திராவிடர்களின் ஆரியத்திற்கு முந்திய நாகரிகம் :
தொல்திராவிடர்கள் ஒருவேளை வாழ்வின் மேன்மையான கலைகளில் பழக்கம் இல்லாமல் இருந்திருக்கலாம் என்றாலும், எவ்விதத்திலும் நாகரிகமற்ற அல்லது தரம் தாழ்ந்த மக்கள் எனக் கூறிவிட முடியாது. காட்டில் வாழும் குடிகளின் நிலை எவ்வாறு இருந்திருந்தாலும், பிராமணர்கள் அவர்களுக்கு இடையே வருவதற்கு முன் நாகரிகத்தின் கூறுகளையாவது திராவிடர்கள் பெற்றிருந்தனர் – அவர்களை இவ்வாறு கூறுவதுதான் பொருத்தம் – என்பதை ஐயமுறத் தேவையில்லை.
தமிழ் மொழியிலிருந்து எல்லாச் சமஸ்கிருதச் சொற்களையும் நாம் அகற்றிவிட்டால், எஞ்சியுள்ள தொல்திராவிடர்களின் சொற்கள் ஆரிய மயமாக்கப்படாத திராவிடர்களின் வாழ்க்கையின் உண்மையான, எளிய ஆனால் காட்டுவாசிகளிடமிருந்து மிக விலகிவந்துவிட்ட, சித்திரத்தை நமக்குத் தருகின்றன. வெளிப்படையான, சமஸ்கிருத மூலத்திலிருந்து விடுபட்ட தனித்துவத்தை நமக்குக் காட்டக்கூடிய தமிழ் மனம் என ஒன்று இல்லை எனத் திரு கர்ஸன் கருத்து கொண்டிருக்கிறார்; இதற்கு மாறான கருதுகோள் வலிமை உடையது என்றால், எஞ்சியுள்ள ஆதாரங்கள் இந்து மகத்திலிருந்து வேறுபட்ட ஒரு மதத்தை உட்கொண்டிருப்பதைக் கண்டுகொள்ள வேண்டும், இந்து மதத்திலிருந்து வேறுபட்ட பண்டைய மற்றும் தற்கால ஆரியமயமாக்கப்படாத திராவிடர்களின் மதத்தின் சுவடுகள் இவர்களிடையே இருப்பது இணைப்பில் (Appendix) சுட்டிக் காட்டப்படும். சமஸ்கிருதக் கலப்பிலிருந்து விடுவிக்கப்பட்டால்.
மொழியில் உள்ள பழந்தமிழ்ச் சொற்கள் நமக்குத் தரக்கூடிய தமிழ் மனம், பழக்கங்கள், மற்றும் சமயம் முதலியவற்றைக் குறித்த தகவல்களை நான் முன் வைக்கிறேன்.
பண்டைத் தமிழர்களிடையே வழங்கிவந்த சொற்களைச் சான்றாகக் கொண்டு பின்வரும் தகவல்களை நாம் அறியலாம்: அரசர்கள் இருந்தனர். அவர்கள் காவலுடைய ‘அரண்மனை’யில் வசித்தனர். குறுநிலப் பகுதிகளை ஆண்டனர். விழா நிகழ்வுகளில் [அரசர் மீது] பாடல் பாடும் ‘பாணர்’ இருந்தனர். எழுத்தாணியால் பனை ஏடுகளில் எழுதுவதற்குரிய வரிவடிவம் உடையவர்களாக இருந்தனர். இந்த ஏடுகளின் தொகுதி ‘சுவடி எனப்பட்டது. அவர்களிடையே தலைமுறை தலைமுறையாக வரும் புரோகிதர்களும், விக்கிரக வழிபாடும் இல்லை; ‘சொர்க்கம்’ ‘நரகம்’ பற்றியும் ‘ஆன்மா’, ‘பாவம்’ பற்றியும் கருத்துகள் இருந்ததாகத் தெரியவில்லை; ஆனால் கடவுள் இருப்பதாக நம்பினர், அந்தக் கடவுளைக் ‘கோ’, அதாவது ‘அரசன்’ என்று அழைத்தனர். மிக இயற்கையான இந்தப் பெயர் சம்பிரதாயமான இந்து சமயத்தில் அறியப்படாத ஒன்று. அந்தக் கடவுளுக்கு ஆலயம் எழுப்பினர்.அதனைக் ‘கோ-இல்’, அதாவது கடவுளின் இல்லம் என அழைத்தனர்; ஆனால், அவர்கள் வழிபட்ட முறையின் தன்மையைக் காட்டும் அடையாளங்களை என்னால் கண்டுகொள்ள முடியவில்லை; அவர்களிடம் ‘சட்டமும்’, ‘பழக்க மரபுகளும்’ இருந்தன. ஆனால் வழக்குரைஞர்களோ நீதியரசர்களோ இல்லை. திருமணம் செய்துகொள்வது அவர்களிடையே நிலைபெற்றிருந்தது.
‘தகரம்’, ‘ஈயம்’, ‘துத்தநாகம்’ தவிர ஏனைய சாதாரண உலோகங்களை அறிந்திருந்தனர்; புதன் மற்றும் சனி இரண்டைத் தவிரப் பிற பண்டையோர் பொதுவாக அறிந்திருந்த கோள்களை அறிந்திருந்தனர்; எண்களில் நூறு வரை அவர்களால் எண்ணத் தெரிந்திருந்தது; உயர் எண்களான ‘இலட்சம்’, ‘கோடி’ ஆகியவற்றை அறிந்திருக்கவில்லை. அவர்களிடம் ‘மருந்து’ இருந்தது, ஆனால், மருத்துவ இயல்’ இல்லை. (பயிற்சி பெற்ற] மருத்துவர் இல்லை; சிற்றூர்களும் ஊர்களும் இருந்தனவே தவிர நகர்கள் இல்லை; ஓடங்கள், படகுகள், கப்பல்கள் (சிறிய மேல் தளத்துடன் கடலோரக் கலன்கள்) இருந்தன. வெளிநாட்டு வணிகத்திற்குரியவை இல்லை; கடல் கடந்த மக்களுடன் தொடர்பு இல்லை, சிலோன் நீங்கலாக – அங்கு ஒருகால் ஆழமற்ற நீர்வழியாக நடந்துகூடச் சென்றிருக்கலாம்; தீவு, கண்டம் குறித்த நிலவியல் கருத்திற்கான சொற்கள் இல்லை. வேளாண்மை நன்கு அறிந்தவர்களாக இருந்தனர், போர்புரிவதில் மகிழ்ச்சியுற்றனர். வில்லும் அம்பும் ஈட்டியும் வாளும் ஏந்தியிருந்தனர். சாதாரண, தேவையான கைத்தொழில்கள்-நூற்றல்,நெய்தல்,சாயமேற்றல் உட்பட-அவர்களிடம் வானவியலிலும் இருந்தல்கள் நூற்றல், நெய்யில் சிறந்திருந்தது. ஆயினும் அடக்கம். செய்யப்பட்ட இடங்களால் தெரியவருகிறான் கலைகளில் பழக்கமற்றிருந்தனர்; அதுபோன்றே. சோதிடத்திலும் ; தத்துவத்தின் எந்தத் துறையிலும், ஏன் கூட கருத்தைச் செலுத்தாதவர்களாக இருந்தனர். அவந்த சொற்கைைமயாக மலராத அறிவார்ந்த நிலை மனச் செயல்பாடுகள் குறித்த சொற்களின் வழித் தெரியவருகிறது. மனம் என்பதற்கு அவர்களிடம் உள்ள சொற்கள் ‘ஈருள்’ (?) (முந்திய கிரேக்க ஹொரென் horen) மற்றும் நினைத்தல் என்பதைக் குறிக்கும் ‘உள்ளுதல்’, என்பதிலிருந்து உள்ளம்; ‘எண்ணம்’ என்ற சொல் அவர்களிடம் உண்டு, ஆனால் நினைவு, சீர் தூக்கல், மனசாட்சி ஆகியவற்றை ‘எண்ணம்’ என்பதிலிருந்து வேறுபடுத்தித் தெளிவாக்கும் சொற்கள் இல்லை; அவர்களிடம் ‘மனத்துணிவு’ (Will) என்பதற்கான சொல் இல்லை; ‘The will’ என்பதை வெளிப்படுத்த ‘உள்ளம் சொல்வதை நாள் செய்யப்போகிறேன்’ எனக் கூற வேண்டியவர்களாக உள்ளனர். இலக்கணத்திலும்
பிராமணர் வருவதற்கு முன் திராவிடர்களின் சமூக நிலையைப் பழந்தமிழ்ச் சொற்கள் மூலம் சுட்டிய இந்தச் சிறு விளக்கம் அவர்களிடயே நாகரிகத்தின் கூறுகள் ஏற்கனவே இருந்தன என்பதைக் காட்டப் போதுமானவை. அடிப்படைக் கூறுகளுக்கு மேல் அதிகமாக அவர்கள் பெற்றிருந்திருக்க வில்லை; சில துறைகளில், அவர்கள் தாங்கள் குருவாக மதித்த, மேற்பார்வை யாளர்களாக ஏற்றுப் பணிந்துபோன பிராமணர்களுக்கு நூற்றாண்டுகள் பின் தங்கியிருந்தனர். ஆனால், அவர்கள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ள அவர்களை விட்டிருந்தால். குறைந்தது நடத்தையிலும் சுதந்திரமான சிந்தனையிலும் இப்போது இருக்கும் நிலையினும் மேம்பட்டிருப்பார்கள் என்பதெல்லாம் விவாதத்திற்கு உரியவை. அவர்கள் ஏற்றுக்கொண்ட இறுக்கமான சாதிச் சட்டங்களும், நடைமுறைக்கு ஒவ்வாத பல தெய்வ வழிபாட்டுத் தத்துவமும், மிகவும் சிக்கலான தேவையற்ற நடைமுறைச் சடங்குகளும் பிராமணர்களிடமிருந்து அவர்கள் பெற்ற சிந்தனைப் பண்பாட்டையும் உயர்ந்த நாகரிகத்தையும் பயனற்றவையாக ஆக்கும் எதிர்வினையாக அமைந்தன என நான் கருதுகிறேன்.
திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம் – பா.ரா.சுப்பிரமணியன்
விலை: 1200
Buy this book online: https://www.heritager.in/product/drivida-allathu-thennindiya-kudumba-mozhikalin-oppilakkanam/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in
Social Media Handles:
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
Website: www.heritager.in
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு
#books #tamilbookstore #Heritager wwww.heritager.in
Buy History and Heritage Related book online:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/