ஊரின் எல்லைகளைக் குறிக்க பெண் யானை.
இன்று ஒவ்வொரு கிராமத்திலும், மணியக்காரர் என்ற ஒருவர் இருப்பதை அறியலாம்.. பெரும்பாலும் கிராம நிர்வாகம் மற்றும் நியாயத்தார் சபையில் அவர் இருப்பதை நாம் அறிய முடிகின்றது. இவரின் வேலை பொதுவாக கணக்கு மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட வரையறை எல்லையை உறுதிப்படுத்தும் பொறுப்பில் (Surveyor) இருப்பவர். நிலத்தை அளப்பதற்கு இவரையே அழைத்து எல்லைகளை இவரை கொண்டு உறுதிப்படுத்தும் முறை இன்றும் காணப்படுகின்றது.
மானியம் என்றால் கொடையாக வழங்கப்பட்டது என்பது பொருள். மணியக்காரர் என்று சொல் மானியக்காரர் என்ற சொல்லில் இருந்து வழுவி உருவாகியிருக்கலாம் என்பது சிலரின் கருத்தாக உள்ளது.
(இப்பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் பகிரவும்)
சோழர் காலத்தில் ஒரு நிலத்தையோ அல்லது ஊரையோ தானமாக அளிக்கும் பழக்கம் இருந்துள்ளது. குறிப்பாக கோயில்களுக்கும் கோயில் பணியை சார்ந்த பிராமணர்களுக்கும் ஊரினை தானமாக அளிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனை பிரம்மதேயங்கள் என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். பிராமணர்களுக்கு மட்டும் அல்லாது வைணவ கோவில்களுக்கும் சைவ கோவில்களுக்கும் தானங்கள் அளிக்கும் வழக்கம் இருந்துள்ளது. இதனை “திருவிடையாட்டம்” மற்றும் “தேவதானம்” என அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது. சமணப் பள்ளிகளுக்கும் அளிக்கப்பட்ட தானங்கள் “பள்ளிச் சந்தம்” என அழைக்கப்பட்டன. இவை பெரும்பாலும் நிலமாகவோஅல்லது ஊராகவோ அமைந்துள்ளது.
மன்னன் தானமாக அளிக்கும் போது அவ்வாய்மொழியை ஓலையாக எழுத ஒரு அதிகாரியும் அதனை உறுதிப்படுத்த பல நிலைகளில் அதிகாரிகளும் அக்காலத்தில் இருந்துள்ளனர். இவர்கள், “ஓலை நாயகம்” என்றழைக்கப்பட்டனர். அரசன் நேரடியாக மக்களுக்கோ அல்லது ஊருக்கோ இவ்வாறு தானங்கள் அளிக்கும் போது எழுதப்பட்ட அரசனின் ஆணையைக் கொண்ட ஓலைகள் மரியாதை நிமித்தமாக “திருமுகம்” என அழைக்கப்பட்டன.
அரசனின் ஆணையை ஒரு குறிப்பிட்ட ஊருக்கோ அல்லது நாட்டுக்கோ கொண்டு வரும் பொழுது அந்த ஓலையை யானையின் மீது வைத்து கொண்டு வழக்கம் இருந்துள்ளது. இதனைப் பற்றி பல கல்வெட்டுகளும் பல வரலாற்று தகவல்களும் நமக்கு கிடைக்கின்றன.
பெரும்பாலும் இவை “பிடி” எனப்படும் பெண் யானையை பயன்படுத்தியே கொண்டு வருவர். யானையானது அந்த ஓலையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலத்தின் அல்லது ஊரின் எல்லையில்லை வலம்வரும். யானை வலம் வந்த எல்லை அந்த ஊரின் எல்லையாக குறிக்கப்படும்.
இதனை கல்வெட்டுகளும் செப்பு தகடுகளும்,
“பிடி சூழ்ந்து பிடாகை நடந்து அறவோலை செய்து குடுத்தோம்”
என ராஜராஜனின் ஆணை மங்களம் செப்பேட்டில் 20 க்கும் மேற்பட்ட முறை குறிப்பிடுகின்றது. இதற்கு, “ஓலையில் குறிபிட்டபடி தானம் கொடுத்த நிலத்தின் எல்லைகளை பெண் யானை சூழ வலம் வந்து அதனை ஊரார் அறிய அதனை உறுதிபடுத்துதல்.”என்பது பொருளாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
பிடாகை, என்பது ஒரு ஊருக்குள் அமைந்துள்ள இன்னொரு சிற்றூர் ஆகும்.
அக்காலத்தில், அரசனின் ஆணையானது, எவ்வாறு ஒரு கம்பீரத்துடனும், யானை மூலம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது என்பதை இதன் மூலம் அறியலாம்.
எனது கோரிக்கையை ஏற்று கடந்த பதிவினை அதிகம் பகிர்ந்துள்ளமை ஊக்கத்தை அளிப்பதும், தங்கள் அனைவரின் அன்பின் வெளிப்பாடாகவும் காண்கிறேன். இதன் மூலம் பகுதியாக முடக்கப்பட்டுள்ள எனது கணக்குக்கும் பல புதிய நட்பு அழைப்புகளும், நமது Youtube தள சந்தாதாரர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பயணிப்போம்.
10,000 Subscriber களை கடந்தது தளி Youtube Channel.
https://youtube.com/c/ThaliMedia
Our Social media Handles:
Website: www.heritager.in
Facebook: https://www.facebook.com/profile.php?id=100010547474983
Instagram: https://www.instagram.com/heritager.in
Youtube: https://youtube.com/c/ThaliMedia
Twitter: https://twitter.com/heritagerIn
Telegram: t.me/teamheritager