பிராமி எழுத்தும் தென் இந்தியாவின் மொழிகளும்
பிராமி எழுத்து வடிவங்கள், தென் இந்தியாவில் பல்லிட அகழாய்வுகளில் எடுக்கப் பட்ட மண்பாண்டங்களிலும், பாறைகளிலும் குறுகிய கல்வெட்டுகளாக காணப்படுகின்றன. பொன், வெள்ளி மோதிரங்கள், பதக்கங்கள் மற்றும் நாணயங்கள் ஆகிய உலோகத் தொல்பொருள்களிலும் கூட காணப்பட் டுள்ளன. இவ்எழுத்து வடிவம், அசோகர் காலத்து வட இந்தியா பிராமி எழுத்து வடிவினை ஏறக்குறைய ஒத்துள்ளது. தமிழ் நாட்டின் சில இடங்கள் (அரிக்கமேடு, உறையூர். கொடுமணல், அழகன்குளம் மற்றும் கரூர்) கணிசமான எண்ணிக்கையில் பிராமி எழுத்துக்களுள்ள பானை ஓடுகளைத் தந்துள்ளன. இவை தவிர ஒரு பதினைந்து இடங்கள் ஒவ்வொன்றும் சில ஓடுகளை அளித்துள்ளன (நிலப்படம் 1.3). இவற்றில் சில, பெருங்கல் அல்லது இரும்பு கால ஈமக்காடுகளோடு தொடர்புடைய குடியிருப்புப் பகுதிகள்; மற்றவைகளுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. இதேபோல்,பிராமி எழுத்துகள் உடைய மண்பாண்டங்கள் ஆந்திரப் பிரதேசத்திலும் (சாலிகுந்தம் (Sub-rahmanyam 1964), வட்டமன்னு மற்றும் சில இடங்கள்),கர்நாடகத்திலும் (சன்னதி) காணப் பட்டுள்ளன. ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் காணப்பட்ட எழுத்துகளுடைய மண் பானைகள் பெரும்பாலும் புத்த மதம் சார்ந்தவை Hanumantha Rao 1998).
இப்பிராமி எழுத்துக்களைக் கீழ்க் கண்டவாறு மூன்று வகையாகப் பிரிக்கலாம்:
(1) ஆந்திரப் பிரதேசத்தில், குண்டூர் மாவட்டத்தில் உள்ள பட்டிப்புரோலு என்னும் புத்தமதம் சார்ந்த இடங்களிலிருந்து கிடைத்தவை
(2) ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகத்தின் பிற பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டவை
(3) தமிழ்நாடு, கேரளத்தில் காணப்படுபவை. முதல் இரண்டு வகைகளில் பயன்படுத்திய மொழி பிராகிருதம் ஆகும். ஆனால், மூன்றாம் வகையில் தமிழ் மொழி பயன்படுத்தப் பட்டுள்ளது.
முதல் வகையின் எழுத்து வடிவமும், அசோகர் காலத்திலும், அவருக்குப் பின்னரும் பயன்படுத்திய வட இந்திய பிராமி எழுத்து வடிவமும் ஒன்றே. பட்டிப்புரோலு பிராமி எழுத்து வடிவம் தனி வகையானது. இவ்வகையில், வெவ்வேறு ஒலிகளைத் தனித்துக்காட்ட, ஒலிக்குறியீடுகள் சில பயன்படுத்தப்பட்டுள்ளன. அதாவது அடிப்படையான மெய் எழுத்தில். இயல்பாக உள்ள ‘அகரம்’. ‘ஆகாரம்’ ஆகிய எழுத்துக்களைப் பிரித்துக்காட்ட இம்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. உதா ரணமாக, ‘க்’, ‘க’, ‘கா” ஆனால், அசோகர் பிராமியில், அடிப்படை மெய் எழுத்துக்கான குறியீடு. இயல்பாக உள்ள உயிர் எழுத்தான ‘அகர’த்தோடேயே எப்பொழுதும் உள்ளது.
மௌரிய எழுத்து வடிவத்தை மாற்றியமைத்து, பிராகிருதமல்லாத, தெலுங்கு போன்ற ஒரு உள்ளூர் மொழியை எழுதப் புதியதாக உருவாக்கப்பட்ட எழுத்து வடிவம், பட்டிப்புரோலு எழுத்து வடிவமாக இருக்கலாம். இதே காலத்தைச் சார்ந்த தெலுங்கு கல்வெட்டுகள் இதுவரை கிடைக்கவில்லை என்பதால், இந்தக் கருத்தை ஊகமாகவே கருத வேண்டும். பட்டிப்புரோலு வகையில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் வேறு ஏதும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழ்ப் பகுதியில் உள்ள எழுத்து முறையும், தமிழ் மொழியை எழுத மாற்றியமைக்கப்பட்டது. இவற்றில், வர்க்கத்தில் உள்ள மூச்சொலிகளை (aspirates) விட்டுவிட்டு, தமிழுக்கு சிறப்பாக உள்ள ஒலிகளான ழ், ள், ற், மற்றும் ன், என்ற நான்கு புதிய குறியீடுகளைச் சேர்த்துள்ளதால் இவ்எழுத்து முறை தமிழ் பிராமி என தரமான கல்வெட்டு நூல்களில் அழைக்கப்படுகிறது. எழுத்தும் மொழியும் நெருங்கிய தொடர்புடையன என்பதை உணர்த்துமாறு உள்ளதால், ‘தமிழ் பிராமி’ என்ற சிறப்புப் பெயரை பயன்படுத்துவதற்குச் சில எதிர்ப்புகளும் உள்ளன. தமிழ் பிராமி என்பது, தமிழ் பேசும் பகுதியில் பயன்படுத்தப்பட்ட ஒரு தென்னக வகையான பிராமி வடிவம் 27 என்பதைக் காட்டும் சிறப்புப்பெயர் என்ற ஒரு விளக்கம் இங்கு தேவையாகிறது.
பட்டிப்புரோலு மற்றும் தமிழ் பிராமி எழுத்து வடிவங்களுக்கு இடையே அமைப்பு சார்ந்த ஒற்றுமை இருப்பினும், இவ்விரண்டு எழுத்து வகைகளில் ஒன்றின் தாக்கம் மற்றதன் மேல் இருந்ததென்று தொடர்புபடுத்து வதற்கு தற்பொழுது உறுதியான தகவல்கள் ஏதுமில்லை. முன்னுதாரணமும், வழித் தோன்றலும் இல்லையென்றாலும், பட்டிப்புரோலு எழுத்துவகை முழுமை பெற்ற ஒன்றாகத் தோன்றுகிறது. தமிழ் பிராமி எழுத்து வடிவம் இரண்டு நிலை வளர்ச்சி பெற்றுள்ளது. முதல் நிலை (சுமார் மூன்றிலிருந்து முதல் நூற்றாண்டுகள் பொ.கா.மு.) மெய் எழுத்துக் களைக் காட்ட புள்ளி இடாதது. இரண்டாம் நிலை (சுமார் முதல் நூற்றாண்டு முதல்) மெய் எழுத்துக்களுக்கு புள்ளியிடப்பட்டது. (நூலிலிருந்து)
சுருக்கமான தென் இந்திய வரலாறு – நொபொரு கராஷிமா
விலை: 700/-
வெளியீடு:அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
Buy this book online: https://www.heritager.in/product/surukkamaana-thennindia-varalaaru/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers