Team Heritager

Team Heritager

Editor-in-Cheif of Heritager Magazine

சிதறிக் கிடக்கும் பாடல் பெற்ற ஸ்தலம் இராசு. சரவணன் ராஜா, வேலூர்

சென்னை வேலூர் நெடுஞ்சாலையில், 20 கி.மீ ராணிப்பேட்டைக்கு அருகில் நீவா நதிக் கரையில் பாடல் பெற்ற திருத்தலம் திருவல்லம் அமைந்துள்ளது. பல்லவர்கள், கங்கர்கள், பாணர்கள், சோழர்கள், விஜயநகர நாயக்கர்கள் எனப் பல அரசர்கள் நிவந்தனம் அளித்த மற்றும் பாடல் பெற்ற தலம் இது. திருவலம் கோயிலின் தெற்கே சுமார் 2 கி மீ. தொலைவில் கம்மராஜபுரம்…

தென்னிந்தியாவின் திபெத் – வேலுதரன்

கர்நாடக மாநிலத்தின் கொல்லேகாலம் அருகேயுள்ள திபெத் அகதிகளின் ஒரு குடியமர்வு (Dhondenling Tibetan Settlement) என் பார்வையில் இக்கட்டுரையில் காண்போம்.       சென்ற ஜனவரி மாதத்தில் இரண்டு நாள் பயணமாக கர்நாடக மாநிலத்தில் மாண்டியா அருகே உள்ள சோழர்கள், கங்கர்கள் மற்றும் போசாளர்களால் கட்டப்பட்ட கோயில்களைக் காணச் சென்று இருந்தோம். கல்வெட்டுக்கள், கட்டிடக்கலை…

வழுதி கண்ட தென்காசி பெருங்கோபுரமும் – பொன் கார்த்திக்கேயன்

வரலாறு குறித்து தேடத் தொடங்கிய போது எங்கெல்லாமோ தேடி அலைந்துவிட்டு சொந்த ஊரில் வாளாவிருக்கிறோமே என்ற குறை அடிக்கடி இருந்துவந்தது. ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும் போதெல்லாம் தூங்கி எழவே பொழுது சரியாயிருந்தது. இம்முறை எப்படியேனும் காசி கண்ட பெருமாள் பராக்கிரம பாண்டியனது சிற்பத்தையும் தென்காசிப் பாண்டிய இலச்சினை (இரட்டைக் கயல்) யையும் காண வேண்டுமென்ற…

கலைஞருடன் ஒரு சந்திப்பு – இராசு. சரவணன் ராஜா

நாம் செல்லும் ஆலய கோபுரங்களின் மேலே அமைந்த கலசங்கள், கருவறை வாயிற்படியிலும் பக்கத் தூணிலும் போர்த்தப்பட்டுள்ள வேலைப்பாடுடைய தகடுகள், கருவறையில் உள்ள திருமேனிகளை அலங்கரிக்கும் பொன், வெள்ளி அல்லது பித்தளையிலும் உள்ள கலசங்கள், பிரபை என்று சொல்லப்படுகின்றன. திருவாசி எனப் பல உலோகத்தில் ஆன உருவங்கள் நிச்சயம் நம் கண்ணில் தென்படும்.       …

உத்திரமேரூர் காஞ்சி பயணம் – ஐந்திணைக் காப்போம். சண்முகப் பிரியன்

எங்கள் பயணத்தின் முதல் இடமாக நாங்கள் தேர்வு செய்த ஊர் உத்திரமேரூர். பழைய கற்காலத்தை சேர்ந்த கல் திட்டை, வடவாயில் செல்வி எனும் பல்லவர்கால கொற்றவையின் பலகைக்கல் சிற்பம், ஐயனார், பராந்தக சோழன் காலத்தில் குடவோலை தேர்தல் முறை மற்றும் விதிகளை கூறும் கல்வெட்டு, த்ரி தள அஷ்டாங்க விமான அமைப்பு கொண்ட சுந்தர வரதராஜ…

மறுகால்தலை சமணர்படுகைகள் -ச.சு. நாகராஜன்

கடந்த வருடத்தின் கடைசி நாளின் மாலைப் பொழுது சமண படுக்கையில் வருடக் கடைசியிலாவது சயனிக்க எண்ணம். அதனால் நானும் தம்பி சோமேஷும் மாலை சரியாக 5 மணிக்குச் சித்த மருத்துவக் கல்லூரியை விட்டுக் கிளம்பினோம். நேரே முதல் தீர்மானம் நெல்லைச் சீமையின் சீவலபேரியை நோக்கியதாகப் பயணம். வேகப் பயணத்தை இளந்தென்றல் மட்டும் எங்களை வேவு பார்த்து…

பழந்தமிழர் துறைமுகம் முசிறி பட்டினம் பேராசிரியர். வேல்முருகன்

அமணன்’ என்கிற ஒற்றை தமிழ் சொல்லுக்குள் தமிழனின் பேரடையாளம் ஒளிந்து இருப்பதை முசிறி அகழாய்வு நமக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறது. பண்டைய தமிழனின் நாகரீக எச்சங்கள் இன்றைய தமிழ் மண்ணில் மட்டுமின்றி உலகம் முழுக்க வியாபித்து கிடப்பதை இத்தகைய அகழாய்வுகள் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. உலக சாலைகள் எல்லாம் ரோம் நகரை நோக்கியே எனப்படும் சொலவடை போல் உலக…

பூரியின் ரதயாத்திரை – பொற்செல்வி

பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒருநாள். ஒடிசாவின் கருப்புக் கண்மணி ஜெகந்நாதரின் தேரோட்டத் திருவிழாவிற்காகப் பூரியே அமர்க்களப் பட்டுக் கொண்டிருந்தது. திருவிழாவைக் காண்பதற்காகப் பூரி மன்னரின் மனங்கவர்ந்த காஞ்சி இளவரசி பத்மாவதியும், மன்னரும் வந்திருக்கிறார்கள். பழங்காலத்திலிருந்தே தமிழ்நாட்டிற்கும், ஒடிசாவிற்கும் இடையே வணிகம், கலை, கலாச்சாரத் தொடர்பு கடல் வழியாக இருந்திருக்கிறது. அடுத்து திருமணமும் நடக்கவிருக்கிறது என்பதால் ஊரே…

சதீ – பிரதிக் முரளி (ஆய்வு மாணவர்)

பொய்கையும் தீயும் ஓரற்றே ! “பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே ! போற்றுவோம் இஃதை எமக்கில்லை ஈடே” என்று போற்றி பாட்டிசைத்த பாரதியின் பாரதம் கடந்து வந்த பல கோடி ஆண்டு வரலாறு வியக்கத்தக்கது. பற்பல பொற்காலம் கடந்தும், சமூக அவலங்கள் களைந்தும், தன் மக்களை பேணி அரவணைக்கிறாள் பாரத அன்னை. “களையப்பட்டுவிட்டனவே” என்ற ஒரே…

ஜம்முவில் தேடல் 1 – Ar. ரா. வித்யாலட்சுமி

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும், வெவ்வேறு விதமான கட்டிடக்கலையிலை நம்மால் பார்க்க முடிகிறது. அந்தந்த ஊரின் தட்பவெப்ப அமைப்பும், புவியியல் அமைப்பும், கிடைக்கும் பொருட்களும், வந்து செல்லும் வணிகர்களும், உள்ளூர் கலைஞர்களும், பொருளாதார நிலையும், அரசர்களின் ஆர்வமும் கட்டிடகலையின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் ஒரு வகையில் கட்டப்படும் கோவிலோ, வீடோ, கேரளத்தில் வேறு விதத்திலும்,…