தொல்லியல் கண்டுபிடிப்புகள்

தொல்லியல் கண்டுபிடிப்புகள் :

சமீப காலங்களில் காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம் ஆகிய துறைமுக நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் பௌத்த விகாரைகளின் அடித்தளங்களும், பௌத்த மத கருவூலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காவிரிப்பூம்பட்டினத்தில் கி.மு.இரண்டாம் நூற்றாண்டிற்குரிய புத்தரின் பாத பீடங்களும், நாகபட்டினத்தில் கி.பி.இரண்டாம் நூற்றாண்டிற்குரிய புத்த பிரானின் செப்புத் திருவுருவும் கண்டெடுக் கப்பட்டிருக்கின்றன.

அழகர் மலைக் குகையொன்றில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டிற்குரிய பிராமி எழுத்துக் களில் ‘தாவிர’, ‘தாவிரை’ என செதுக்கப்பட்டிருக்கும் பெயர்கள் ஒரு பௌத்த தேரரையும். பிக்குணியையும் குறிப்பிடுவதாக பேராசிரியர் இந்திரபாலா கூறியுள்ளார். (Indrapala: Proceedings of the Filth International Conference – Seminar of Tamil Studies, pp 12-17)மத்திய பிரதேசத்தில் பர்ஹாத் (Bharhut) பௌத்த விகாரம் வரலாற்றுப் பெருமை மிக்கதாகும். கி.மு இரண்டாம் நூற்றாண்டில் இவ்விகாரம் கட்டப்பட்ட சமயம் அதற்கு நன்கொடையளித்தவர்களின் பெயர்கள் அங்கே பிராமி எழுத்துக்களில் கற்பலகைகளில் பொறிக்கப்பட்டிருந்தது. இக்கல்வெட்டுகளை வாசித்து லூடேர்ஸ் என்ற மொழியியல் அறிஞர் பிரசுரித்திருந்தார். அந்த நூலில் ஒரு பகுதி நன்கொடை அளித்தவர்களின் ஊர்களையும் நகரங்களையும் குறிப்பிட்டிருந்தது.

அதில் ஒரு கல்வெட்டில் ‘காகம்டி’யிலிருந்து சோமா என்ற பெயர் கொண்ட பிக்குணி நன்கொடை அளித்திருப்பதாகப் பதிவுசெய்யப்பட்டிருந்தது. (Bharhut Inscrip tions: Corpas Inscriptionism Indicum, Vol II, Part II: Ed.by H.Luders, 1963, pp 6-10)

வட இந்தியா முழுவதிலும் சமஸ்கிருத, பிராகிருத, பாளி இலக்கியங்களையெல்லாம் அலசியும் லூடேர்ஸ்ஸினால் ‘காகம்டி’ என்ற இடத்தை இனம்கண்டு கொள்ளமுடியவில்லை. சமீபகாலங்களில் கல்வெட்டியலாளர் ஐராவதம் மகாதேவன் ‘காகமடி’ என்ற பிராகிருதப்பதம் ‘காகண்டி’ என்ற தமிழ்ப்பெயரின் பெயர்ப்பே என்பதை எடுத்துக்காட்டி, ‘காகண்டி’ என்பது பூம்புகாரின் மாற்றுப்பெயரே என எடுத்துக் கூறியுள்ளார்.

”காகந்தன் காத்தல்! காகண்டி என்றே இயைந்த நாமம் இப்பகுதிக் கிட்டீங்கு”

என்னும் மணிமேகலைப் பாடல் வரிகளில் (அத் xxii: 37-38) காகந்தன் என்ற பெயர் கொண்ட ஓர் அரசன் முன்னொருநாள் பூம்புகாரில் ஆட்சி புரிந்ததனால் அந்நகருக்கு ‘காகண்டி’ என்றொரு மாற்றுப்பெயரும் உண்டு எனக் கூறுகிறது. இதிலிருந்து கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பூம்புகாரில் (காவிரிப்பூம்பட்டினம்) பௌத்த பிக்குகள், பிக்குணிகள் வாழ்ந்தார்கள் என அறிய முடிகிறது.(நூலிலிருந்து)

பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள் – சிவ தியாகராஜா
விலை: 420/-
வெளியீடு:குமரன் புத்தக இல்லம்
Buy this book online: https://www.heritager.in/product/bouthathai-valaratha-pandaiya-thamizhargal-siva-thiyagaraja/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers