சாதி மற்றும் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள் :
இந்தியாவில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சாதி முறை ஏற்பட்டது. இந்துக்களிடம் மட்டுமல்ல, முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள். சீக்கியர்கள் ஆகியோரிடமும் சாதிப் பிரிவினை உள்ளது. சாதி முறைக்குப் பல அம்சங்கள் இருந்தாலும், உயர் சாதியினர் கீழ்ச் சாதியினரைச் சுரண்டுவதையும், நாட்டு வளங்களைக் கீழ்ச் சாதியினர் அனுபவிக்க விடாமல் உயர் சாதியினர் தடுப்பதும் இந்த அத்தியாயத்தில் விவாதிக்கப்படுகிறது.
நாட்டில் சில பிரிவினர் தீண்டத் தகாதவர்கள் என்று கூறி முறை அறிவித்தது. அவர்கள் ஆலயத்திற்குள் செல்ல முடியாது. கிராமத்தின் பெறக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க முடியாது. சொந்தமாக நிலம் வைத்துக்கொள்ள முடியாது. உயர் சாதியினர் தாழ்த்தப்பட்டவர்களைத் தொட்டால் தீட்டு என்ற நடைமுறை இருந்தது. கிராமங்களில் அவர்கள் விவசாயக் கூலிகளாக இருந்தார்கள். அத்துடன் மலம் அள்ளுதல், இறந்த கால்நடைகளை அப்புறப்படுத்தல் போன்ற பணிகளைக் கட்டாயமாகச் செய்யவேண்டும். கிராமத்தில் அறுவடை நடைபெறுகின்ற போது, நிலப்பிரபு அவர்களுக்குக் குறைவான தானியத்தைக் கொடுப்பார். ஆண்டு முழுவதும் அவர்கள் மேற்கூறிய வேலைகளைச் செய்யவேண்டும்.
19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி காரணமாக இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு ஏற்பட்டது. மாகாராஷ்டிரத்தில் ஜோதிபா பூலே மற்றும் கேரளத்தில் ஸ்ரீ நாராயணகுரு சாதிக் கொடுமைகளைக் கண்டித்தார்கள். 1920-களில் இருந்து மகாத்மா காந்தி தீண்டாமைகளை எதிர்த்துப் பேசினார்கள். தாழ்த்தப்பட்ட பிரிவினர் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படவேண்டும் என்று வைக்கம் (1924-25) குருவாயூர் (1931-32) ஆகிய இடங்களில் சத்தியாக்கிரகப் போராட்டங்கள்நடைபெற்றன. இந்த சமூகம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் செய்த ஒழுக்கு கடும் என்று காந்தி பிரசாரம் செய்தார். பிரிட்டிஷ் அரசாங்கம் தாழ்த்தப் பட்டவர்களை இந்துக்களிடமிருந்து பிரித்து அவர்களுக்குத் தனித் தொகுதியை ஏற்படுத்தியது 1932. காந்தி பிரிட்டிஷ் அரசின் முடிவை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்.
1920-களில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் என்ற பேரறிஞர் தாழ்த்தப்பட்ட மக்களின் முக்கியத் தலைவராக உருவானார். அவர் மகாராஷ்டிரத்தில் உள்ள மகர் என்ற பிரிவைச் சேர்ந்தவர். 1932-ல் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித் தொகுதியை எதிர்த்த காந்திஜி உண்ணாவிரதம் இருந்தபொழுது அம்பேத்கர் காங்கிரஸ் மற்றும் இந்துப் பிரதிநிதிகளுடன் ஓர் உடன்பாட்டுக்கு வந்தார். அது புனே உடன்பாடு என்று சொல்லப்படுகிறது.
அம்பேத்கர் 1936 வாக்கில் தாழ்த்தப்பட்டவர்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறி மற்றொரு மதத்தில் சேரவேண்டும் என்று முடிவு செய்தார்.சீக்கிய மதத்தில் சேரலாமா என்று சிந்தித்தார். பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் கல்வி, வேலை ஆகிய துறைகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சில சலுகைகளைக் கொடுத்திருந்தது. மதம் மாறியபிறகு அந்தச் சலுகைகள் இல்லாமல் போய்விடும் என்பதால் மதம் மாறுவதை அம்பேத்கர் தள்ளிவைத்தார். 1936-ல் லேபர் கட்சி(ILP)யை நிறுவினார். பம்பாய் சட்டமன்றத்துக்கு 1937-ல் தேர்தல் நடைபெற்றபொழுது அவரது கட்சி போட்டியிட்டு சில இடங்களில் வெற்றி பெற்றது. 1942-ல் அகில இந்திய ஷெட்யூல்டு சாதியினர் சம்மேளனத்தை நிறுவினார். 1940-களில் இந்தியாவின் வைசிராய் அவரைத் தன்னுடைய நிர்வாகக் குழுவில் உறுப்பினராக நியமித்தார். மற்ற மாநிலங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனி அமைப்புகள் ஏற்பட்டன. பீஹாரில் ஜகஜீவன்ராம் தாழ்த்தப்பட்ட மக்களின் தனிப்பெரும் தலைவராக இருந்தார். அவர் காங்கிரஸ் கட்சியிலும் முக்கியமான தலைவர்களில் ஒருவர். பஞ்சாபிலும் வங்காளத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சங்கங்கள் நிறுவப்பட்டன. ஆனால், அந்தச் சங்கங்கள் பிரிட்டனை ஆதரிக்கின்ற மாநிலங்களைக் கட்சிகளுடன் கூட்டு சேர்த்தன. கிராமங்களில் தங்களுக்கு விதிக்கப்படுகின்ற அருவருப்பான வேலைகளை ரத்து செய்யவேண்டும் நிலம்வைத்துக்கொள்ள உரிமை வேண்டும். தரிசு நிலம் தங்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்படவேண்டும் என்று தாழ்த்தப்பட்ட மக்கள் கோரினார்கள். பல மாநிலங்களில் காந்தியவாதிகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி, வேலை, மனித உரிமைகள் ஆகியவற்றைப் பெற்றுக் கொடுத்தார்கள்.
இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 17-ஆவது ஷரத்து தீண்டாமையை ஒழித்தது. யாராவது தீண்டாமையைக் கடைபிடித்தால் சட்டம் அவர்களைத் தண்டிக்கும். சட்ட மன்றங்களிலும் கல்வி நிலையங்களிலும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. முதல் 10 ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும், தொடர்ச்சியாக அது நீடிக்கப்பட்டது.
சுதந்திரம் அடைந்த இந்தியாவில் அம்பேத்கர் சட்ட அமைச்சராகவும் அரசியல் அமைப்புச் சட்டத்தைத் தயாரிக்கின்ற குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அரசியல் அமைப்புச் சட்டத்தை பாராளுமன்றம் நிறைவேற்றியது. நேருவுக்கும் அம்பேத்கருக்கும் வேறு பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அம்பேத்கர் மந்திரி சபையிலிருந்து விலகினார். 1952 தேர்தலில் தாழ்த்தப்பட்ட சாதியின் சம்மேளனம் பல தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களிடம் இவர்கள் தோல்வியடைந்தனர். 1956-ல் அம்பேத்கர் 5 லட்சம் மகர்களை (60 லட்சம் நபர்கள் என்று சிலர் சொல்கிறார்கள்) புத்த மதத்துக்கு மாற்றினார்.
1956-ல் அம்பேத்கர் மரணமடைந்தார். கட்சியில் அடுத்த தலைமையை அவர் உருவாக்கவில்லை. அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்ததாகச் சொல்லப்பட்டது. அந்தக் கடிதத்தின்படி 1957-ல் ரிபப்ளிகன் ஆட்சி நிறுவப்பட்டது. பம்பாய் சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட்டது. சிலர் வெற்றி பெற்றனர். கட்சித் தலைவர்களுக்கிடையில் தகராறுகள் ஏற்பட்டு கட்சியில் பிளவுகள் ஏற்பட்டன. மகாராஷ்டிரத்தில் முதலமைச்சராக இருந்த ஒய்.பி.சவான் அவர்களோடு உடன்பாடு கொள்வதில் அக்கறை காட்டினார்.
1970-களில் தாழ்த்தப்பட்டவர்கள் தங்களைத் தலித்துகள் என்று அழைத்துக்கொண்டார்கள். அவர்களிடம் அதுவரை இல்லாத போர்க்குணமும் ஏற்பட்டது. முதலில் இலக்கியத்திலும், பிறகு அரசியலிலும் அவர்கள் ஈடுபட்டார்கள். அவர்கள் புரட்சியைப் பற்றிப் பேசினாலும் தங்களுக்கென்று ஸ்தூலமான திட்டத்தைத் தயாரிக்கவில்லை. 1978-ல் மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதை எதிர்த்து குன்பிகள் என்ற பிரிவைச் சேர்ந்த விவசாயிகள் (அவர்கள் பிராமணர்கள் அல்லர்) கலகங்களைச் செய்தார்கள். ரிபப்ளிகன் கட்சியில் அடிக்கடி பிளவுகள் ஏற்படுவதைப் போல தலித் சிறுத்தைகள் கட்சியிலும் பிளவுகள் ஏற்பட்டன. அம்பேத்கரின் பேரனாகிய பிரகாஷ் அம்பேத்கர் 1990-ல் எல்லாத் தலித் அமைப்புகளையும் ஒற்றுமைப்படுத்த முயற்சி செய்தார். பம்பாயில் 5 லட்சம் தலித்களைக் கொண்ட பேரணி நடைபெற்றது.
வடஇந்தியாவில் 1980-களில் கன்ஷிராம் தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சி அமைக்கப்பட்டது (அவருடைய மறைவிற்குப் பிறகு உத்திரப் பிரதேச முதலமைச்சரான மாயாவதி கட்சிக்குத் தலைவராக இருக்கிறார்). ஆட்சியைக் கைப்பற்றுவதே கட்சியின் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியுடன் கூட்டுசேர்த்து தன்னுடைய வாக்கு சதவிகிதத்தை தொடர்ச்சியாக அதிகப்படுத்தி வருகிறது. உத்திரப் பிரதேசம் பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தக் கட்சிக்குக் கணிசமான செல்வாக்கு கிடைத்தது. 2007. மே மாதத்தில் உத்திரப் பிரதேசம் சட்டமன்றத் தேர்தல்களில் இக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்தது. இதற்கு முன்பு 3 சந்தர்ப்பங்களில் மாயாவதி உத்திரப் பிரதேச முதலமைச்சராக இருந்திருக்கிறார். ஆனால், இப்பொழுது, அவர் கூட்டணி இல்லாமல் வெற்றிபெற்று முதலமைச்சரானார். மொத்தம் 403 இடங்களின் 206 இடங்களில் அவரது கட்சி பெற்றது. பிராமணர்கள். தாக்கூர்கள், முஸ்லிம்கள் மற்றும் பின்தங்கிய வகுப்பினர் இந்தக் கட்சிக்கு ஆதரவு அளித்தார்கள். ஏனென்றால்,மாயாவதி வேட்பாளர் தேர்வில் எல்லாச் சாதியினரைச் சேர்ந்தவர்களுக்கும் இடம் கொடுத்தார். ‘நலிந்த பிரிவினருக்கு வேலை கொடுப்பேன். உத்திரப் பிரதேச மாநிலத்தை நாட்டின் சிறந்த மாநிலமாக மாற்றுவேன்’ என்று அவர் வாக்குறுதியளித்தார். இட ஒதுக்கீட்டில் சாதி அடிப்படையாக இருக்காது. வருமானமே அடிப்படையாகக் கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். எல்லா மாநிலங்களிலும் தலித்துகள் அம்பேத்கர் சங்கங்களை நிறுவி உணர்ச்சியோடு செயல்படுகிறார்கள்.
கிராமங்களில் உள்ள தலித்துகள் புத்த மதத்தில் சேர்ந்த பிறகும் இந்து தெய்வங்களை வழிபடுகிறார்கள். அவர்களுடைய பூஜைகளில் அம்பேத்கர் மற்றும் புத்தர் படங்கள் வைக்கப்படுகின்றன. அவர்கள் கணபதி பூஜை மற்றும் கௌரி பூஜைகளை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய தலித்துகளுக்குக் கிறிஸ்துவ தேவாலயங்களில் சமத்துவ உரிமைகள் அளிக்கப்பட வில்லை. அவர்கள் பாகுபாடு செய்யப்படுகிறார்கள். முஸ்லிம்களாக மாறிய தலித்துக்களும் இதேபோன்று பாகுபடுத்தலுக்கு உட்பட்டிருக் கிறார்கள். தலித்துகளுக்குள்ளேயே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. மஹாராஷ்டிரத்தில் ‘மகர்’கள். ‘மங்கு’கள் என்று பிரிக்கப்படுகிறார்கள். ஆந்திராவில் மாலா மற்றும் மபிசா என்று பிரிக்கப்படுகிறார்கள். வட இந்தியாவில் சமர் மற்றும் சுஹ்ரா என்று பிரிக்கப்படுகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசாங்கம் சலுகை அளிக்கிறது. ஆனால், தாழ்த்தப்பட்டவர்களில் பொருளாதார வளர்ச்சியடைந்த பிரிவினர் சலுகைகளைக் கைப்பற்றுகிறார்கள். எனவே, அவர்களுக்கு மத்தியில் வெவ்வேறு பிரிவுகளுக்கிடையில் போட்டி உள்ளது.
மொத்தத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு மதமாற்றம் அல்லது இட ஒதுக்கீடு மட்டும் காரணமல்ல. இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் தலித்துகளுக்கு வீட்டுமனைப் பட்டா அளிக்கப்பட்டது. தொழில் நடத்துவோர்க்குக் கடன் மற்றும் மானியம் அளிக்கப்பட்டது. ஆந்திராவில் தலித்துகள் நிலம் வாங்குவதற்கு அரசாங்கம் கடன் மற்றும் மானியம் அளிக்கிறது. ஆகவே அவர்களுடைய நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவில் சாதிக்கும் கல்விக்கும் தொடர்பு இருக்கிறது. உயர் சாதியினர் எல்லோருமே கல்வி கற்றிருக்கிறார்கள். தாழ்ந்த சாதியினர்- குறிப்பாக, பெண்கள் கல்வி பூஜ்யமாக இருக்கிறது. 1991-ல் இந்தியாவில் ஆண்களில் 64 சதவிகிதத்தினரும் பெண்களில் 39 சதவிகிதத்தினரும் கல்வி கற்றிருந்தார்கள். தாழ்த்தப்பட்டவர்களில் ஆண்களில் 46%-ம் பெண்களில் 19%-ம் கல்வி கற்றிருந்தனர். உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் ஆண்களில் 56%-ம் பெண்களில் 25%-ம் கல்வி கற்றிருந்தார்கள். தாழ்த்தப்பட்டவர்களில் ஆண்களில் 39%-ம்
பெண்களில் 8% -ம் கல்வி கற்றிருந்தனர். கேரளத்தில் ஆண்களில் 94%-ம்பெண்களில் 86%-ம் கல்வி கற்றிருந்தார்கள். தலித்துகளில் அது 85 மற்றும் 73% ஆக இருந்தது.
சமூக முன்னேற்றத்துக்குக் கல்வி வளர்ச்சி மாபெரும் தூண்டுதலாக இருக்கிறது. ஆகவே தலித்துகளுக்கும் அவர்களின் யோக பிரிவினர்களுக்கும் கல்வி கற்கின்ற வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும்.
இந்திய அரசாங்கம் மண்டல் கமிஷன் அறிக்கை அமுலாக்கப்படும் என்று 1990-ல் அறிவித்தது. அதை ஆதரித்தும் எதிர்த்தும் கிளர்ச்சிகள் நடைபெற்றன. பின்தங்கிய வகுப்பினர்கள் என்று சொல்லப்படுபவர்கள் பிராமணர்கள் மற்றும் ஷத்திரியர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இடையில் இருப்பவர்கள். உயர் சாதியினர்களோடு ஒப்படைக்கப் படுகின்ற பொழுது அவர்களுக்கு சில பாதிப்புகள் இருந்தன. ஆனால் தாழ்த்தப்பட்டவர்களைப் போல அவர்கள் ஒடுக்கப்படவில்லை. அவர்கள் நிலம் வாங்க முடியும், பொருளாதார வசதிகளைப் பெறமுடியும். (தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமை அப்படியல்ல.) பிரிட்டிஷார் காலத்தில் ஜமீன்தார்களுக்கும் விவசாயிகளுக்கும் இடைத்தரகர்களாக அவர்கள் இருந்தார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு அவர்கள் கல்வி மற்றும் அரசியல் துறைகளில் முன்னேறி செல்பவர்களுடன் இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களை அவர்கள் சுரண்டுகிறார்கள். மண்டல் அறிக்கை தவறான புள்ளி விவரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. தலித்துகளின் சமூக நீதிக்கான போராட்டத்திற்கும் பின்தங்கிய மக்களின் இயக்கங்களுக்கும் சம்பந்தமில்லை.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா – பிபன் சந்திரா மிருதுளா முகர்ஜி ஆதித்ய முகர்ஜி
விலை: 630/-
Buy this book online: https://www.heritager.in/product/suthanthiraththirku-piraku-india/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in
Social Media Handles:
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
Website: www.heritager.in
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு
#books #tamilbookstore #Heritager wwww.heritager.in
Buy History and Heritage Related book online:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/