பனைமரக்கூட்டம் சிறப்புகள்

பனைமரக்கூட்டம் சிறப்புகள்

திண்டுக்கல் இயற்கையான மலைவளமும், நிலவளமும் மிக்க நிலப்பகுதியாகவும், பாண்டிய நாட்டையும் சோழநாட்டையும் இணைக்கும் எல்லைப்புறமாகவும் உள்ளது.

இங்கு கிடைத்த தொல்பழங்காலச் சின்னங்களையும், வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்-பிராமி கல்வெட்டுக்களையும் கொண்டு இம்மாவட்டத்தின் தொன்மையை அறியலாம்.

திண்டுக்கல்லிருந்து கருவூருக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது தாடிக்கொம்பு. தாடிக் கொம்பு என்பதற்கு பனைமரக் கூட்டம் என்பது பொருள்.இதனால் புராண வரலாற்றிலும் இவ்வூர்க்குத் தாலவனம் என்று பெயரிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தாலம் என்பதும் பனைமரத்தையே குறிக்கும் சொல்லாகும்.

குடகனாற்றின் வடகரையில் அமைந்த இவ்வூர் ஆங்கிலேயர் காலத்தில் கி.பி.1801 வரை இப்பகுதியின் தலைமையிடமாக இருந்திருக்கிறது.
திண்டுக்கல்லில் அடிக்கடி போர் நிகழ்ந்துள்ளதால் அமைதியை நாடித்திண்டுக்கலில் வாழ்ந்த மக்கள் இவ்வூரில் குடியேறியதாகவும் கூறுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனிக்கு அடுத்து மிகச் சிறப்பு வாய்ந்த கோயிலான செளந்தரராசப் பெருமாள் கோயில் உள்ளது. தேரோடும் விதிகள் சூழ்ந்த பெரிய திருமதிலின் உட்புறம் ஐந்து சன்னதிகள் உள்ளன. இக்கோயில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டு விசயநகர-மதுரை நாயக்கர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

இக்கோயில் சிறப்பாக தளவரிசையில் விழும் மழைநீர் நிற்காமல் எளிதில் ஓடிமறையும் வகையில் அமைந்துள்ளது, இன்றும் கண்டுபிடிக்க முடியாத அதிசயமாக காணப்படுகிறது.

இக்கோயிலில் மகாமண்டபமும், ஊஞ்சல் மண்டபமும் அரங்க மண்டபமும் கலைச்சிறப்பு வாய்ந்த தூண்களையும், சிற்பங்களையும் கொண்டுள்ளன.

மகாமண்டபத்தில் இசைத்தூண்களும், சைவ- வைணவ ஒற்றுமையைக் காட்டும் வகையில் அரங்க மண்டபத்தில் மகாபாரதம், இராமாயணம் தொடர்பான சிற்பங்களும், ஒரே கல்லில் வடிக்கப்பட்ட பதினான்கு தூண்களும் உள்ளன.தூண்களில் காணப்படும் சிற்பங்கள் 1.கருடன் மீது அமர்ந்து வில்லம்புடன் போர்க் கோலத்தில் காட்சி தரும் இராமர். 2. அர்ச்சுனன் 3. வைகுண்ட நாதர் 4.கருடநாராயணன். 5. நரசிம்மர் 6. திரிவிக்கிரமர் 7. வேணு கோபாலன் 8. வீரபத்திரர் 9.ஊர்த்தவதாண்டவர் 10. காளி 11. மன்மதன், ரதி 12. கார்த்தவீரன்.

இச்சிற்பங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சிற்பம் மன்மதன் ரதி சிற்பமாகும். மன்மதன், ரதியை குறித்த புராணப்பாடல்களும் உள்ளன.

மன்மதன் பாடல்
செந்தாமரை முகமும் சிறந்த முத்துப் பல்லொளியும்
சிகலோதுகண்ணுக்கும் சலமான உதடுகளும்
செவியிரண்டும் வெள்ளையடி செவ்வியரே உந்தனுக்கு
சேகரிமேதமடி சீமாட்டி உன் கூந்தல்
செம்மலரும் அங்கை அசைய செய்திராட்சை உன்வதனம்
செந்தணல் விழியாளேசெம்பகப்பூ மாந்துளிரே .

ரதிபாடல்
கந்தர் கிருபாகரனேயென் கண்ணுக்குக் கண்மணியே
காதல் திரவியமே கலியாணசிங்கார
கலைகள் புராணமெல்லாம் கற்பூரவாசகமே
கந்தபரிமளங்கள் கலந்தணையுமெய்யேனே காந்தமதிவிதனகார்விண்ணன் புத்திரனே

தாடிக்கொம்பு கோயிலிலுள்ள சிற்பங்கள், சிற்பிகளும் போற்றி மதித்த கலைசிறப்பு வாய்ந்த சிற்பங்களாக உள்ளன. சிற்பிகள் கோயிலை நிர்மாணம் செய்யும்போதோ(அ) திருப்பணி வேலை செய்யும்போதோ, தாரமங்கலம் விதானத்தையும்,தாடிக் கொம்பு கோயில் சிற்பங்களையும் ஆவுடையார் கோயில் கொடுங்கையையும் திருவீமிழலைக் கோயில் வௌவால் நெற்றி மண்டபத்தையும் தவிர்த்து சிற்பம் (ம) கட்டட வேலைகளைச் செய்து தருவோம் என்று எழுதித் தருவார்கள் என்று கூறுகின்றனர்.

இக்கோயில் கருவறை , மண்டபம், பிரகாரங்கள் ஆகியவற்றில் முழுமையற்ற நிலையில் தமிழ் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

செளந்தரராசப் பெருமாள் கோயில் கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தின் தென்புறத்தில் 13-ஆம் நூற்றாண்டு துண்டுக்கல்வெட்டுகள் உள்ளன. ஒரு துண்டுக்கல்வெட்டில் கோயிலின் பெயர் சுந்தரராசப் பெருமாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் பிரகாரத்திலுள்ள வடக்கு, தெற்கு, மேற்குச் சுவர்களில் காணப்படும் துண்டுக் கல்வெட்டுகளும் கி.பி.13-ஆம் நூற்றாண்டை ச் சார்ந்த பிற்காலப்பாண்டியர் காலத்தவையாகும் கருவறை சுவரிலுள்ள 15-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கோயில் நிர்வாகம் பற்றி குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு தமிழ்நாட்டில் நாயக்கர்காலக் கலைச் சிறப்பு வாய்ந்த சிற்பங்கள் காணப்படும் இடங்களில் ஒன்றாகத் தாடிக்கொம்பு திகழ்வது திண்டுக்கல்லின்
வரலாற்று சிறப்பாகும்.(நூலிலிருந்து)

தெரியப்படாத திண்டுக்கல்-பூர்ணா
விலை: 120/-
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Buy this book online: https://www.heritager.in/product/theriyappadaatha-dindugal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers