அர்த்தசாஸ்திரம் என்பது என்ன?
அதன் பெயரிலிருந்து, அர்த்தசாஸ்திரம் என்பது பொருளாதார நிறு வனங்களைப்பற்றிய நூல் என்று நாம் நினைக்கலாம். ஆனால், அது பாதி உண்மை மட்டுமே. அர்த்தசாஸ்திரம் ஆட்சிமுறைகளைப்பற்றிய அறிவையும் ஒரு நாட்டை எவ்வாறு வழிநடத்தலாம் என்ற ஆலோ சனைகளையும் தரக்கூடியது. குறிப்பாக முடியாட்சிபற்றி அது விரிவாக எடுத்துரைக்கிறது.
செல்வத்தையும் அது அரசாட்சியுடன் அடையாளப் படுத்துகிறது. அது எப்படி என்று கொஞ்சம் விரிவான நோக்கில் பார்த் தால் செல்வம் உலகியல் வெற்றியிலிருந்து, அரசியல் அதிகாரத் திலிருந்து பெறப்படுகிறது. இந்நாளில் பொருளாதாரமும் அரசியலும் தனித்தனியாக வேறுபடுத்தப்படுகிறது. ஆனால், அர்த்த என்னும் பொருளில், பொருளாதாரமும் அரசியலும் இரண்டறக் கலந்ததாகவே கருதப்பட்டுவந்தது.
அர்த்தசாஸ்திரத்தைப் படிக்கும்போது இந்த வேறு பாட்டை நினைவில்வைத்துக்கொள்ளவேண்டும். தற்கால விளக்கங் களின் அடிப்படையில், அர்த்தசாஸ்திரத்தின் சில பகுதிகள் பொருளா தாரத்தைப்பற்றியும் சில அரசியலைப்பற்றியும் அமைந்துள்ளன. ஆனால், அதன் முதல் வாசகர்களுக்கு அர்த்த என்பது செல்வத்தையும் அரசதிகாரத்தையும் ஒன்றிணைத்த சொல்தான்.
அர்த்தசாஸ்திரத்தின் ஆசிரியரான கௌடில்யர் தனிமனிதனின் செல்வத் திலிருந்து அரசுகளின் செல்வம்வரை செல்வத்தைப் பல்வேறு வகை களாகப் பிரிக்கிறார். இதன் அடிப்படை, வர்த்த என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படும் பொருளாதாரமேயாகும் (வர்த்தகம்). இன்னும்
தெளிவாக அந்த வார்த்தையின் பொருள், வாழ்க்கையை விரிவுபடுத்துவது (விருத்தி) அல்லது விவசாயம், மேய்த்தல், பண்டமாற்று என்ற முறைகளின்மூலம் பொருட்களை உற்பத்தி செய்தல் என்பதாகும். இந்தப் பொருளாதார நடவடிக்கைகள் தானியங்கள், கால்நடை,பணம், மூலப் பொருட்கள், பணியாட்கள் (1.4.1) ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றன.
அர்த்தசாஸ்திரம் அர்த்த என்னும் சொல்லின் விளக்கத்தை வாழ்க் கையிலிருந்து தொடங்குகிறது:
இப்படி இரு கச்சிதமான சூத்திரங்களில் அர்த்த என்பது மூன்று நிலை களாக விளக்கப்படுகிறது. முதலாவது மனிதன் வாழ்வாதாரத்துக்காக உற்பத்தியில் ஈடுபடுவது. அடுத்து, மனிதர்கள் வாழும் பூமி அந்த உற்பத்திக்காகப் பயன்படுவது.
கடைசியாக அவ்வாறு உற்பத்திக்காகப் பயன்படும் பூமியை ஒரு அரசன் கைப்பற்றுவதும் அதனைக் காப்பதும். ஆக, செல்வத்தின் உச்சபட்ச விளக்கம் அரசுரிமையின்மூலம் தரப் படுகிறது. ஏனெனில், வாழ்விடங்களையும் உற்பத்தியைத் தரக்கூடிய பகுதிகளையும் கைப்பற்றுவதும் காப்பதும் அரசரது கடமையில் அடங்கும். இதன் உட்கருத்து, அரசரின் முக்கியத்துவம் அவர் ஆட்சி செய்யும் பகுதிகளில் உள்ள மக்களிடம் வரிவிதிப்பதற்கான அவருடைய அதிகாரத்தில் அடங்கியுள்ளது.
அர்த்தசாஸ்திரம்: உலகின் முதல் பொருளாதார நூல் – தாமஸ் ஆர்.டிரவுட்மன்
195/-