சங்க காலக் கடற்கரையோரக் குடியிருப்புகளும் துறைமுகங்களும் (இராமேஸ்வரம் முதல் பூம்புகார் வரை) எனும் தலைப்பில் அமைந்த இந்நூல், முன்னுரை, முடிவுரை நீங்கலாக சங்க காலத் தமிழக வாணிகம், சங்கக் காலத் துறைமுகங்கள் ஒரு பார்வை, இராமேஸ்வரம் முதல் பூம்புகார் வரை, அகழாய்வு செய்யப்பட்ட துறைமுகங்கள் மற்றும் வணிக நகரங்கள் பற்றி பேசுகிறது. அழகன்குளம், மந்திரிப்பட்டனம், நாகப்பட்டினம், பூம்புகார் (காவேரிப்பூம்பட்டினம்) ஆகிய வணிக நகரங்களைப் பற்றிய கருவூலமாக இந்நூல் அமையப் பெற்றுள்ளது.
மேலும், இராமேஸ்வரம் முதல் பூம்புகார் வரை செய்த களப்பணியில் கிடைக்கப்பெற்ற ஆய்வுத்தரவுகள் பின்னிணைப்புகளாக கொடுக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்புகளாகக் கொடுக்கப்பட்டுள்ள துறைமுகங்கள், கடற்கரையோர ஊர்கள் பற்றிய அமைவிடப் பட்டியல், நிலப்படங்கள், வரைபடங்கள் ஆகியன இந்நூலுக்கு அணி சேர்க்கின்றன. 2500 ஆண்டுகளுக்கு முன் புகழ்பெற்று விளங்கிய தமிழக துறைமுகங்கள், நகரங்கள் பலவற்றையும் தெரிந்துகொள்ள விரும்புவோருக்கு இந்நூல் கைவிளக்காக அமையும் என்பதில் ஐயமில்லை