பண்டைய சமயமும், சமணமும்

பண்டைய சமயமும், சமணமும் :

சமய நிறுவனங்களின் அடிப்படைக்கூறுகள் : இம்மை, மறுமை, மேலுலகம், கீழுலகம், மறுபிறப்பு, ஆவிஉலாவுதல், போரில் இறந்தால் மறுவுலகினை அடையலாம் என்ற நம்பிக்கை சங்க காலத்தில் நிலவியது. எனவே, போரில் மாண்டோர் கடவுளாக்கப் பட்டு மேலுலகம் செல்வதாக கருத்தியல் உருவாக்கப்பட்டு இறந் தோருக்குக் கல் நட்டனர். இவ்வழக்கம் தொன்று தொட்டு தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வந்த சமயநம்பிக்கையாக இருந்தது. இந்த நடுகல் வழிபாடு தொல்லியற் தளங்களில் காணப்படும். நெடுங்கல் என்பதன் தொடர்ச்சியே. கல்லறைச் சவக்குழிகள், எழுத் துடன் கூடிய நடுகல் வழிபாடு அதாவது இரும்பினைக்கொண்டு கல்லினை உடைத்தல் போன்றவை ஒரு கருத்தியலோடும். ஒரு தொழில்நுட்பத்தோடும் தொடர்புடையன.D கருத்தியல் என்பது சமயம்; தொழில்நுட்பம் என்பது இரும்புப் பயன்பாடு. வரலாறு நெடுக ஒவ்வொரு புதிய தொழில்நுட்பமும் சமயவளர்ச்சிக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிறுவனமயமான சமயக்கருத்தியல்கள் இந்தியமயமாதலின் பின்னணியில் வட புலத்திலிருந்தே வந்துள்ளன என்று முன்னர் காணப்பட்டது. நிறுவனமயமாகாத வழிபாட்டுமுறையினை மட்டும் பின்பற்றி வந்த தமிழகமக்கள் ஒரு மாறுதலான காலகட்டத்திற்கு இரும்புப் பண் பாட்டுடன் நுழைந்தனர்.” இதில் தொழில் முனைப்புடன் கூடிய அவைதீக சமயங்களும், வணிகமும், இலக்கிய உருவாக்கமும் ஒன்றிணைந்தன. இரும்புப் பண்பாடு இன்றி அவற்றைப் பேசும்பழத்தமிழ் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருக்க மாட்டா. இப் பண்பாடு இன்றி வேளாண்மையும் வளர்ந்திருக்காது. வளமையான பகுதிகளைக் கைப்பற்றுதற்கு போரும் நடந்திருக்காது. பிறிதொரு நிலையில் வைதீகச் சமயம் இலக்கியப் படைப்பில் முனைந்து ஈடுபட்டுள்ளது. இங்கும் எழுத்தாணி இன்றி ஓலைச்சுவடிகளில் பாக்கள் எழுதப்பட்டிருக்க மாட்டா. சமயச் சடங்குகளாக, வேள்வி, அவியுணவு போன்றவை வைதீகச்சமயத்தினைப் பின்பற்றி உள் வாங்கப்பட்டதாகக் கருத வேண்டும்.

