தேவதாசி முறையின் வீழ்ச்சி

தேவதாசி முறையின் வீழ்ச்சி (கி.பி.1310-1378)

தேவதாசி முறையின் உள்ளுறைந்து வளர்ந்து வந்த பலவீனத்தை வெளிச்சமிட்டுக் காட்டுவதாக முஸ்லிம் இடையீடு அமைந்தது. முந்தைய காலத்தில் அது அரச ஆதரவைப் பெற்று ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை கிளைத்துத் தழைத்து வளர்ந்தோங்கியிருந்தது. ஆனால், இப்போது அது அந்த ஆதரவை இழந்ததோடு, சரிவையும் சந்திக்க நேர்ந்தது. கி.பி.1310 முதல் 1378 வரையிலான சுமார் அறுபத்தியெட்டு ஆண்டுக்காலம், அரசியல் ரீதியான வன்முறைமிக்க இழுபறிகளால் தமிழ்நாடு துயரப்பட நேர்ந்தது. இத்துயரச் சுமையின் தாக்கத்தை தேவதாசி முறையும்கூட உணர்ந்தது. இப்போது, அச்சமூட்டும் நிலைக்கு ஆளாகி விட்ட இந்த முறை, நாசகரமான தகர்வை நோக்கி இட்டுச் செல்லப்பட்டது.

இக்கால கட்டத்திய சாசனங்களும், காலவரிசையிலான வரலாற்று ஆவணங்களும்” துலுக்கர்’ கலகம், துலுக்கர் கலகமாப் துலுக்காணியம் மற்றும் துலுக்காவணம் என்றெல்லாம் வேறுபாடில்லாமல் ஒரே விதமாக இக்காலத்தைக் குறிப்பிட்டுள்ளன. முஸ்லிம் அச்சுறுத்தல், முஸல்மான்களின் கலகம், அல்லது முஸ்லிம் ஆட்சி’ என்பவையாகப் பொருள் தருவனவாக இவை அமைந்திருக்கலாம். குமார கம்பணன் காலத்திய சாசனம் ஒன்று அன்றைய நாட்களைத் ‘துலுக்கன்’ காலங்கள்’ என்பதாகக் குறிப்பிடுகிறது. பாண்டிய நாட்டில்’ அவர்களுடைய தவறான
ஆட்சி மற்றும் நிகழ்வுகளைக் கவறான முறையில் கையாளுதல் பற்றி மேற்பார்ல் ஆடும் கூறுகிறது. கிராமங்களை யாளுதல் சொத்து மேல் ஆவணங்கள் குடிக்கலல் உரிமைகளின் விற்பனை குறித்து பல குறிப்பிடுகின்றனன.

தங்களுடைய ஆக்கிரமிப்பையடுத்து முஸ்லிம்கள், உடனடியாகத் தமது கவனத்தைத் தமிழ்நாட்டுக் கோயில்களில்க திருப்பினர். விக்கிரக வழிபாடு, கவர்ந்து ஈர்க்கிற பெண்கள், சேர்த்து வைத்திருந்ததால் குவிந்து கிடந்த செல்வம் என்பன போன்ற செய்திகளை ஏற்கெனவே அவர்கள் கேள்விப்பட்டிருந்தனர். கோயில்களுக்குள் தமது அதிகாரக் கரங்களை நீட்டி அவற்றிலிருந்த பொக்கிஷ அறைகளை வலுக்கட்டாயமாகத் திறக்கச் செய்து, செல்வங்களைக் கொள்ளையடித்தனர். பெர்ஷிய மொழி இலக்கியங்கள், பயண இலக்கியங்கள், மற்றும் உள்நாட்டு சாசனங்கள்’ போன்ற இக்காலகட்டத்திய ஆவணங்கள் ஆலயங்களில் அவர்களுடைய அத்துமீறல் நடவடிக்கைகளைப் பதிவு செய்துள்ளன. பெரும் அளவிலான செல்வக் குவியல்களும், நகைகளும் வடக்கே” எடுத்துச் செல்லப்பட்டதாக அமீர் குஸ்ரு என்ற முஸ்லிம் வரலாற்றாளர் கூறுகிறார். போர்களின் போது, நிலங்களின் விளைச்சல்கள் பெருஞ் செல்வமாகக் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பல இந்து ஆலயங்களை அவர்கள் தகர்த்து நாசமாக்கினர்; அவற்றிலிருந்த விக்கிரகங்கள் உடைத்தெறியப்பட்டன அல்லது அப்புறப்படுத்தப்பட்டன; அவற்றில் நிகழ்ந்து வந்த வழிபாடு இடையூறுக்குள்ளாக்கப்பட்டது.

பல ஆலயங்கள், மசூதிகளாக மாற்றியமைக்கப்பட்டன. மேலதிகமாக, தங்களின் மதத்தினுடைய பெயரால் பெருமளவு படுகொலைகளை நிகழ்த்தினர். மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைத் தாக்குதல்களை மூரிஷின் பயணியான இபின் பதூதாவும், முஸ்லிம் வரலாற்றாளரான ஃபெரிஷ்டாவும் ” பதிவுகளாக்கிச் சென்றுள்ளனர். இதோடுகூட, கோயில்களுக்கென தானமளிக்கப்பட்டிருந்த புனித நிலங்களின் மீது பெரும் வரிவிதிப்புக்கு உத்தரவிட்டனர். ஆகவே, பெருமளவு நிலங்கள் பயிரிடப்படாமல் தரிசாக விடப்பட்டிருந்தன. புரவலர்களின் ஆதரவு இல்லல் மதரி சகோனிடகாரணத்தினால், இவ்வாறலகம் பொருளாதாரம், மதம் மற்றும் மக்களின் மீதான முஸ்லிம் ஆட்சியின் தாக்கம் ஆகப்பெரும் நாசகரமானதாக அமைந்தது.எவ்வாறாயினும், இத்தகைய தரவுகள், தேவதாசிகளுடைய நிலைமைகளின் மீது பெரிய அளவுக்கு வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறவையாக இல்லை. முஸ்லிம்களின் நாசகரமான தாக்குதல்களால் பல கோயில்கள் பாதிப்புக்கு ஆளான நிலையில், அவர்களுடைய கொள்ளைகள் மற்றும் படையெடுப்புகளுக்குப் பல தேவதாசிகள் பலிகடாக்களாகியிருக்கலாம் என்பது பெறப்படுகிறது. இவையெல்லாமாக, தேவதாசிகளை மிகமிக மகிழ்ச்சியற்ற- துரதிருஷ்டவசமான ஒரு நிலைக்கு ஆளாக்கி விட்டிருந்தன. முந்தைய காலகட்டத்தின் பெரும் செல்வாக்கும், உடைமைகளுமிக்க நிலையிலிருந்து தேவதாசிகள் சீர்குலைவுகள் மிக்க நாசகரமான வெவ்வேறு எல்லைகளுக்குத் தள்ளப்பட்டிருந்தனர். ஆரம்ப கால முகம்மதிய ஆக்கிரமிப்பாளர்களின் ” கரங்களில் மத்திய காலத்தின் தேவதாசிகள் நாசங்களால் துயரப்பட்டுக்கொண்டிருந்ததாக ஆர். சத்தியநாதய்யர் கூறுகிறார். முஸ்லிம் ஆட்சியின் வருகையை அடுத்து, குறிப்பாக வட இந்தியாவில் தேவதாசி முறை பயன்படுத்தப்படாத, புறக்கணிக்கப்பட்ட ஒன்றாக வீழ்ச்சியடைந்ததாக ஹெச்.டி.சங்காலியாவின் கூற்றுப்படி தெரியவருகிறது. தென்னிந்தியாவிலும் அவர்களுடைய சக் தேவதாசிகளுக்கும்கூட ஒரு வேளை இதே போன்ற ஒரு வேதனைமிக்க சரிவு ஏற்பட்டிருந்திருக்கக்கூடும்.

திருவொற்றியூர்க் கோயிலில் இருந்து பெறப்பட்ட சாசனம்ஒன்று, அந்தக் கோயில் கொள்ளையிடப்பட்டதாகவும், அதன் அதிகாரிகள் மிரட்டப்பட்டனரென்றும் பதிவு செய்திருக்கிறது. இந்தத் துயர நிகழ்வின் பின் விளைவாக, ஆலய நிறுவனத்தின் நடுவே மிகப்பெரும் குழப்பம் நிலவியது. தொடர் விளைவாக, சில பதியிலார் (தேவதாசிகள்) உணவுப் பொருட்கள் கிடைக்காமையாலும், ஆதரவின்மையாலும் இறந்திருக்கவும் கூடும். நிருவாம்பூர்” என்ற இடத்திலிருந்து கிடைத்துள்ள கல்வெட்டின்படி, கோயிலைச் சூழ அமைந்திருந்த திருமடவிளாகக் குடியிருப்புகளில் வசித்து வந்தவர்கள், அங்கு உடன் வாழ்ந்த நெசவாளர்கள் உட்பட வெவ்வேறு கிராமங்களுக்கு ஓடிச்சென்று விட்டனரென்று தெரிகிறது.

வட தமிழ்நாட்டினரான கைக்கோள முதலிகளே பெரும்பான்மையான நெசவாளர் சமூகத்தினரை உள்ளடக்கியவர் களாயிருந்தனர். அன்றைய நாட்களைச் சேர்ந்த மிகப் பல தேவதாசிகள் இந்தக் குறிப்பிட்ட சமூகத்திலிருந்து
வந்தவர்களாயிருந்தனர். ஆலய வளாகத்தை விட்டு வெளியேறிச் செல்ல நேர்ந்ததானது அனேகமாக அவர்களைத் தார்மிக ரீதியில் மிகத் தீவிரமான அறச்சீரழிவுக்கு உள்ளாக்கியிருக்க வேண்டும். முஸ்லிம் ஆட்சியால் அவ்வளவாகப் பாதிப்புக்கு உள்ளாகாத வட தமிழ்நாட்டுத் தேவதாசிகளின் நிலைமையே இப்படியானதென்றால், நேரடியாக முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியின் கீழிருந்த தென்தமிழகத்துத் தேவதாசிகளின் நிலைமை ஒரு வேளை படுமோசமானதாக ஆகியிருக்கக்கூடும்.

டெல்லியின் சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜி, தென் தமிழ்நாட்டுக் கோயில்களில் நடனப் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை ஒரு போதும் அனுமதித்ததில்லை என்று எஸ்.எம்.ஜாஃபர் கூறுகிறார். அவர்கள் பொது விலைமகளிராக உருவாகி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவராக அவர் இருந்திருக்கிறார். ஆகவேதான் இத்தகைய பெண்களைப் பிடித்து அவர்களுக்கு வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்குமாறு அவர் உத்தரவிட்டிருக்க வேண்டும்.பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியாவின் மீது படையெடுத்து வந்த மாலிக்காபூர், பணயக் கைதிகளாக இசைக்கலைஞர்கள், நடனப் பெண்கள், நடன மங்கையரின் ஆசிரியர்களான பிராமணர்கள் ஆகியோரை பத்தாயிரம் பேர் வரை தன்னுடன் கொண்டு சென்றதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சுல்தானை மகிழ்விப்பதற்காக இவர்களனைவரையும் ஒருவேளை அவன் கொண்டு சென்றிருக்கலாம். பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகரத்து அரசரை ஃபெரோஸ்ஷா தோற்கடித்தபோது, நடனக் கலைஞர்கள் இசைக்கலைஞர்களான இரண்டாயிரம் ஆண் – பெண்களை அளிக்க வேண்டுமென்று வற்புறுத்தியிருக்கிறான்.”

இதற்குச் சிறிது காலம் கழித்து, தென்னிந்தியக் கோயில்களில் இருந்து ஓர் ஆயிரம் பாடகர்களை இரண்டாம் அலாவுதீன் கொண்டு சென்றிருக்கிறான்.” தக்காணத்தில் சுல்தான்கள் இசை மற்றும் நடனக்கலைஞர்களின் பட்டாளம் ஒன்றையே பராமரித்து வந்துள்ளனர். கோல்கொண்டாவில் 20,000 இசைக்கலைஞர்கள் வரை இருந்திருக்கின்றனர்.4 அரண்மனைகளில் பணியமர்த்தப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட பல நடனப் பெண்கள், நாளடைவில் ராஜதாசிகளாக ஆகியுள்ளனர். தேவதாசி முறையின் சீரழிவைக் குறிக்கும் முதல் நிலையை இது அடையாளப் படுத்தியது என்பதாகபிரஜேஷ் பானர்ஜி கருதுகிறார்.” இவ்வாறாக முஸ்லிம்களின் குறுக்கீடு, தேவதாசி முறையின் கீழ்க்காணும் குறைபாடுகளை வெளிச்சமிட்டுக் காட்டியது: அவை (1) இந்த முறை சுயசார்புத் தன்மை கொண்டதாக இல்லை, (2) முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ், ஆதரவளித்து வந்த மூலவளங்கள் மறைந்து போயின, (3) இந்துயிஸத்தின் மீது முஸ்லிம்கள் எவ்வித மதிப்பும் கொண்டிருக்கவில்லை, (4) ஆக்கிரமிப்பாளர்கள் செல்வத்தையும், பெண்களையும் தேவைகளாகக் கொண்டிருந்தார்கள்.

சம்புவராயர்களின் பணி

தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த படைவீட்டின் அரச பரம்பரையான சம்புவராயர்களின் அரசு ஒன்று மட்டுமே இரண்டாவது பாண்டியப் பேரரசின் வீழ்ச்சியின் போது தாக்குப்பிடித்துத் தப்பிப் பிழைத்த ஒரே பிரதேசமாக ஒருக்கால் இருக்கக்கூடும். வீர சம்பா அதனுடைய அரசனாக இருந்த போதுதான் தமிழ்நாட்டின் மீது முஸ்லிம் ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்துள்ளன. ஆகவே, நிகழ்வுகளின் வளர்ச்சிப் போக்குகளுக்கு அவன் ஒரு நேரடி சாட்சியாவான். மதுரையில் தங்களுடைய அரசப் பிரதிநிதித்துவ அமைப்பாக ‘சுல்தானித்தை’ நிறுவும் பணியில் முஸ்லிம்கள் ஏற்கனவே ஈடுபட்டிருந்த காரணத்தினால், வீரசம்பாவுக்கு அடுத்து பட்டத்திற்கு வந்த வென்றுமண்கொண்டான் (கி. பி. 1335-1336) அரசு தொந்தரவுகட்கு உள்ளாகவில்லை.ஆனால், முஸ்லிம் ஆக்கிரமிப்பால் ஏற்கெனவே நடந்தேறியிருந்த நாசங்களைச் சரி செய்து மீள்கட்டமைப்புச் செய்தாக வேண்டிய கடமை இராஜநாராயண சம்புவரையனுக்குரியதாக (கி.பி.1339-1340) விடப்பட்டிருந்தது. அவன் தனது அரசுக்குட்பட்ட பகுதியில் மேற்கொண்ட மறுசீரமைப்புப் பணியின் தன்மை மீது கல்வெட்டுகளின் சாசன ஆதாரங்கள் மிகுந்த வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறவையாக உள்ளன. ஆலயங்களில் வழிபாடுகள் நிகழ்த்துவதை அவன் மீளவும் உயிர்ப்பித்ததுடன், கோயில் நிர்வாகத்தையும் மறுசீரமைப்புச் செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. முஸ்லிம்களால் கைவிடப்பட்டு நலிவுற்றிருந்த ஆலயங்களுள் சிலவற்றை பழுதுபார்த்தும், மறுகட்டுமானம் செய்வித்தும் அவன் பணியாற்றியிருப்பதாகவும் சொல்லப் பட்டுள்ளது. இந்த அரசனின் 12வது (கி.பி.1351-1352) ஆண்டு ஆவணம்” மடம் என்ற ஊர்க்கோயிலில் இருந்துகண்டறியப்பட்டது. குழந்தையாண்டார் கோயிலைச் சேர்ந்த ஒரு நடன மங்கையால் மேற்கண்ட கோயிலின் கல்யாண மண்டபம் கட்டுவிக்கப்பட்டது என்ற தகவலை அந்த ஆவணம் பதிவு செய்துள்ளது.

இவனுடைய 17-வது ஆண்டைச் சேர்ந்த சாசனமொன்று (கி.பி.1356-1357), காஞ்சி நகர வீதிகளில் தெருக் கூத்து நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன என்று குறிப்பிடுகிறது. ஒரு நாடகக் குழு, இந்த நாடகங்களை நிகழ்த்துவதற்குரிய அனுமதியை அரசனிடமிருந்து பெற்றிருந்த தகவலை நமக்குச் சொல்லுகிறது. முந்தைய நாட்களில், அதனுடைய குடியிருப்புவாசிகளாலேயே கைவிடப் பெற்றிருந்த திருமட விளாகம் ஒன்றை மீண்டும் குடித்தனக்காரர்களைக் கொண்டு அவன் நிரப்பியதாகச் சொல்லப்பட்டுள்ளது.இவ்வாறாக சில தேவதாசிகள், உயிர் வாழ்வதற்கான குறைந்தபட்ச வாழ்வாதாரங் களோடு மட்டுமே ஜீவித்திருந்ததற்குரிய மூலத்தரவுகளை பெறுவதற்கு முடிந்துள்ளது.தேவதாசிகளுக்குள் தகராறுகள்

திருவொற்றியூர் ஆலயத்தின் தேவதாசிகளுக்கு இடையிலான தகராறுகள் இந்த நாட்களில் மீண்டும் நிகழத் தொடங்கியிருந்தன. தேவதாசிகளின் வெவ்வேறு பிரிவினரான ரிஷபத் தளியிலார். தேவரடியார் மற்றும் பதியிலார் ஆகியோர் இந்தத் தடவை கோயிலில் பணி செய்வதை நிறுத்தினார்கள். கி.பி.1350-ம் ஆண்டின் சாசனம் ஒன்றின்படி அவர்களுக்குள் ஒரு வகையான உடன்பாடின்மை உருவாகி வளர்ந்ததற்குப் பிரதான காரணமாகச் சுட்டிக்காட்டப்படுவது, கோயிலுக்கு அவர்கள் ஆற்ற வேண்டிய சேவையில் முன்னுரிமை ஒழுங்கு தொடர்பானதாகும். மிக மோசமான பணி நிலைமைகளும்-மிக சொற்பமான மதிப்பூதியம் உள்ளிட்டு – எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்ப்பது போன்ற நிலையை உருவாக்கியிருக்க வேண்டும். தேவதாசிகளுக்கிடையிலான இத்தகைய தகராறுகளுக்குத் தீர்வு காண்பதற்கே இராஜநாராயணனின் காலத்தில் மிகக் கணிசமான பகுதியை ஒதுக்கியிருந்திருக்க நேர்ந்திருக்கும். அவர்களுக்கு நடுவே எழுந்திருக்கக்கூடிய உயர்நிலைப் படிவரிசை சார்ந்த கருத்து வேற்றுமைகளைத் தீர்த்து வைத்தாக வேண்டியது அவனுடைய பொறுப்பாகும். முந்தைய முடிவின்படி, தேவரடியார் மற்றும் ரிஷபத் தளியிலார் ஆகியோரைக்காட்டிலும் கோயிலின் பதியிலார் உயர்ந்த சமூக அந்தஸ்து கிடைக்கப் பெற்றவர் களாயிருந்தார்கள்.

கல்வெட்டுப் பொறிப்பாளர் எழுதியிருக்கிறார்: “பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்த விதம் நடைமுறைப் படுத்தப் பட்டதிலிருந்து, தேவரடியாருடையதைக் காட்டிலும் பதியிலாரின் சமூக அந்தஸ்து உயர்ந்த மட்டத்திலிருந்திருக்கவேண்டும்; அதே போல் ரிஷபத்தளியாருடையதைக் காட்டிலும் தேவரடியாரின் சமூக அந்தஸ்து உயர்ந்த மட்டத்திலிருந்திருக்க வேண்டும் என்பது தெரியவருகிறது ..” இவ்வாறு உயர்நிலைப் படிவரிசையில் பதியிலாருக்கும், அவர்களுக்கு அடுத்து தேவரடியாருக்கும் மேநிலை அளிக்கப்பட்டதானது தகராறுகளை உருவாக்குவதற்கு அடிப்படையாக அமைந்திருந்ததென்று தோன்றுகிறது.

தமிழகத்தில் தேவதாசிகள் – முனைவர் கே.சதாசிவன் (ஆசிரியர்), கமலாலயன் (தமிழில்)
விலை: 450/-
Buy this book online: https://www.heritager.in/product/tamizhagathil-thevathasigal/
WhatsApp to Order: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
Website: www.heritager.in

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு

#books #tamilbookstore #Heritager wwww.heritager.in

Buy History and Heritage Related book online:

Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/