பெண் அலுவலர் :
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் ஒரு கல்வெட்டு உள்ளது. அது கோவி ராககேசரிவர்மரான உடையார் ஸ்ரீ இராசராச தேவரின் அப்பத்திரண்டாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1248) பொறிக்கப் முப்பத்தாகும். இராசேந்திரசிங்க வளநாட்டுப் பொய்கை நாட்டுத் திருவையாற்றில் உலோகமாதே வீச்சுரம் உடையார் கோவிலுள்ளது.
அக்கோவிலுக்கு ஊர் அலுவலர்களின் கண்காணிப்பில் பொன்னாலான அணிகள் பல செய்யப்பெற்றன. அவ்வணிகலன்களைக் கண்காணிக்கும் ஆண் அலுவலர்களைப் போலப் பெண் அலுவலர்களும் நியமிக்கப் பெற்றிருந்தனர். அவர்கள் ‘அதிகாரிச்சி’ என்று அழைக்கப்பெற்றனர்.
‘பொய்கை நாட்டு திருவையாற்று ஓலோகமா தேவீசுரம் உடையார்க்கு அணுத்தர பல்லவரையனும் அதிகாரிச்சி சோமயன் அமித்திரவல்லியும்
என்று அக் கல்வெட்டுத் தொடர் விளக்குகிறது.
அதே மன்னனின் இருபத்தி நான்காம் ஆட்சியாண்டில் (கி.பி. 1240) அதே ஊரில் அக் கோவிலுக்குப் பொன்னாலான அணிகலன்களை எடையிட்டுக் கண்காணிக்கும் அலுவலர்களைப் போலப் பெண் அலுவலர்கள் நியமிக்கப் பெற்றிருந்தனர் என்பதை,
‘கல்லிலே வெட்டுவிக்க வெந்று உடந் கூட்டத்து அதிகாரம் செய்கின்ற கோவலூ ருடையான் காடந் நூற்றெண் மரையும் அதிகாரிச்சி எருதக் குஞ்சிரமல்லியையும் அரிளிச் செய்ய கல்வெட்டினபடி ‘
என்னும் கல்வெட்டுத் தொடரால் அறியலாம்.
பெண்கள் அடிமை :
கொடிய வறுமைக்காலத்தில் பெண்கள் தம்மை விலைக்கு விற்றுக் கொண்டுள்ளனர். மூன்றாம் குலோத்துங்கசோழனின் காலத்தில் இந் நிகழ்ச்சி நடந்துள்ளது. அக்காலத்தில் கொடுமையான பஞ்சத்திற்கு நாடு உள்ளாகியது. வயிராதராயர் என்னும் நிலக்கிழாரும் அவருடைய மனைவியும் தங்கள் பணிகளைச் செய்ய அடிமைகளாகப் பலரைப் பெற்றிருந்தனர். அவர்களுள் பெண்கள் மற்றும் மழலைகள் உள்பட முப்பத்தியாறு பேர் கோவில் மடம் போன்றவைகளுக்கு விற்கப்பெற்றனர். மன்னனின் ஆணை கிடைக்கப்பெற்றதும் அவ்வடிமை விற்பனை முறையைக் கோவிலில் கல்வெட்டாக வெட்டி வைத்தனர்.
இவ்வாறே சூலமங்கலத்தில் கணக்கர் அடிமைப்பெண்கள் இருவரை ‘ஆள்விலைப் பிரமாண இசைவுத்தீட்டு’ இருவர் தம் எழுதிக் கோவிலுக்கு விற்றுள்ளனர். இராசாதிராசன் ஆட்சியில் நால்வர்எழுநூறு காசுகளுக்கு தம்மை விற்றுக்கொண்டு கோவிலுக்குத் தேவரடியாரகியுள்ள செய்தியையும் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. 35
உடன்கட்டை ஏறுதல் :
மூன்றாம் குலோத்துங்கசோழனின் ஆட்சிக்காலத்தில் இராசராச மலைய குலராயன் என்னும் சிற்றரசனுடைய மனைவி உடன்கட்டை ஏறினாள். அவள் உடன்கட்டை ஏறும்முன் தன் கணவனுக்குப்பின் தான் உயிருடன் வாழ்ந்தாளாயின் தன்னையொத்த சக்களத்தியர்க்கு அடிமையாவாள் என்றும், தன்னைத் தீப்பாய வேண்டாமென்று தடுப்பவர் தம் மனைவியரைப் பிறர்க்கும் உரிமையாக்கும் பாவத்தை அடைவாரென்றும், தன்னைக் கட்டித் தீயிலிட்டுத் தன்னுயிர் போகச் செய்யாதவரும் அத்தகைய பாவத்தை அடைவார் என்றும் எலவானாசூர் என்னும் ஊரில் உள்ள
‘மலைய சூலராயநான நீரேற்ற பெருமாளான எதிரிகள் நாயநுக்குவேளைக்காறியான தேவப்பெருமாளேன் எதிரிகள் நாயனுக்குப்பின் இருந்தேநாகில் என் மாற்றாட்டி மாற்கு மண்டையுமிட்டு இவர்களுக்கு நீருங்குடுத்து இவர்கள் கலச்சோற்றையும் உண்கிறேன் என் மிணாளன் ஓடு என்னைச் சாவ வேண்டா மென்பார் என் மிணாளன் ஏறுகிற குதிரைக்குப் புல்லு இடும்காழிசந் எதிரிகள் நாயக முதுமையானுக்கு தன் மிணாட்டியையுங் குடுப்பான் நாந் சாவாதிருந்தே நாகில் என்னை நெருப்பில் கட்டிபுகடுதல் கொல்லுதலைச் செய்யாதவன் தன்னொட்டை யாற்கு தன் மிணாட்டியையுங் குடுத்து
என்னும் கல்வெட்டுத் தொடர் விளக்கிக் காட்டுகிறது.
கல்வெட்டில் வாழ்வியல்-டாக்டர். அ. கிருட்டிணன்
விலை: 125/-
Buy this book online: https://www.heritager.in/product/kalvettil-vaalviyal/
WhatsApp to Order: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
Telegram:
Website: www.heritager.in
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு
#books #tamilbookstore #Heritager wwww.heritager.in
Buy History and Heritage Related book online:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/