Description
பண்டைத் தமிழ்ப் பாடல்கள் அன்றைய வரலாற்றுப் பதிவுகள். மக்களுடைய வாழ்க்கை முறை, எண்ணங்கள், உணர்வுகள், பழகுமுறைகள் என அனைத்தையும் தெள்ளத்தெளிவாக நம் கண்முன்னே கொண்டுவரும் காலக் கண்ணாடிகள் அவை. படிக்கும்போதெல்லாம் நம்முடைய முன்னோரை நினைத்துப் பெருமிதம் கொள்ளவைக்கும் செய்திகள் அவற்றில் நிரம்பிக் கிடக்கின்றன. இந்நூல் சில சிறந்த தமிழ் இலக்கியப் பாடல்களை எடுத்துக்கொண்டு அவற்றை விரிவாகவும் எளிமையாகவும் விளக்குகிறது, அவற்றின் எழிலையும், அவற்றுள் பொதிந்திருக்கிற தகவல்களையும் எடுத்துக்காட்டி மகிழ்வூட்டுகிறது, மேலும் படிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டுகிறது.

