சமய வழிபாட்டில் ஓர் அங்கமாக இலக்கியங்களை பாராயணம் செய்தல் ஒரு மரபாக இருந்துள்ளது. சமய/சடங்கு நூலான வேதம் வெவ்வேறு வகையில் சங்க இலக்கியத்தில் சுட்டப்பட்டுள்ளது. அது வாயால் ஓதப்பட்டு வந்துள்ளது என்பதனை மாயா வாய்மொழி என்று இலக்கியம் சுட்டுவதால் அறியலாம். காலத்தால் முந்திய குறுந்தொகையில் இந்நூல் எழுதாக்கற்பு என்று சுட்டப்பட, பரிபாடல் இதனை மாயா வாய்மொழி என்று சுட்டுகிறது. பரி பாடலில் வேதம் திருமாலிடம் தோன்றியதாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. வேதம் சமூகத்தினை பிரிக்கும் என்பதற்கும், அதனை ஒதுதற்கு அந்தணர் என்ற வகுப்பார் நியமிக்கப்பட்டனர் என் பதற்கும் சான்றுகள் உண்டு. வேதம் ஓதியவர் நான்மறையந்தணர். நான்மறையாளர், நான்மறைமுனிவர், நான்மறையோர் என்று சுட்டப்பட்டுள்ளனர். சிலர் வேதம் ஓதினர்; சிலர் காதால் கேட்டனர். வேதம் ஓதுதலை காதால் கேட்டோர் கேள்வியுயர்ந்தோர் என்று அழைக்கப்பட்டனர். வேதம் ஓதுதலில் புலமைமிக்கவர் வாய்மொழிபுலவீர் எனப்பட்டனர். அந்தணர் மட்டுமே வேதம் ஓதி வந்தனர் என்பதனை அந்தணர்முதுமொழி, அந்தணர் அருமறை என்ற சொற்கள் விளக்கும். காலத்தால் பிந்திய குறள் இதனை நூல் என்று சுட்டுவதால் தொடக்கத்தில் வாய்மொழியாக ஒதப்பட்டு குறளின் காலத்தில் இது நூல்வடிவம் பெற்றது என்று கருதலாம். இக்கருத்து வேதநூலின் காலக்கணிப்பிற்கு உதவும். நிறுவனமின்றி இந்நூலினை வாய்வழியே ஓதிவந்த அந்தணர் நெடும்பாடலாகிய மதுரைக்காஞ்சியின் காலத்தில் அந்தணர்பள்ளியினை நிறுவி வேதம் வளர்த்தனர் என்று அறியமுடிகிறது. இப்படி, வேதபாராயணமும், நூலும் சமூகத்தினை ஒதுவோர் என்றும், கேட்போர் என்றும் பிரிக்கிறது. இதே காலத்தில்தான் வடக்கில் வேதம் வாய்
மொழியிலிருந்து நூல்வடிவிற்கு வந்திருக்க வேண்டும்.” இரும்புப் பண்பாட்டின் விளைவாகத் தோன்றிய வேளாண்பெருக்கமும், உபரி உற்பத்தியும் அரசர்க்குத் துதிபாடும் ஒரு புலவர் கூட்டத்தினை உருவாக்கியது. அரசனுடன் அமர்ந்து தாயம் உருட்டும் அளவிற்கு இவர்கள் செல்வாக்கு இருந்தது. பாணர்கள் அரசர்களால் புறந் தள்ளப்பட்டு வறுமையில் வாட, இவர்கள் கோவில் இல்லங்களில் இடம்பிடித்தனர்.” இப்படி எழுந்த அந்தணப்புலவர்கள்தான் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியுள்ளனர். நெடும் பாடல்கள் பலவற்றைப் பாடியவர்களும் இவர்களே. இவ்வந்தணப் புலவர்கள் மேற்சொன்ன வேதபாராயணம் என்ற மரபின்வழி வந்திருக்கவேண்டும்.

சமயச்சடங்கின் ஓர் அங்கமாக வேள்வி செய்தல் முக்கியமாகப் பின்பற்றப்பட்டுள்ளது. வேள்வி செய்தல் இலக்கியத்தில் பரவலாக சுட்டப்பட்டுள்ளது. வேள்வி, முத்தீ என்று பதியப்பட்டுள்ளது. நல்லூர் வேள்வியார் என்று ஒரு சங்கப்புலவர் உண்டு. மறையோதல் மட்டுமன்றி, வேள்விசெய் அந்தணரும் இருந்துள்ளனர். அவர்கள் வேள்வியந்தணர் எனப்பட்டனர். அச்சத்தினடிப்படையிலும் எதிர்பார்ப்பின் அடிப்படையிலும் நம்பிக்கைகள் மனதில் எழுகின்றன. பொருளியல் பெருக்கமும், வர்க்க அடுக்குகளும் சடங்குகளை நிர்ணயிக்கின்றன. தொழில்நுட்பவளர்ச்சி கடவுள் உருவங்களை உருவாக்கவும் நம்பிக்கைகளை நிறுவனமயமாக்கவும் பயன்படுகிறது. கல்வெட்டு பொறிக்கவும், நடுகல் நாட்டவும் இரும்பின் தேவை அவசியமானது. இங்குதான் இரும்புக்காலம் முற்றாகத் தொழிற் படுகிறது. வரலாற்றுப்போக்கில் முத்தீ வளர்க்கும் சமயச்சடங்குதான் பிந்நாட்களில் தீ வளர்த்து திருமணம் செய்யும் சமூகச் சடங்காக மாறுகிறது.

தீ வளர்த்து வேள்வி செய்யும் சமூகச்சடங்கு உயர்ந்தோர் சமூகத்தின் நிறுவனமாக, அரசகுலத்தினருக்கு என்று வரையறுக்கப்பட்டுள்ளது. வேள்வி செய்தால் போரில் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கை இருந்துள்ளது. இதில் மூவேந்தர்களும் ஈடுபட்டுள்ளனர்; சீறூர் மன்னர்கள், முதுகுடிமன்னர்கள் இதில் பங்குபற்றவில்லை. கரிகாலன் கற்புடைய மகளிருடன் வேள்விச்சாலையில் இருந்தான் என்று குறிப்பு உள்ளது. இதனை அரசகுலத்து சமயச்சடங்கு எனக்சுருதவேண்டும். பெருநற்கிள்ளி ராஜசூயம்செய்தான் என்றும், நலங் கிள்ளி பலவேள்விகளைச் செய்தான் என்றும், குறிப்புகள் உள்ளன. செல்வக்கடுங்கோ வாழியாதான் வேள்வி செய்தான். முதுகுடுமிப் பெருவழுதி பலயாகங்களைச் செய்தான்.” அரசகுலத்தினரின் நம்பிக்கை இவ்வாறிருக்க, மக்களின் சமயநம்பிக்கை வேறானது. நீ மூட்டி வேள்வி செய்யும் சடங்கு அத்தீயினில் போருக்கான இரும்புத்தளவாடங்களை உருக்கி ஆயுதம் வார்க்கும் தொழில் வளர்ச்சியின் தொடக்கம் என்று கருதலாம். மூவேந்தர்கள் வேள்விக்கு முக்கியத்துவம் தந்தனர் என்பதனைவிட, வேள்வியின் தொடக்கம் போருக்கான முயற்சி என்றும் அதனால் அச்சடங்கிற்கு முக்கியத்துவம் தந்தனர் எனலாம்.

சமணமும் பவுத்தமும்

பழந்தமிழகத்தில் சமணமும் பவுத்தமும் சமூக மாற்றங்களுக்கு வழிவிட்டதாக அமைந்துள்ளது. பவுத்தத் தளங்கள் பெரும்பாலும் கடற்கரையோரங்களில் அமைந்திருக்க, சமணத்தளங்கள் பெரும் பாலும் உள்நிலப்பகுதிகளில் அமைந்திருப்பதனை அவதானிக்க முடிகிறது. பவுத்தத் தளங்களில் ஒப்பீட்டளவில் பெரும்பாலும் இரும்புச் சான்றுகள் கிடைக்கவில்லை. அங்கு செங்கல் அமைப்பு களைக் காணமுடிகிறது. கடற்புரமான காவிரிபுகும்பட்டினம் இதற்கு நல்லதோர் காட்டாகும். மாறாக, சமணத் தளங்களினருகே யுள்ள தொல்லியல் தளங்களில் குறிப்பிடத்தக்க அளவில் கற்கட்டட அமைப்புகளும், இரும்புச்சாதனங்களும் கிடைத்துள்ளன. இதற்கு சித்தண்ணவாசலும், தர்மபுரி, வடார்க்காடு வட்டாரமும் நல்ல காட்டாகும்.

உப்பும், நெல்லும், இரும்பும் மதிப்புமிக்க பொருளாக இருந்துள்ளதனை செம்மொழி இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன; அவற்றை விற்கும் வணிகர்களை அதே காலத்தையொட்டின சமண சமயம் சார்ந்த பழந்தமிழ் கல்வெட்டுகள் பதித்துள்ளன.” ஆனால், கப்பலேறின மணப்பொருள்களைப் பற்றிப் பேசவில்லை. எனவே, கடல் தாண்டின வணிகத்திற்கும் சமணசமயத்திற்கும் தொடர் பில்லை எனலாம். சமணம் இந்தியாவின் மேற்குநிலப்பகுதியின் வழியேயும், பவுத்தம் கிழக்கு கடற்கரையோரமாகவும் தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டும். இவ்விரு சமயங்களும் உள்நிலை, அயல் நிலை வணிகத்தில் திளைத்திருக்க வைதீகசமயமோ வேந்தர்களோடுஇணைந்து ஒரு அரசுருவாக்கத்திற்கு முனைப்புடன் செயல்பட்டது. இம்மூன்று சமயங்களுமே தங்கள் தங்களுக்கான நிறுவனங்களை உருவாக்கிக்கொள்ளத் தலைப்பட்டன. இதற்கு இரும்புத் தொழில் நுட்பம் பெரிதும் துணை நின்றது. இதனை அந்தந்த சமயம் சார்ந்த சிற்பத்தொகுதிகளில்
காணலாம். (நூலிலிருந்து)

இரும்புக் காலமும் சங்க இலக்கியமும்-முனைவர். கி. இரா. சங்கரன்
விலை: 75/-
வெளியீடு: NCBH
Buy this book online: https://www.heritager.in/product/irumbu-kaalamum-sanga-ilakkiyamum/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers