தமிழகத்தின் சப்த கன்னியர்களும் சப்த மாதர்களும்
நாட்டார், கிராம தெய்வ வழிபாடு சங்க காலத்திலும் அதற்குப் பின்பும் தொடர்ந்தது. கிராமங்களில் இன்றும் வழிபாட்டில் இருக்கும் கன்னிமார் சாமிகளின் தொடர்ச்சியே வைதீக காலத்தில் சப்தமாதர் வழிபாடு. குடும்பங்களில் இறந்த கன்னிப்பெண்கள் கடவுளாக, குலதெய்வமாக, காவல் தெய்வமாகவே வணங்கப்பட்டனர். இவர்களே பின்னாட்களில் சப்த கன்னியர்களாக மாறினர் என்ற கருத்தும் உள்ளது. சங்ககால மக்கள் பல தெய்வத்…