காவிரியின் அணைக்கட்டுகள்

காவிரியின் அணைக்கட்டுகள் :

கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இது காவிரிமீது கட்டப் பட்டுள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது.
திருச்சியில் அகண்ட காவேரி என்று அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது. அதில் காவிரி ஆற்றின் கிளை கல்லணையை வந்தடைகிறது.
கல்லணை காவிரியை, காவிரி ஆறு, வெண்ணாறு, புது ஆறு கொள்ளிடம் என 4 ஆகப் பிரிக்கிறது.
பாசனக் காலங்களில் காவிரி வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும் வெள்ளக் காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணீர் கல்லணையில் இருந்து திறந்து விடப்படும்.

அதாவது வெள்ளக் காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடதுபுறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படும். எனவே டெல்டா மாவட்டத்தின் பல இலட்சம் ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்படுகிறது.

இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும் தற்போது புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது.

இதுவே உலகின் மிகப் பழமையான நீர்ப் பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்றுவரை வியத்தகு சாதனையாக புகழப்படுகிறது.

கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தை தடுத்து நிறுத்தி வருவது அதிசயம் ஆகும்.

1839ல் அணையின்மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வ ணையைக் காண வருவதால் இது ஒரு சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது.(நூலிலிருந்து)

அணைக்கட்டுகள்சொல்லும் அற்புத வரலாறு –
ஜெகாதா
விலை : 220 /-
வெளியீடு: யூனிவர்சல் பப்ளிஷிங்
Buy this book online: https://www.heritager.in/product/anaikattugal-sollum-arputha-varalaaru/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers