தமிழகத்தில் ஒரு அரசியால் கட்டப்பட்ட முதல் கோவில்
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில், ஒரு தனித்துவமான கட்டடக்கலைப் புதிராகத் திகழ்கிறது.

இக்கோயிலானது மணற்கல் மற்றும் கருங்கல் ஆகியவற்றை இணைத்துக் கட்டப்பட்ட கலப்புக் கட்டுமான அமைப்பைக் கொண்டது. இதுவே இதன் சிறப்பிற்கு ஓர் ஆரம்பப் புள்ளி. மேலும், இக்கோயிலின் சிற்பங்கள் மற்றும் சன்னதிகளின் உருவாக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மணற்கற்கள் எங்கிருந்து வந்தன (தோற்றம்), அவை எவ்வாறு செதுக்கப்பட்டன (உருவாக்கம்) போன்ற பல விஷயங்கள் இன்றும் மர்மங்களாகவே உள்ளன.
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் வளாகத்தில் உள்ள திருச்சுற்று மாளிகையில், முதன்மை கோபுர வாயிலுக்கு இடப்புறம் ஆறும் (ஆறு), வலப்புறம் இரண்டுமாக (இரண்டு), ஆக மொத்தம் எட்டு வழிபாட்டுத் திருச்சிறுகோயில்கள் (dedicatory shrines / memorial vimanas) அழகாக அமைந்துள்ளன.

இந்த தேவகுளிகா எனப்படும் குருங்கோவில்கள் (சிறு கோவில்கள்) தென்னிந்திய கோவில்களில் முன்னோடி எனப்படுகிறது. இவையே பிற்காலத்தில் பெருங்கோவில்கலாக வடிவெடுத்தன. வீதிக்கு வீதி இருக்கும் சிறு பிள்ளையார் கோவில்களை இக்கோவிலின் அளவோடு ஒப்பிடலாம்.
காஞ்சியில் உள்ள இந்த கோவில்களில் அமைக்கப்பட்ட சிற்பங்கள் முதலில் மணல்கற்களை கோவிலில் அமைத்துவிட்டு (In situ) அதன் பின்பு அதில் சிற்பங்கள் செதுக்கி உருவாக்கப்பட்டன என்ற கோட்பாடு. உதாரணமாக படம் ஒன்றில் அவ்வாறு அமைக்கப்பட்ட கல்லில் தூணில் சிற்பம் முழு வடிவு பெறாமல் உள்ளதும், அதன் அருகில் கோவிலில் உள்ள தூணில் சிம்மங்கள் வடிவமைக்கபட்டிருப்பதையும் காணலாம்.

இந்தச் சிறுகோயில்களில் முக்கியமாகப் தாரலிங்கமே (Dharalinga) வழிபாட்டுப் பொருளாக உள்ளது. மேலும், அவற்றின் பின்புறச் சுவரில் சோமஸ்கந்தர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சன்னதிகளின் வெளிப்புறச் சுவர்களில், சைவ சமயத்தின் பல்வேறு வடிவங்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சோமஸ்கந்தர், லிங்கோத்பவர், காலாரி, யோகமூர்த்தி, கஜசம்ஹாரமூர்த்தி, திரிபுராரி, தட்சிணாமூர்த்தி, ஹரன் போன்ற சிவபெருமானின் வடிவங்கள் மிளிர்கின்றன.
இவற்றில், வடக்குப் பக்க வரிசையில் உள்ள எட்டுச் சன்னதிகளுள், இரண்டு கோயில்கள் பல்லவ மன்னன் ராஜசிம்மனின் (நரசிம்மவர்மன் II) அரசிகளால் கட்டப்பட்டவை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஐந்தாவது வரிசையில் உள்ள சன்னதி, ராஜசிம்மனின் அன்புக்குரிய பட்டத்தரசியான “ரங்கபதாகை” என்பவரால் எழுப்பப்பட்டது தெளிவாக அறியப்படுகிறது.

பழங்காலத்தில் கட்டப்பட்ட தமிழகக் கோயில்களில் பெண்களின் பங்களிப்பு, தொடங்கிய காலத்திலிருந்தே உள்ளது.
கட்டுரை: Thali Cultural Centre – TCC
#Pallava101 #Pallava #பல்லவர் Thali Cultural Centre – TCC #ThaliTours #TCC #TempleTours #SacredSites #SpiritualJourney #TravelIndia #IncredibleIndia #ExploreTemples #HistoricalTemples #IndianArchitecture #DravidianArchitecture #TempleArchitecture
#AncientStructures #HinduTemples #TempleArt #TempleCarvings
#IndianHeritage #CulturalTours #HistoryLovers #WorldHeritage #HinduCulture #IndianHistory #PallavaArchitecture #Toursim #Travel #Wanderlust #TravelGram #InstaTravel #TravelAddict #Explore #Vacation #TravelPhotography