அதியமான்கள் – வரலாற்று சுருக்கம்

தகடூர் வீழ்ச்சிக்குப் பின்னர் வரலாற்றுத் தொடக்கக் காலத்திய அதியமான் மரபு குறித்த செய்திகளை அறிய இயல வில்லை. மழகொங்குப் பகுதியில் பாண்டியரால் வெற்றி கொள்ளப்பட்ட அதியர்கள், அதியமான் மரபின் வழித் தோன்றலாவர். ‘அதியமான்’ எனும் தமிழ்ச் சொல்லே வட மொழியில் அதியர் எனப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட பாண்டிய அரசர்கள் மழகொங்குப் போரில் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளமையால் அதியமான்…