தமிழர் சமயம்
உலகத்தில் மதங்களுக்குப் பெயர் வழிபடும் தெய்வத்தை வைத்தாவது, சமயத் தலைவன் பெயரைத் தழுவியாவது, பிரமாண நூல்களைப் பொறுத்தாவது அமைவதேயன்றி மக்களினத்தின் பெயரால் அமைவதில்லை. வழிபடுங்கடவுளின் பெயர் சிவமாயின் அம்மதம் சைவமெனப்படும், தெய்வத்தின் பெயர் விஷ்ணுவாயின் மதம் வைணவம் எனப்படும். கிறிஸ்து மதமும் மகம்மதிய மதமும் புத்தமதமும் சைனமதமும் சமயத்தலைவர்கள் பெயரால் ஏற்பட்டவை. செராஸ்டிரிய மதமும் கன்பூசிய…