Team Heritager December 7, 2022 0

மாட்டுவண்டிக்கு தமிழர்களின் பண்டைய ப்ரேக் முறை – மாடும் வண்டியும் த. ஜான்சி பால்ராஜ்

மாடும் வண்டியும் – த. ஜான்சி பால்ராஜ் | பக்கங்கள்: 126 | விலை:130

Buy this Book: https://bit.ly/3OTgxnj

மாட்டுவண்டியில் பயணிக்கும் போது தேவையான நேரங்களில் வண்டியின் கட்டுப்பாட்டை வண்டியின் ஓட்டுனர் தனது கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர சில எளிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.

வண்டி இறக்கத்தில் (பள்ளமான பகுதிகளில்) செல்லும் போது மிகவும் வேகமாக வண்டியின் சக்கரம் உருளும்: மாடுகளை இடித்துத் தள்ளும் இதனால் மாடுகள் அதிவேகமாக வண்டியை இழுக்க முற்படும். அதுவும் பாரமேற்றிச் செல்லும் வண்டியாக இருப்பின் மாடுகளின் நடை தளர்ந்து தடுமாறும் இதனால் வண்டி கவிழ்ந்து விடவும் வாய்ப்புள்ளது. இதனைத் தடுக்க நம் முன்னோர்கள் “வில் முறுக்கி’ என்ற தடைக்கட்டை (பிரேக்கட்டை) என்ற ஒன்றைப் பயன்படுத்தியுள்ளனர்.

இது ஏறக்குறைய ஐந்தடி நீளமும் நான்கு அல்லது ஐந்து அங்குல தடிமனும் உடையது. இக்கட்டை பின்புறமாக இரண்டு சக்கரங் களையும் தொட்டவாறு நீளமான கயிற்றின் உதவியுடன் கட்டையின் இருமுனைகளும் சக்கரங்களை உள்ளடக்கி வண்டியின் இருபுறங்களின் வழியாகவும் நுகத்துடன் இழுத்துக் கட்டப்பட்டுருக்கும்.

வண்டி இறக்கத்தில் இறங்கும்போது வண்டி ஒட்டுனர் தம் வலதுகாலை வலது பக்கக் கயிற்றின் மீதும் இடது காலை இடது பக்கக் கயிற்றின் மீதும் வைத்து மிதித்து அழுத்தம் கொடுப்பார் அப்போது வண்டியின் வேகக்கட்டுப்பாடு ஓட்டுனரின் வசமாகிவிடும் மாடுகளின் இழக்கும் திறனுக்கு ஏற்ப கயிற்றில் கொடுக்கும் விசையைத் தளர்த்தி கண்டியைத் தடம் புரளாமல் ஓட்டிச் செல்வார்.

மாட்டுவண்டி உயரமான இடங்களில் (ஏற்றத்தில்) ஏற நேரிடும் போது குறிப்பாக மலைப் பாங்கான இடங்களில், பள்ளமான பகுதியில் இருந்து மேடான பகுதிக்கு ஏறும் போது வண்டியின் பாரத்தை மாடுகள் இழுக்கச் சிரமப்படும். இதனால் உயரப் பாதைகளில் அப்படியே நின்றுவிட முற்படும். இத்தகைய நிலமைகளில் வண்டியின் சக்கரங்கள் கீழ்நோக்கி (பள்ளத்திற்குள்) உருள துவங்கும். இதனால் வண்டித் தலைகீழாக உருண்டு பெருத்தச் சேதத்தை ஏற்படுத்திவிடும். வண்டி ஓட்டுனரால் வண்டியைக் கட்டுக்குள் கொண்டுவர இயலாது. இதனைத் தடுக்க மிக எளிய நுட்பமான தடைக்கட்டை ஒன்றைப் பயன்படுத்தியுள்ளனர்.

அதன் பெயரை அறிய, முனைவர் த. ஜான்சி பால்ராஜ் எழுதிய மாடும் வண்டியும் என்ற புத்தகத்தை இங்கு வாங்குங்கள்: https://bit.ly/3OTgxnj

மாடும் வண்டியும் (பொருள்சார் பண்பாட்டு ஆய்வு)

150

2 in stock

Add to Wishlist
Add to Wishlist

Description

புத்தக தலைப்பு : மாடும் வண்டியும்
ஆசிரியர்:முனைவர் த. ஜான்சி பால்ராஜ்
பக்காங்கள்: 126
விலை:130

தலைப்புகள்:-

1. சக்கரம்
2.வண்டியும் சக்கரமும்
3. சக்கரத்தின் வளர்ச்சி
4.மாட்டு வண்டியும்
5.வண்டிகளின் வகைகள்
6. மாட்டு வண்டி உருவாக்கம்
7. சக்கரங்கள் தயாரிப்பு
8.வண்டியின் அடிப்பகுதி
9. வண்டியின் மேற்பகுதிகள்
10. வண்டியின் முன்பகுதி
11.சக்கடா வண்டி
12.கூண்டு வண்டி ஆல்லது கூட்டுவண்டி
13.வில்வண்டி
14.ரேக்ளா வண்டி
15.பந்தய முறை
16.ஒற்றை மாட்டு வண்டி

17.வண்டி மாடுகள்
18.மாடுகளைத் தேர்வு செய்தல்
19.மாட்டு நோய்கள்
20.மாட்டு வண்டியின் மதிப்பு
21.கைவினைஞர்கள்
22. வண்டி ஒட்டுதல்
23.மாட்டு வண்டிப் பயணம்
24. மாட்டு வண்டி தடைக்கட்டை
25. வண்டிகளின் பயன்பாடு
26. மாட்டு வண்டிகளில் களவு
27. வண்டி பேட்டைகள்
28.சந்தையும் மாட்டு வண்டியும்
29. மாடுகளின் பராமரிப்பு
30.மலைப்பகுதி வண்டி
31.மாட்டு வண்டிகளின் இன்றைய நிலை

நம் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் என்பது கல்வெட்டுக்கள், செப்பேடுகள் என்பனவற்றில் மட்டும் பதிவகவில்லை. மக்களின் வழ்க்காறுகளிலும் பதிவாகியுள்ளது. இவ்வுண்மையை உணர்ந்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

“மாட்டு வண்டியும்’’ என்னும் இந்நூல் பொருள்சார் பண்பாட்டு ஆய்வின் ஒரு மைஸ்கல் ஆகும். மாட்டு வண்டியின் அமைப்பை இந்நூலைப் படிப்போர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்ப்பதற்காக இந்தநூல்ஆசிரியர் மிகுந்த முயற்சி எடுத்துள்ளார். மாட்டு வண்டியின் அமைப்பு, அதன் உறுப்புக்கள் என்பனவற்றை விளக்கும் வரைபடம் நூலில் இடம்பெற்று இருப்பதே இதற்குச் சான்று.

-ஆ. சிவசுப்பரமணியன்

Additional information

Weight0.25 kg

தகவல்: செல்வம் புதியம் புத்தூர்

புத்தக தலைப்பு : மாடும் வண்டியும்
ஆசிரியர்:முனைவர் த. ஜான்சி பால்ராஜ் | பதிப்பகம்: NCBH
பக்கங்கள்: 126 | விலை:130

Buy this Book: https://bit.ly/3OTgxnj

புத்தகத்தில் உள்ள தலைப்புகள்:-

1. சக்கரம்
2.வண்டியும் சக்கரமும்
3. சக்கரத்தின் வளர்ச்சி
4.மாட்டு வண்டியும்
5.வண்டிகளின் வகைகள்
6. மாட்டு வண்டி உருவாக்கம்
7. சக்கரங்கள் தயாரிப்பு
8.வண்டியின் அடிப்பகுதி
9. வண்டியின் மேற்பகுதிகள்
10. வண்டியின் முன்பகுதி
11.சக்கடா வண்டி
12.கூண்டு வண்டி ஆல்லது கூட்டுவண்டி
13.வில்வண்டி
14.ரேக்ளா வண்டி
15.பந்தய முறை
16.ஒற்றை மாட்டு வண்டி

17.வண்டி மாடுகள்
18.மாடுகளைத் தேர்வு செய்தல்
19.மாட்டு நோய்கள்
20.மாட்டு வண்டியின் மதிப்பு
21.கைவினைஞர்கள்
22. வண்டி ஒட்டுதல்
23.மாட்டு வண்டிப் பயணம்
24. மாட்டு வண்டி தடைக்கட்டை
25. வண்டிகளின் பயன்பாடு
26. மாட்டு வண்டிகளில் களவு
27. வண்டி பேட்டைகள்
28.சந்தையும் மாட்டு வண்டியும்
29. மாடுகளின் பராமரிப்பு
30.மலைப்பகுதி வண்டி
31.மாட்டு வண்டிகளின் இன்றைய நிலை

நம் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் என்பது கல்வெட்டுக்கள், செப்பேடுகள் என்பனவற்றில் மட்டும் பதிவகவில்லை. மக்களின் வழ்க்காறுகளிலும் பதிவாகியுள்ளது. இவ்வுண்மையை உணர்ந்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

“மாட்டு வண்டியும்’’ என்னும் இந்நூல் பொருள்சார் பண்பாட்டு ஆய்வின் ஒரு மைஸ்கல் ஆகும். மாட்டு வண்டியின் அமைப்பை இந்நூலைப் படிப்போர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்ப்பதற்காக இந்தநூல்ஆசிரியர் மிகுந்த முயற்சி எடுத்துள்ளார். மாட்டு வண்டியின் அமைப்பு, அதன் உறுப்புக்கள் என்பனவற்றை விளக்கும் வரைபடம் நூலில் இடம்பெற்று இருப்பதே இதற்குச் சான்று.

Buy this Book: https://bit.ly/3OTgxnj

 

Category: