புது மண்டபம் வசந்த மண்டபம்

‘புது மண்டபம் வசந்த மண்டபம்’

திருமலைநாயக்கர் கட்டிய சிறந்த கட்டடங்களில் இதுவும் ஒன்று. இது மிகுந்த சிற்ப வேலைப்பாடு அமைந்த கல்மண்டபம்.

ஆண்டுதோறும் வைகாசித் திங்களில் நடைபெறும் வசந்தோற்சவத்திற்காகக் கட்டப்பட்ட மண்டபம் ஆகும்

நாயக்கர் காலத்தில் இக்கட்டடம் கட்டப்பட்டதால் ‘புது மண்டபம்’ எனப் பெயர் பெற்றது.

இம்மண்டபத்தை சிவபெருமான் கோயிலுக்கு முன் அமைக்க முடிவு செய்தார்.

அச்சமயத்தில் அவ்விடம் அபிஷேக பண்டாரத்திடம் இருந்தது.

அப்பண்டாரத்திடம் நேரிலே சென்று தமது உள்ளக் கிடக்கையை எடுத்துச் சொன்னார் மன்னர்.

அவ்விடத்தை எடுத்துக்கொள்வதற்கு பண்டாரம் இசைந்தார்.

கோயிலின் வடபகுதியில் விக்ரமபாண்டியர் பட்டர் வகைக்குப் பதினாறு வீடுகளும்,

குலசேகர பாண்டியர் பட்டர் வகைக்குப் பன்னிரண்டு வீடுகளும் கட்டிக் கொடுத்து விட்டு அவ்விடத்தைக் கைப்பற்றிய மன்னர் பழைய வீடுகளை இடித்து மட்ட படுத்திவிட்டு 1628 மே திங்களில் மண்டபம் கட்டத் தொடங்கினார்.

இம் மண்டபம் சிற்ப வேலைப்பாடுகளுடன் முடிய ஏழாண்டுகளாகின. அதாவது 1635 ஆம் ஆண்டு முடிந்தது.

இவ்வரிய மண்டபத்தைக் கட்டி முடித்தவர் திருமலை நாயக்கரே ஆவார்.

இம் மண்டபத்தில் 124 சிற்பத் தூண்கள் இருக்கின்றன. மேல் தளம் கல்லால் மூடப்பட்டுள்ளது.

இதன் உள்வரிசைக் கால்களில் திருமலை நாயக்கர் முதலிய பத்து நாயக்கர்களுடைய உருவங்கள் நன்றாகச் செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் மேற்கு ஓரத்தில் கருங்கல் சவுக்கை ஒன்று இருக்கிறது. திருவிழாக் காலங்களில் குளிர்ச்சியாக இருக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக, மண்டபத்தின் தெற்கு வடக்குப் பக்கங்கள் தண்ணீர் நிரப்பி வைக்கும்பொருட்டு அகழி போல அடிவாரம் இருக்கிறது.

எப்பொழுது மழை பெய்தாலும் இரு பக்கங்களிலும் தண்ணீர் நிறையத் தேங்கி விடும்.

கோடைக் காலத்தில் இவ்வகழி போன்ற அமைப்பில் தண்ணீர் நிரப்பி விட்டால் குளிர்ச்சியாக இருக்கும்.

அதில் தங்கும் மக்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த மண்டபம் முழுவதும் பலவகையான கடைகள் இருக்கின்றன.

திருமலை நாயக்கர் – கள்ளிப்பட்டி சு. குப்புசாமி
விலை: 160/-
Buy this book online: https://www.heritager.in/product/thirumalai-nayakkar-kallippatti-kuppuswamy/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in

Social Media Handles:
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
Website: www.heritager.in

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு

#books #tamilbookstore #Heritager wwww.heritager.in

Buy History and Heritage Related book online:

Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/