வேளாண்மை உற்பத்தி : முதன்மைக் குலமும் துணைக் குலங்களும்
வேளாண்மை உற்பத்தியும் அதுசார்ந்த உழைப்புத் தேவையும்தான் பெருவாரியான மக்கள் திரளை மருத நிலத்தில் நிலையாகக் குடியிருக்கச் செய்திருக்கின்றன. பல்வேறுபட்ட மக்கள் பிரிவுகள், வாழ்நிலைகள், தொழில் பிரிவுகள், அரச உருவாக்கம் எனப் பல்வேறு சமூக உருவாக்கம் மருத நிலத்தில்தான் நடைபெற்றிருக்கின்றன.
அதனால்தான், மருத நிலத்தில் மக்கள் குடியேறி நிலையாய் வாழ்ந்து, சிற்றூர் பேரூர் ஆகி நாகரிக மிக்கபின், உழவர் வகுப்பினின்றே அந்தணரும் அரசரும் வணிகரும் பல்வகைத் தொழிலாளரும் தோன்றினர் எனக் கூறும் பாவாணர், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் எனும் நாற்பெரும் குலத்தாருள், வேளாளர் ஏனை முக்குலத்தில் இல்லறத்தாரையும் தாங்கி வந்ததினால், வேளாளரே சிறந்த இல்லறத்தாராகக் கருதப்பட்டனர். மருத நிலத்து ஊரில் நிலையாக வசித்து ஆறிலொரு கடமையை அரசனுக்கு ஒழுங்காக இறுத்து வந்தவரும் வேளாளரே என்கிறார்.
மருத நிலத்தின் வேளாண்மை உற்பத்தி சார்ந்த வேளாளர்களே உடைமை சார்ந்தும், வட்டாரம் சார்ந்தும், பண்பாடு சார்ந்தும்பல்வேறுபட்ட குலத்தினராகவும் குடிகளாகவும் சாதிகளாகவும் விரவியுள்ளனர்.
இதனை, முற்காலத்தில் உழுதுண்பார் உழுவித்துண் என்று கூறப்பட்ட இருவகை வேளாளரும் பிற்காலத்தில் பற்பன் குலத்தினராகப் பிரிந்து போயினர். இதுபோதுள்ள வெள்ளாளரும் முதலிமாரும் உழுவித்துண்ணும் வேளாண் வகுப்பையும். குடியானவர், அகமுடையார், கவுண்டர், பள்ளியார். படையாட்சியார், பள்ளர் முதலியோர் உழுதுண்ணும் வேளாண் வகுப்பையும் சேர்ந்தவராவார் எனும் பாவாணர், பாண்டி வேளாளர், நெல்லை வேளாளர், சோழிய வேளாளர், கொங்க வேளாளர், தொண்டை மண்டல துளுவ வேளாளர், குடியானவர். உடையார், படையாட்சியார், பள்ளர் எனப் பல குலத்தினர் இற்றைத் தமிழ் உழவர் என, வட்டார அடிப்படையில் வேளாளர்களை அடையாளப்படுத்திக் கூறுகிறார்.
பல்வேறு சாதிகளை உள்ளடக்கிய தமிழ்த்தேசிய இனம், வேளாண் தொழில் உற்பத்திச் சாதிகளையும், அதற்குத் துணையாகவும் இணையாகவும் உற்பத்தி மற்றும் வணிகச் சாதிகளையும் உள்ளடக்கி வைத்திருக்கிறது. அவ்வகையில்தான். வேளாண்மை மேற்கொண்ட முதன்மை மற்றும் துணைமைச் சாதிகள் இருந்துள்ளன.
வேளாண் தொழிலை முதன்மையாக மேற்கொண்டதால், உழவர் வேளாளர் என்றே அழைக்கப்பட்டனர். அவ்வேளாளரின் உழவுத் தொழிலுக்குத் துணை செய்யும் குடிகளாக வண்ணார். மயிர்வினைஞர், செம்மான், குயவர், கொத்தர், கொல்லர், கன்னார், தட்டார், தச்சர், கல்தச்சர், செக்கார், கூத்தர், கைக்கோளர், பூக்காரர், கிணைப்பறையர், பாணர், வள்ளுவர், மருத்துவர் ஆகிய பதினெண் குடிகளும் வேளாண் குடியோடு சேர்ந்து வேளாண் உற்பத்தி நடவடிக்கையை மேம்படுத்தியதாகப் பாவாணர் விளக்கப்படுத்துகிறார்.
பன்னெடுங்காலமாகவே வேளாண்மைத் தொழில்
உற்பத்தியில் பல்வேறு இனக்குழுக்களும், பல்வேறு குடிகளும், பல்வேறு குலங்களும், பல்வேறு சாதிகளும் ஈடுபட்டு வந்திருக்கின்றன. வேளாண்மைத் தொழிலை முதன்மைத் தொழிலாகவும், வேளாண்மைத் தொழிலுக்கு உகந்த துணைத்தொழிலாகவும் கொண்ட பல்வேறு தொழில் மரபினர் வேளாண்மைத் தொழில் மரபோடு கலந்திருக்கின்றனர்.
எனினும், வேளாண்மைத் தொழில் மரபோடு அடையாளப்பட்டிருந்த பல்வேறு சமூகப் பிரிவினர், தொடர்ந்து வேளாண்மைத் தொழிலை மேற்கொள்ள முடியாமல் விலகி இருக்கின்றனர். இன்னும் பல தரப்பினர் விலக்கப்படவும் செய்திருக்கின்றனர். அதேவேளையில், இடைக்காலத்திலும் இக்காலத்திலும்கூட பல்வேறு குலங்களும் குடிகளும் சாதிகளும் வேளாண்மைத் தொழிலில் புதிதாய் இணைந்திருக்கின்றன.
கால மாற்றம், சமூக மாற்றம், தொழில் மாற்றம் எதுவாயினும், சமூகத்தின் உயிர்வாழ்வுக்குத் தேவையான உணவு உற்பத்தியை வேளாண்மைத் தொழில் மூலமாக மட்டுமே நிறைவேற்ற முடியும். உயிர்வாழும் மனிதர்கள் உள்ளவரை, வேளாண்மைத் தொழிலும் நிலைத்திருக்கவே செய்யும்.உலகின் பல பகுதிகளில் வாழும் மனிதர்கள், தமது நிலம், சூழல்களுக்குத் தகுந்தவாறு அவரவர் வேளாண் மரபைத் தக்கவைத்தும் தகவமைத்தும் வருகின்றனர். அவ்வகையில், உலகெங்கிலும் வேளாண் தொழில் மரபினர் பரவிக் கிடப்பதினாலும் வேளாண்மைத் தொழிலில் பங்கேற்பதாலும்தான் உலக மனிதர்கள் உயிர்வாழ முடிகின்றது.
தமிழ் நிலத்திலும் வேளாண்மைத் தொழில் மரபைப் பல்வேறு சமூகப் பிரிவினர் கொண்டிருந்தாலும், வேளாண்மைத் தொழில் மரபோடு எல்லாக் காலத்திலும் தொடர்ந்து வரக்கூடிய சமூகப் பிரிவினர் இன்னும் இருக்கவே செய்கின்றனர். வரலாற்றுத் தரவுகளிலும் வாழ்வியல் நிலைகளிலும் – பண்பாட்டு வழக்காறுகளிலும் வேளாண்மைத் தொழிலால் மட்டுமே அடையாளப்படும் வேளாண் மரபினர், தமிழர் குடிமரபில் இன்னும் இருக்கின்றனர். இத்தகைய வேளாண் தொழில் மரபினரை அடையாளப்படுத்தும் அயோத்திதாசர், பூமியைத் திருத்தி விருத்தி செய்வோருக்கு உழவர், பள்ளர், உழவாளர், மேழியர், வேளாளர் என்று குறிப்பிடுகிறார். (நூலிலிருந்து)
வேளாண் மரபின் தமிழ் அடையாளம் உழவுப்பண்பாடும் வேளாளர் சமூக வரையியலும்
விலை: 250/-
வெளியீடு: யாப்பு வெளியீடு
Buy this book online: https://www.heritager.in/product/velam-marabin-thamizh-adaiyalam/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers