார்.

ரோமானிய சாம்ராஜ்யம் பற்றி விரிவாகப் பல இயல்களில் எழுதியுள்ளவர், சமய வளர்ச்சி பற்றிக் குறிப்பிடும்போது, புத்தர் காலத்துக்கு முன்னரே, மகிழ்ச்சியை விலக்கிய கடுந்துறவு இருந்ததைக் கூறுகிறார். உலகைப் படைத்த கடவுளின் அவதாரம் இயேசு நாதர் என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். வரலாற்று ஆசிரியர் தொடர்ந்து வரலாற்று ஆசிரியராகவே இருக்கும்பட்சத்தில் இந்த விளக்கத்தை ஏற்கவும் முடியாது; மறுக்கவும் முடியாது என்று குறிப்பிடும் வெல்ஸ், இயேசுவுக்கான எதிர்ப்பு எங்கிருந்து பிறந்தது எனத் தெளிந்த பார்வையுடன் விளக்குகிறார்.

நபிகள் நாயகமும் இஸ்லாமும் பற்றிய அறிமுகத்தில் இஸ்லாம் மிகப் பெரிய சக்தியாக உருவெடுப்பதற்கான முக்கியமான காரணிகளை வரிசைப்படுத்திச் சுட்டிக்காட்டுகிறார்.ஹூனர்கள், அராபியர்கள், மங்கோலியர்களின் வரலாற்றைச் சுருக்கமாகத் தெரிவித்து ஐரோப்பியர்களின் வரலாற்றை விரிவாகவே பதிவு செய்துள்ளார். நல்ல மொழிபெயர்ப்பு. படித்தறிய வேண்டிய வரலாறு.

உலக வரலாறு (H.G. வெல்ஸ்) – ஹெச். ஜி. வெல்ஸ்

500/-

Buy Link: https://heritager.in/product/ulaga-varalaaru-hg-wells/