சமணர்புடைப்புச் சிற்பங்களில்

உலகப் பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு November 19முதல் 25வரை மரபுசார் நூல்கள் 1000 ரூபாய்க்கு மேலாக புத்தகம் வாங்கினால் நமது Heritager.in The Cultural Store 10% தள்ளுபடி விலையில்

சமணர்புடைப்புச் சிற்பங்களில் :

கழுகுமலையில், உயர்ந்த மலையின் வடபுறச் சரிவில் உள்ள சமணர்புடைப்புச் சிற்பங்களில், மூன்று வரிசைகளாக அமர்ந்தநிலையில் முக்குடைநாதர் சிற்பங்கள் மற்றும் ஆதிநாதர், நேமிநாதர். பார்சுவநாதர், மகாவீரர் போன்ற தீர்த்தங்கரர்களின் திருவுருவங்கள், அரைமலை ஆள்வார், திருமலைத்தேவர், திருமலைமேற்படாரர். நகரத்தான் செய்வித்த தேவர் போன்ற தலக்கடவுளர் திருமேனிகள், தரணேந்திரன், அம்பிகா. பத்மாவதி போன்ற இயக்கன் (யக்ஷன் . இயக்கி யக்ஷி) சிற்பங்கள். பணியாட்கள் மற்றும் பணிப்பெண்களின் சிற்பங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட படிமங்கள் இடம்பெற்றுள்ள செய்தியை முன்னரே கண்டோம். இவற்றுள், இயக்கன், இயக்கி சிற்பங்கள், குறிப்பாக தரணேந்திரன், அம்பிகா, பத்மாவதி சிற்பங்கள். சிற்ப அம்சங்களிலும், சிற்ப உருவ அமைதியிலும், ஆபரண அலங்காரங்களிலும், வெட்டுவான் கோயில் சிற்பங்களை ஒத்திருக்கின்றன. மேலும், வெட்டுவான் கோயிலில் இடம் பெற்றுள்ளது போலவே, சமணர்புடைப்புச் சிற்பங்களிலும், யாளிச் சிற்பங்களும், யானைமுகச் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. வெட்டுவான் கோயில் சிற்பங்கள் உருவ அளவில் பெரியதாகவும், இங்குள்ள சிற்பங்கள் உருவ அளவில் சிறியதாகவும் காணப்படுகின்றன.

கழுகுமலையிலுள்ள சமணர்புடைப்புச் சிற்பங்களுள் மிக்க வனப்பும் கலையழகும் வாய்ந்தது, பார்சுவநாதரின் திருமேனியாகும். பார்சுவநாதரின் தலைக்குப் பின்னால், பார்சுவநாதரைப் போன்றே மிக்க எழிலும் கலையழகும் கொண்ட தரணேந்திரன் சிற்பமும், இச்சிற்பத்தின் தலையைச் சுற்றிலும் ஐந்தலைப் பாம்பின் படங்களும் இடம்பெற்றுள்ளன. தரணேந்திரன், தலையில் கிரீடமகுடமும், காதுகளில் பெரிய பத்ரகுண்டலங்களும், கழுத்தில் முத்துமாலை போன்ற அணிகலன்களும், முன்னங்கைகளில்முத்து வளையல்களும், பின்னங்கைகளில் சுருண்ட பாம்பு போன்ற தோள்வளைகளும் அணிந்து அழகாகக் காட்சி தருகிறான்.

அடுத்து, அரைமலை ஆள்வாருக்கு இடப்புறத்தில், தனியாக மாடத்தில் பத்மாவதியின் அருட்கோலத்தினைக் காணலாம். நான்கு கரங்களை உடையவளாய், பத்மபீடத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள். தேவியின் வலது கால் பீடத்தில் மடக்கி வைத்தவாறும்இடது காலைத் தொங்கவிட்டும் சுகாசன நிலையில் இருக்கிறாள். தலையில் கூம்பு வடிவ கரண்ட மகுடமும், காதுகளில் பத்ர குண்டலங்களும், கழுத்தில் முத்துமாலைகளும், முன்னங்கைகளில் முத்துவளையல்களும், பின்னங்கைகளில் தோள்வளைகளும் அணிந்து அழகுக்கு அழகு சேர்க்கிறாள். பருத்துத் திரண்ட மார்பகங்கள், தசை மடிப்புடன் கூடிய வயிற்றுப்பகுதி, கருணையே வடிவான முகம் ஆகியவை சிற்பத்திற்கு உயிரூட்டுவனவாக அமைந்துள்ளன. மேலிரு கைகள் வஜ்ரம், பரசு ஆகியவற்றையும். கீழிருகைகளில் இடதுகை பழம் ஒன்றினைத் தொடையில் வைத்துப் பிடித்தவாறும், வலதுகை ஆகூயவரதத்திலும் காட்சி தருகின்றன. கழுகுமலையிலுள்ள சமணர் புடைப்புச் சிற்பங்களில், நான்கு கரங்களுடன் திகழும் திருமேனி இது ஒன்றே எனலாம். சமணத் திருவுருவ நூல்களில், பத்மாவதி, தாமரைமலர், பாசம், அங்குசம். அக்கமாலை ஆகியவைகளோடு. தாமரை மலரில் அல்லது குக்கூடசர்பத்தில் அமர்ந்து காட்சி தருவதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், கழுகுமலையில் பத்மாவதியின் கரங்களிலுள்ள பொருட்கள் மாறுபட்டுக் காணப்படுகின்றன.

இதேபோல பார்சுவநாதரது இடதுபுறத்தில், பத்மாவதி ஒயிலாக நிற்கும் திருமேனி வடிக்கப்பட்டுள்ளது. உடலில் மூன்று வளைவு களுடன். திரிபங்க நிலையில். சற்று முன்னோக்கியவாறு காட்சி தருகிறாள். வலது கை வணங்கும் நிலையிலும், இடது கை லோலஹஸ்த்தமாகத் தொங்கவிடப்பட்டும் உள்ளன. தலையில் கரண்ட மகுடமும், காதுகளில் பத்ரகுண்டலங்களும், கழுத்தில் முத்து மாலைகளும். முன்னங்கைகளில் முத்து வளையல்களும், பின்னங் கைகளில் தோள் வளைகளும், இடையில் மெல்லியதாக மேகலையும் அணிந்து அழகுக்கு அழகு சேர்ப்பதாக அமைந்துள்ளது.பருத்துத் திரண்ட மார்பகங்கள், ஒடுங்கிய இடையுடன். ஒருகால் நேராக ஊன்றப் பெற்றும், இன்னொரு கால் சற்று மடங்கியவாறும், சிறிது சாய்வாக பின்னோக்கித் தள்ளப்பெற்ற புட்டப் பகுதியையும் கொண்டு அழகின் வடிவாகக் காட்சியளிப்பதைக் காணலாம்.

நேமிநாதரின் இடப்புறத்தில், அகலமான மாடத்தில். அம்பிகாவின் அழகுத்திருமேனி நிறுவப்பட்டுள்ளது. மாடத்தின் மத்தியப் பகுதியில், திவிபங்க நிலையில் இரு வளைவுகளுடன் கூடிய உடலமைப்புடன், வலது கையைப் பணிப்பெண்ணின் தலைமீது ஊன்றியும், இடதுகை ஆகூயவரத முத்திரையிலும் தேவி காட்சி தருகிறாள். கருணையின் வடிவான முகப்பொலிவு, நீண்ட உடலமைப்பு, பருத்து முன் தொங்கும் மார்பகங்கள். ஒடுங்கிய இடை, தசை அமைப்புடன் கூடிய அடிவயிறு, அகன்று பருத்த புட்டங்கள் ஆகிய அனைத்து அம்சங்களும் அம்பிகாவுக்கு உயிரூட்டுவனவாக அமைந்துள்ளன. தலையில் கூம்பு வடிவ கரண்டமகுடம், காதுகளில் பத்ர குண்டலங்கள், கழுத்தில் முத்துமாலைகள், முன்னங்கைகளில் முத்து வளையல்களும் பின்னங்கைகளில் தோள்வளைகளும் அணிந்திருக்கிறார். வலதுகால் சற்று முன்னோக்கி மடங்கியும். இடதுகால் நேராகத் தரையில் ஊன்றியும் இருக்கின்றன. தேவியின் இடப்பக்கத்தில் சிம்மவாகனம் செதுக்கப்பட்டுள்ளது.

பொற்கொடியும், மின்போலவும், புயல் போலவும் ஐவகைக் கூந்தலையும், வளைந்த தொடிபுனைந்த தோளினையும் உடைய வட்டிகையிலே எழுதின பாவை போன்ற இயக்கியரை,

“பொலங்கொடி மின்னிற் புயலைங் கூந்தல் தொடிவளைத் தோளி” (சிலம்பு. 11: 109,111)

என்றும். “வட்டிகைப் பூங்கொடி” (சிலம்பு. 11:121) என்றும். இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். இந்த இயக்கியர் சிற்பங்களைப் போன்றே பணியாட்கள் மற்றும் பணிப் பெண்களின் சிற்பங்களும் ஆபரண அலங்காரங்களுடன் செதுக்கப்பட்டுள்ளன. தலையில் கூம்பு வடிவ கரண்டமகுடம், காதுகளில் பத்ர குண்டலங்கள், கழுத்தில் முத்துமாலைகள், கையில் முத்து வளையல்கள் அணிந்து காட்சி தருகின்றனர். மேலும், வெட்டுவான்கோயிலில் இடம்பெற்றுள்ளது போலவே, இங்கும் ஏராளமான கருக்கு வேலைபாடுகளும் இடம்பெற்றுள்ளன. எனவே, வெட்டுவான் கோயிலும். சமணர் புடைப்புச் சிற்பங்களும் குறைந்த இடைவெளிக் காலத்தில்

குடைவிக்கப்பட்ட செதுக்குவிக்கப்பட்ட சிற்பங்களாக. கலைக்கோயில்களாகத்தான் இருக்க வேண்டும். வெட்டுவான் கோயிலும் சரி, சமணர்புடைப்புச் சிற்பத்தொகுதிகளும் சரி. திராவிடக் கலைப்பாணியைப் பறைசாற்றுவனவாகவே 
அமைந்துள்ளன

கழுகுமலை வெட்டுவான் கோவில் – செ.மா.கணபதி


Buy this book online: https://www.heritager.in/product/kazhugumalai-vettuvan-kovil/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in

Social Media Handles:
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு

#books #tamilbookstore #Heritager wwww.heritager.in

Buy History and Heritage Related book online:

Buy Tamil Inscription Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/inscriptions/
Buy Tamil Literature Books: https://www.heritager.in/product-category/books/tamil/literature/
Buy Tamil Archaeological Books: https://www.heritager.in/product-category/books/tamil/archaeology/
Buy Tamil Temple Architecture and Art Books: https://www.heritager.in/product-category/books/tamil/art/
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/