சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் நான்கு

மண்டலம், நாடு,கூற்றம்

முதல் இராஜேந்திரர் காலத்தில் இராஜராஜப் பாண்டி நாடாக அறியப்படும் பாண்டியர்பகுதி, பிற்காலக் கல்வெட் டொன்றில் பாண்டிமண்டலமாக அறிமுகமாகிறது?’ முதல் ஆதித்தர் கல்வெட்டு, கொடையாளி ஒருவரின் இருப்பிடமாக கங்கபாடியைச் சுட்டுகிறது. கூற்றம் எனும் பெயரில் அமைந்த வருவாய்ப் பிரிவுகளாக உறையூர், உறத்தூர், தஞ்சாவூர் ஆகியன வும் நாடு என அழைக்கப்பட்ட வருவாய்ப் பிரிவுகளாகத் தரம் பற்றூர், கருப்பூர், புலியூர், இடையாற்றுநாடு, வல்லநாடு ஆகிய னவும் இக்கோயிற் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன.

49 ஊர்ப்பெயர்கள் வெளிப்படும் நிலையில், ஊர் என்ற பின்னொட்டுடன் அமைந்தவை 19 அவற்றுள் பெரும்பாலா னவை இன்றும் அதே பெயர்களுடன் உள்ளன. கருப்பூர் பெரிய, சிறிய எனும் முன்னொட்டுக்களுடன் இருபிரிவுகளாக விளங்கு கிறது. கீழூர், துவ்வூர், பேரன்பூர், உறுப்பட்டூர், முத்தூர் ஆகிய ஊர்களை அறியக்கூடவில்லை.

5 ஊர்களின் பெயர்கள் குடி எனும் பின்னொட்டுக் கொள்ள, 5 ஊர்கள் பிராமணக் குடியிருப்புகளாக அமைந்து பெயர்களின் பின்னே மங்கலம் எனும் பின்னொட்டுக் கொண் டன தற்போது அம்மன்குடியாக மாறியுள்ள அமண்குடி சம ணர் குடியிருப்பாக இருந்திருக்க வாய்ப்புண்டு. எனினும், களஆய்வில் சமணப்பள்ளி இருந்தமைக்கான கல்வெட்டு, கட்டட, சிற்பச் சான்றுகள் அங்குக் கிடைத்தில.

6 ஊர்களின் பெயர்கள் நல்லூர் எனும் பின்னொட்டுக் கொள்ள, 5 ஊர்களின் பெயர்கள் துறையென முடிகின்றன.! பல்வேறு பின்னொட்டுக்களைக் கொண்ட ஊர்களாக ஐம்பர், திருப்பேர், திருவெள்ளறை, திருவையாறு, பனையூர் வாழ்க்கை, கழுமலம், திருக்குளிர்மணி ஆகியன வெளிப்படுகின்றன. அவற் றுள் திருக்குளிர்மணி (தற்போது குழுமணி) ஜயங்கொண்ட சோழநல்லூராகவும் அறியப்பட்டது. பனையூர் வாழ்க்கை போலவே தவத்துறைக்கருகே நகர் வாழ்க்கை, செல்லூர் வாழ்க்கை எனும் பெயர்களிலும் கும்பகோணத்தருகே நந்திபுர வாழ்க்கை எனும் பெயரிலும் ஊர்கள் அமைந்திருந்தமையை அறியமுடிகிறது.” கழுமலத்தைப் போலக் கன்றாப்பில் என்ற ஊரும் பனையூர் வாழ்க்கையில் உள்ளடங்கியிருந்தமை இந் நூலாசிரியர்களால் படித்தறியப்பட்ட இடைமலைப்பட்டிப் புதூர்க் கல்வெட்டின் வழி தெரியவருகிறது.’ மஹகிராமமாகச் சுட்டப்படும் கிறைக்கொட்டுள் கங்கபாடியில் இருந்தது. திம்மப்ப நாயக்கரால் கொடையளிக்கப்பட்ட ஸ்ரீ இஹவியம் எனும் ஊர் பற்றி அறியக்கூடவில்லை.

கொடும்பாளூர் வேளிர்கள்

திருச்செந்துறைக் கல்வெட்டுகளில் அக்கோயிலைக் கற்றளி யாக எடுத்த கொடும்பாளூர் இளவரசி சோழ அரசர் அரிஞ்சய ரின் தேவி நங்கை பூதி ஆதித்தபிடாரி இடம்பெற்றுள்ளாற் போலவே கொடும்பாளூர் வேளிர் மரபைச் சேர்ந்த பல அரசர் களின் பெயர்களும் பதிவாகியுள்ளன. அவர்களுள் சிலர் சோழப் பேரரசரான முதல் பராந்தகரின் ஆட்சிக்காலத்தே கொடும்பா ளூர்ச் சிற்றரசர்களாக விளங்கியவர்கள். பூதி ஆதித்தபிடாரியின் தந்தை தென்னவன் இளங்கோவேளான மறவம்பூதி முதல் பராந்தகரின் 2, 3 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளிலும் செம் பியன் இளங்கோவேளான பூதி ஆதித்தபிடாரன் 20,30ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளிலும் மதுராந்தக இருக்கு வேளான ஆதித்தம்பூதியும் வீரசோழ இளங்கோவேளான ஆதித்தன் திருவொற்றியூரடிகளும் 23ஆம் ஆட்சியாண்டுக் கல் வெட்டிலும் வெளிப்பட, வீரசோழ இளங்கோவேளான ஒற்றி மதுராந்தகன் கண்டராதித்தசோழராகக் கருதத்தக்க இராஜகே சரியின் 2ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் காட்சிதருகிறார்.மதுராந்தக இருக்குவேளான ஆதித்தம்பூதியின் மகன் பூதி பராந்தகன், இக்கோயிலில் புதிதாகக் கண்டறியப்பட்ட பரகே சரிவர்மர் கல்வெட்டில் இளவயதினராக அறிமுகமாக,நக்கன் விக்கிரமகேசரி, தென்னவன் இளங்கோவேளின் தேவியாகப் பராந்தகரின் 2ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் கொடை யாளியாக வெளிப்படுகிறார். திருச்செந்துறைக் கல்வெட்டுகளில் குறிக்கப்படும் வேளிர்குல அரசர்கள் இவ்வூரின் சுற்றுப்புறங் களில் அமைந்துள்ள நங்கவரம், பராய்த்துறை, அந்தநல்லூர், பழுவூர், வயலூர், அல்லூர், குழுமணி ஆகிய ஊர்க் கோயில் களின் பதிவுகளிலும் இடம்பெற்றுள்ளனர். அவர்களுள் செம்பி யன் இருக்குவேளான பூதிபராந்தகனே அந்தநல்லூர் வடதீர்த்த நாதர் கோயிலை (கல்வெட்டுகளில் திருவாலந்துறை மகா தேவர்) முதல் பராந்தகரின் 19ஆம் ஆட்சியாண்டில் கற்றளியாக எடுப்பித்தவர்.

வீரசோழ இளங்கோவேளான பராந்தகன் குஞ்சரமல்லன், மும்முடிசோழ இளங்கோவேள், மகிமாலய இருக்குவேளான பராந்தகன் வீரசோழன், ஒற்றி மதுராந்தகன் மகன் பராந்தக தேவன், தென்னவன் இளங்கோவேள் தேவியான நங்கை கற் றளிப் பிராட்டி, செம்பியன் இருக்குவேள் தேவி சிங்கன் நிம்மடி கள், சோழ அரசர் ஆதித்தர் மகன் கன்னரதேவரின் தேவி பூதி மாதேவடிகள், வீரசோழ இளங்கோவேள் தேவி கங்கமாதேவி, செம்பியன் இருக்குவேளான பூதிபராந்தகன் தேவியர் சோழப் பெருந்தேவியான பெறல்நங்கை, புலியூர் நாட்டடிகள் ஆகியோ ரும் செந்துறை தவிர்த்த இப்பகுதிசார் பிற ஊர்க் கல்வெட்டு களில் குறிக்கப்பட்டுள்ளனர். கொடும்பாளூர் வேளிர் சிலரின் ஆணைகளாக ஊரவைகளுக்கு அனுப்பப்பட்டுள்ள திருமுகங் கள் இப்பகுதியில் அவர்களுக்கிருந்த ஆட்சி மேலாண்மையை நிறுவுகின்றன. (நூலிலிருந்து)

சிராப்பள்ளி மாவட்டச் சோழர் தளிகள் நான்கு – அர.அகிலா, மு.நளினி, இரா.கலைக்கோவன்
விலை: 250 /-
Buy this book online: https://www.heritager.in/product/sirapalli-mavatta-cholar-thaligal-naanku-2/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers