சமய வழிபாட்டிலும் வரலாற்றிலும் மரக்கால்

“பல்லவர் காலத்திற்கு முன்பு மரக்கால் எனும் அளவையியல் கருவி அம்பணம் என்ற பெயரில் வழங்கப்பட்டது. இத்தகைய மரக்கால் பல்லவர் காலத்தில் பயன்பாட்டில் இருந்ததை இலக்கியங்களும் கல்வெட்டுகளும் நமக்குக் குறிப்புகள் தருகின்றன.

பல்லவர் காலத்திய சைவ, வைணவ சமயங்களின் புராண வரலாறும் மரக்காலைப் பற்றிக் குறிப்புகள் தருகின்றன. மரக்காணம் எனும் ஊரிலுள்ள பூமீஸ்வரர் திருக்கோயிலுள்ள சிவபெருமானின் பக்தன் ஒருவன் மரக்காலை சிவனாக பாவித்து வழிபாடு செய்துள்ளான். அதுவே பின்னர் சுயம்பு லிங்கமாகக் காட்சிகொடுத்தது என்றும் அதுவே தற்போதைய மரக்காணம் என்றும் புராணச் செய்திகள் குறிப்பிடுகின்றன. எனவே மரக்காலின் பயன்பாடு வழிபாட்டு மரபிலும் இருந்துள்ளது என்பதை அறியமுடிகிறது. அதேபோன்று உலகிற்கெல்லாம் படியளந்தவர் பெருமாள் என்பர். அவர் தானியங்களை மரக்கால் துணைக் கொண்டு படியளத்துள்ளார். ஆகவே சமய வழிபாட்டு முறைகளிலும் இந்த மரபுசார்ந்த மரக்காலின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது எனலாம்”. – நூலிலிருந்து

பழந்தமிழர் வாழ்வியலும் வரலாறும்- முனைவர் ஆ.ராஜா

விலை: ₹160

Buy: https://www.heritager.in/product/palanthamilar-vaalviyalum-varalarum/