1.சிந்து இனம் (பணி)
சிந்துப் பள்ளத்தாக்கில் நுழைந்தபோது ஊர்சுற்றி ஆரிய குதிரை வீரர்களை எதிர்த்து நின்ற இனம் உண்மையில் சிந்துப் பள்ளத்தாக்கில் மிக உயர்ந்த நிலையில் இருந்த இனமாகும். அவ்வினத்தின் நகரங்களின் இடிபாடுகள் மொகஞ்சோதாரோ, ஹரப்பாவிலே கிடைத்துள்ளன. அதன் கலாசாரச் சின்னங்கள் தெற்கிலே குஜராத்வரையிலும், கிழக்கிலே யமுனா பள்ளத்தாக்கு வரையிலும் கிடைத்துள்ளன. கிழக்கில் அவை இன்னும் வெகுதூரம் வரை கிடைத்தாலும் வியப்படைவதற்கில்லை. ஆனால் ரிக்வேத ரிஷிகள் தமது பயங்கரப் பகைவர்களென்று குறிப்பிடப் படுபவர்கள் சமவெளியைச் சேர்ந்த சிந்து கலாசார இனத்தவர் திராவிடர் – அல்லர் ரிஷிகள் குறிப்பிட்டவர்கள் மலைகளில் வசித்து வந்தார்கள், அவர்களுடைய கோட்டைகள் (புரங்கள்) கற்களால் கட்டப்பட்டவை. இக்கோட்டைகளைத் தகர்க்க ஆரியர்கள் பெருமுயற்சி செய்யவேண்டி இருந்தது. சிந்து இனத்தாருடன் ஆரியர்களின் போர்கள் நிகழ்ந்தகாலம் கி.மு. 1500ஆம் ஆண்டு. மலைக்கோட்டைகளைத் தகர்த்த காலம், அதாவது ரிக்வேதத்தின் மிகப் பழைய ரிஷிகளின் காலம் அதன் பிந்தைய முந்நூறு ஆண்டுகளாகும். அந்த இடைக்காலத்தில் ஆரியர்கள் தவளைத் தாவலில் அல்லாமல், பாம்பு வேகத்தில் முன்னேறிக்கொண்டே சென்று சப்தசிந்து (யமுனையிலிருந்து சிந்து நதியைக் கடந்த பூமி) வரை பரவிவிட்டார்கள். மொகஞ்சோதாரோ . ஹரப்பா போன்ற தாமிரயுகத்தைச் சேர்ந்த அழகிய நகரங்களை வெற்றி கொண்டாலும், ஊர்சுற்றி ஆரிய மக்கள் அவற்றில் வாழத் தயாராயில்லை. பசுக்களையும், குதிரைகளையும் மேய்த்துக்கொண்டிருந்த இவர்கள் கும்பலாக இருக்கும் வீடுகளிலோ, கிராமங்களிலோதான் வாழ்ந்துவந்தார்கள். அவர்களது கிராமங்களும் நிலையானவை அல்ல. கால்நடை வளர்ப்பில் வாழ்க்கையை ஓட்டுபவர்கள், தினைமாவிற்காகக் கொஞ்சமாக சவ்வரிசியைப் பயிரிட்டுக்கொள்பவர்கள் ஒரே இடத்தில் வருடம் பூராவும் இருக்க விரும்புவார்களா? இவர்களும் மத்திய ஆசியாவிலிருந்து வந்த சகர், ஹூணர், அவார். துருக்கியர் போன்று ஊர் சுற்றிகளைப் போலவே குதிரை ரோமங்களாலான கூடாரங்களுக்கு பிரதிகூலமான விஷயம் இந்தியாவில் பெய்யும் மழைக்குப் புல் பூண்டுகளால் வேய்ந்த குடிசைகள் பயனுள்ளவை.
ஆரியர்களை முதன் முதலில் எதிர்த்து நின்றவர்கள் சிந்து இனமக்கள்.அவர்கள் முதலில் சுலபமாக ஆயுதங்களை வைத்திருக்கமாட்டார்கள் என்பது நிச்சயம். ரிக்வேத காலத்தில் அவர்கள் ஆரியர்களின் பிரதான் என்பதாக இருக்கவில்லை. ஆரியர்கள் தம்முடைய எதிரிகள் அனைவரையும் – சிந்து இனத்தவரையும், மலைப்பகுதி எதிரிகளையும் கிருஷ்ணர்கள் (கருப்பர்கள்) என்றும், தபிஸ்கள் (அடிமைகள்) அகிருவ தஸ்யுக்கள் என்றும் சொன்னார்கள். பகைவர்களிடையே ஒரு முக்கிய வேற்றுமையும் உள்ளது. ஆரியர் ‘பணி’ இனத்தாரை மட்டும் பால்சுரக்கும் பசுமாடுகளாகக் கருதினார்கள்; அவர்களைப் பகைவர்களாகக் கருதவில்லை ‘பணி” இனத்தவர் செல்வச் செழிப்புடன் இருந்தார்கள். அவர்களிடமும் நிறைய பசுக்கள் இருந்தன. அவர்களுடனும் அவ்வப்போது சச்சரவுகள் நடந்தாலும், அவற்றுக்காக ஆரியர் பெருங்கவலை கொள்வதில்லை. இந்தப் ‘பணி’ இனத்தாரே ‘சிந்து’ இனப் பிரதிநிதிகள்.
‘பணி’ என்னும் சொல்லிலிருந்தே ‘பணள்’ (விற்பது). ‘பண்ய’ (விற்பனைப்பொருள்). ‘ஆப்பண்’ (கடைவீதி), ‘வணிக்’ (பனியா, வியாபாரி) என்ற பல்வேறு சொற்கள் தோன்றின. ‘பணி’ என்னும் பெயர் ஆட்சியை இழந்தாலும், உயர்ந்த கலாசாரத்தைக்கொண்ட சிந்து இனத்துக்கு மிகப் பொருத்தமான பெயராகும். ஆட்சியதிகாரத்தை இழந்துவிட்ட பிறகு அடிமைத்தனத்திலிருந்து தப்பித்துக்கொண்டவர்கள் விவசாயமும்.வியாபாரமும் செய்தே தமது வாழ்க்கையை ஓட்ட இயலும் அவ்விரண்டிலும்கூட வியாபாரமே மிக்க லாபகரமானது. ‘ரிக்வேத’த்தில் ‘பணி’ இனத்தவரைக் குறித்துப் பல இடங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களைப் பற்றி குறிப்பிட்ட ரிஷிகளில் பரத்வாஜர், வசிஷ்டர், தீர்க்கதமா, ஒளசத்ய, கோதமராஹீகண், கிருத்ஸமத் ஹிரண்யஸ்தூப், அஸித்தேவல் போன்ற புகழ்பெற்றவர்கள் இருக்கிறார்கள்எல்லோருக்கும் வயோதிகரான பரத்வாஜர், “அக்னி ‘பணி’ இனத்தாரின் செல்வத்தைப் பறித்துக்கொள்கிறார்” (6-16-31 என்கிறார். “தாரிள் இனத்தாருக்கும். குத்ஸவுக்கும் சண்டை நடந்தது. அதைப்பற்றி பரத்வாஜர் கூறும்போது, “இந்திரனே, உன்அருள் பெற்ற கவிஞர் குத்ஸவை விட்டு நூற்றுக்கணக்கான ‘பணி’ இனத்தார் ஓடிவிட்டார்கள்” ரூ-20-4) என்கிறார். ஆரிய ரிஷிகள் பலாத்காரமுடன் மட்டுமே -‘பணி’களின் செல்வத்தைப் பறிக்கவில்லை; அவர்களைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டும் தன்னலம் பேண விரும்பினார்கள். பரத்வாஜரே சொல்கிறார் (6-53-3): “ஓ பூஷாதேவனே! கொடுக்க விரும்பாதவர்களையும் தானமளிக்கும்படி செய்’ ‘பணி’ இனத்தாரின் மனசை இளகச் செய்” மேலும் கூறுகிறார் (6-53-51″ ‘பணிகளின் நெஞ்சைக் கிழித்தெறி! அவர்களை எங்களுக்கு வசமாக்கு! கத்தியால் ”பணி’களின் நெஞ்சைக் கீறிவிடு!’ பரத்வாஜரின் சமகாலத்தவரான வசிஷ்டரும் ‘பணி’களுக்கு எதிராக எல்லாவித வழிமுறைகளையும் அனுசரிக்க விரும்புவர். அவர் கூறுகிறார். “நல்ல வேள்வியான அக்னி ‘பணி’ இனத்தாரின் வாசலைத் திறந்தார். அவர்கள் பக்தியான. வேள்வியற்ற உளறு வாய்க்காரரும், கொடுமைக்காரரும் ஆவர். அந்த தஸ்யுக்களை அக்னி நாசமாக்குகிறார்.” இதே காலத்தவரான ரிஷி உசத்ய புத்திர தீர்க்கதமா. “ஓமித்ராவருணரே. சிந்து இனத்தார் உம்முடைய தெய்வத்தன்மையைப் பெறவில்லை. ‘பணி’களும் அதை அடையவில்லை” (1-151-9) என்கிறார். முதலில் குருடராக இருந்து பின்னர் பார்வை பெற்ற தீர்க்கதமாகோதமர் என்ற பெயரில் புகழ் பெற்றதாக பின்னாட்களில் கூறப்பட்டது. ஆனால் இக்கூற்று ‘ரிக்வேதத்துக்கு எதிரானது. தீர்க்கதமா உசத்யவின் மகன், கோதமர் ராஹுகண் மகன். இவ்விருவரின் சூக்தங்களும் (செய்யுள் தொகுப்புகளும்) வெவ்வேறாக இருக்கின்றன. கோதமரின் கண்ணும் ‘பணி’களின் பசுக்களின் மீதே படிந்திருந்தது. ஓ அக்னியே, சோமனே! நீங்களிருவரும் வீரத்தைக் கொண்டு ‘பணி’களின் பசுக்களைப் பறித்துக் கொண்டீர்கள்” (1-93-4) என்கிறார் அவர். தம்முடைய விரோதிகளின் பசுக்களையும், செல்வத்தையும் திருடுவதும், கொள்ளையடிப்பதும் ஆரியருக்கும். அவர் தம் கடவுளர்களுக்கும் தவறான காரியங்களல்ல.
இது மட்டுமல்ல. ரிஷி கிருத்ஸமத் கூற்றுப்படி. (2-24-6) மிக்க ரகசியமான இடங்களிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘பணி’களின் செல்வங்களை ஆரிய ஞானிகள் அடைந்தார்கள். ‘பணி’கள் செல்வந்தர்மட்டுமல்ல. மற்றவருக்குக் கொடுக்க விருப்பமில்லாதவர்கள் என்னும் விஷயம் புதிதல்ல. பணியாக்களின் (வியாபாரிகளின்) சுபாவத்தின்படி ‘பணி’கள் மற்றவரைக்காட்டிலும் சற்று அதிகமான கஞ்ச மகா பிரபுக்கள். இது விருந்தோம்பல் கொண்டு பாதி ஊர் சுற்றும் இனத்தாரான ஆரியரின் சுபாவத்திற்கு எதிரானது. ஹிரண்ய ஸ்தூப், ‘பணி’களின் சுபாவத்தைக் கைக்கொள்ளாதீர் என்று இந்திரனை வேண்டுகிறார் (1-33-3) : ஓ இந்திரனே! அதிக செல்வம் தந்து ‘பணி’களைப் போலாகாதீர்! எங்களிடமிருந்து அதிகப் பயனை எதிர்பார்க்காதீர்” ‘பணி ‘ இனத்தார் விழிப்புடனில்லாமல் உறங்கிக்கொண்டே இருக்கட்டும்! என கக்ஷிவான் என்னும் ரிஷியும் விரும்புகிறார் (1-124-10) ‘பணி’களின் பசுக்களையும், செல்வத்தையும் ஒவ்வொரு ஆரியனும் விரும்பிக் கொண்டிருந்ததால் அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதே கொள்ளைக்காரர்களுக்கு வேண்டுமல்லவா? இந்திரன் பணிகளிடமிருந்து தானியம் திருடச் சென்று, அதை கிரகஸ்தரிடையே ஆரியரிடையே வினியோகிக்கிறார்” என்று ஸம்வரணர் கூறுகிறார் (5-34-7).”
உணவு வகைகள் நிறைய வைத்துள்ள ‘பணி’யை சோமதேவன் நாசமாக்க வேண்டும்: ஏனெனில் பணி ஓநாய் என்கிறார் ரிஜிஷ்வா (6-51-14), நீர் பணிகளிடமிருந்து செல்வத்தையும், பசுக்களையும் எடுத்துக் கொள்ளும்!’ என சோமதேவனை அஸித்தேவலும் வேண்டுகிறார் (9-22-7) “நீர் பணிகளின் செல்வத்தைக் கைப்பற்றினீர்!” என்று பருக்ஷேப்பின் மகன் அனானத், சோமதேவனை வேண்டுகிறார்.
“மன்னா! இரண்டு சிவப்புக் குதிரைகளைத் தேரில் பூட்டி, தானம் செய்யாத பணிகளின் மேல் படையெடு” என்று பந்து ஒரு அரசரிடம் சொல்கிறார் (10-60-6). சம்பு என்ற ரிஷியின் காலத்தில் ‘பணி’ இனத்தலைவன் ‘புபு’ என்பவன் கங்கை மைதானத்தின் பரந்த மைதானத்தைப் போல் உயரமான பிரதேசத்தில் இருந்து வந்தான் (6-45-31). பணிகளுக்கு ஆபத்துகள் உண்டுபண்ண இந்த ரிஷிகள் தூண்டிதான் விடுகிறார்கள் என்பது புபு அறிவானாதலால், அவன் சம்யு ரிஷியை தாராளமாகத் தானமளித்துச் சரிப்படுத்திக் கொண்டு விட்டான். அதன் காரணமாகவே சம்யு புபுவுக்கு புகழாரம் சூட்டத் தொடங்கி விட்டார் (7-45-32, 33). கங்கையின் பரந்த வெளியைப் போலவே புவின் உள்ளமும் பரந்திருந்தது. புபு காற்று வேகத்திலே ஓடிக்கொண்டிருந்த ஆயிரம் பசுக்களையும் தானம் செய்துவிட்டாள். அவனுடைய தாராள மனப்பான்மையால் சம்யு மட்டுமே பயனடையவில்லை: வேறு பல ரிஷிகளும் பயன் பெற்றார்கள். ஆயிரக்கணக்கான பசுக்களைத் தானம் தந்து, பல்லாயிரக்கணக்கான புகழுரைகளுக்குத் தகுதி பெற்ற புபுவைப் பாராட்டித் தீர்த்தார்கள் ரிஷிகள்.
‘பணி’களுடன் ஆரியரின் உறவுகள் பற்றி ‘ரிக்வேத’த்தின் பத்தாவது மண்டலத்தில் (அத்தியாயத்தில்) ஒரு முழு சூக்தமே இருக்கிறது (10-108). அதில் பணிகளுக்கும், ஸர்மாவுக்குமிடையே நடைபெற்ற பேச்சு வார்த்தை தரப்பட்டிருக்கிறது. ஸர்மா தேவர்களின் பெட்டை நாய் என்றாலும், இங்கே அது ஆரியர்களின் பேராசைக்கும். வன்முறைக்கும் பிரதிநிதியாக உள்ளது. இச்செய்யுட்களை இயற்றியவர்கள் ‘பணி’களென்றும், ஸர்மா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் உண்மையான படைப்பாளியின் பெயர் தெரியவில்லை. அந்த வினோதமான சம்பாஷணை இதுதான்.
பணிகள்: ஸர்மா, எந்த நோக்கத்தோடு நீ இங்கே வந்தாய்? நீ வந்த பாதை மிக நீண்டது. அதைப் பின்னால் திரும்பிப் பார்க்கவே முடியாது. எங்களிடம் என்ன இருக்கிறது? நீ பாதையிலுள்ள நதிகளின் நீரை எப்படிக் கடந்து வந்தாய்? -1-
ஸர்மா: ஓ பணிகளே, நான் இந்திரனின் பிரதிநிதியாகி உங்கள் செல்வங்களைப் பெற வேண்டுமென்னும் விருப்பத் தில் மூழ்கியுள்ளேன். நீங்கள் பெருஞ் செல்வத்தைச் சேர்த்து வைத்துள்ளீர்கள். அதற்காகவே நான் வந்திருக்கிறேன். நீர் என்னைப் பாதுகாத்தது. நான் நதிகளின் நீரைத் தாண்டி வந்துள்ளேன்.-2-
பணிகள் : ஸர்மா! நீ பிரதிநிதியாக வந்துள்ள அந்த இந்திரன் எப்படிப்பட்டவன்? அந்த இந்திரன் இங்கே வந்தால் அவரை நாங்கள் எங்கள் நண்பராக்கிக்கொள்வோம். அவர் எங்கள் பசுக்களை ஏற்று எங்கள் பசுபதியாகட்டும்-3-
ஸர்மா : நான் பிரதிநிதியாக வந்துள்ள அவரை யார் வெற்றி கொள்ளமுடியுமென்பதை நான் அறியேன். ஆழமான நதிகள் கூட அவரைத் தடுத்து நிறுத்த இயலாது. ஓ பணிகளே! அந்த இந்திரனால் கொல்லப்பட்டு நீங்கள் உறங்கி விடுவீர்கள்!-4-
பணிகள் : ஓ ஸர்மா! வானத்தின் விளிம்பிலிருந்து எந்த பசுக்களை விரும்பி நீ வந்திருக்கிறாயோ, அவற்றைப் போரின்றி யார் பறித்துக்கொள்ள முடியும்? எங்கள் ஆயுதங்கள் கூர்மையானவையாக்கும்!-5-
ஸர்மா : பணிகளே, உங்கள் பேச்சு படைவீரர்களுக்குரிய பேச்சாக இல்லை. உங்கள் உடல்கள்பாவப்பட்டவை. நீங்கள் வரும் வழி வழக்க மானதல்ல. பிரகஸ்பதி உங்களை ஆபத்திலே சிக்க வைக்கக்கூடும்.-6-
பணிகள்: ஸர்மா,எங்கள் செல்வம் மலைகளால் பாதுகாக்கப் பட்டுள்ளது. எங்கள் இருப்பிடம் பசுக்களாலும், குதிரைகளாலும், தானியங்களாலும் நிறைந்துள்ளது. சிறந்த காவலர்களான பணிகள் அதைப் பாதுகாக்கிறார்கள். எங்கள் இருப்பிடத்திற்கு நீ வீணாகத்தான் வந்திருக்கிறாய்! -7-
ஸர்மா : சோமபான போதையில் திளைக்கும் அயாஸ், ஆங்கிரஸ், நவகு போன்ற ரிஷிகள் இங்கே வருவார்கள். அவர்கள் இந்தப் பசுக்களைப் பறித்துச் சென்றுவிடுவார்கள். பிறகு உங்கள் இந்த வீரச் சொற்களெல்லாம் வெறும் உளறல்களாகத்தான் இருக்கும். -8-
பணிகள் : ஓ ஸர்மா, தேவர்கள் பயந்துபோய் உன்னை இங்கு அனுப்பியிருக்கிறார்கள். நாங்கள் உன்னை எங்கள் சகோதரியாக்கிக் கொள்கிறோம். நீ திரும்பிப் போகாதே! ஓ அழகியே, நாங்கள் உனக்குப் பசுக்களைத் தருவோம்.-9-
ஸர்மா : நான் சகோதரத் தன்மையோ, சகோதரித் தன்மையோ அறியேன். அவற்றையெல்லாம் இந்திரனும், கோரர் வம்சத்தவரும். அங்கிரா வம்சத்தவரும் அறிவார்கள். அவர்கள் பசுக்களை அடையும் விருப்பத்தில் என்னை இங்கே பாதுகாப்பாக அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதனால்தான் நான் வந்தேன். பணிகளே. இங்கிருந்து தூரமாக ஓடிவிடுங்கள்!-10-
பணிகளே. இங்கிருந்து வெகு தொலைவிற்கு ஓடி விடுங்கள்! பசுக்கள் சங்கடங்களால் துன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கின்றன. அந்தப் பசுக்களை பிரகஸ்பதி, சோம தேவன், சோமத்தை அரைக்கும் கல், பிராமணரும், ரிஷிகளும் அடையட்டும்!
‘பணி’ இனத்தாரின் பரிதாபநிலை அப்போது எவ்வாறு இருந்ததென்பதற்கு இந்தப் பேச்சுவார்த்தை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு! இது நமக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாகம் வரை மத்திய ஆசியாவில் வாழ்ந்து வந்த வடக்கு ஊர்சுற்றி மக்களை நினைவு படுத்துகிறது. அவர்கள் கொள்ளையடித்த பொருளை தர்மமான முறையில் அறநெறியின்படி) சம்பாதித்ததாகவே கருதினார்கள். (நூலிலிருந்து.)
ரிக் வேதகால ஆரியர்கள் – ராகுல் சாங்கிருத்தியாயன்
விலை:220/-
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
Buy this book online: https://www.heritager.in/product/rig-vedakaala-ariyargal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers