Team Heritager

Team Heritager

Editor-in-Cheif of Heritager Magazine

நாட்டுப்புறத் தெய்வங்கள்

நாட்டுப்புறத் தெய்வங்கள்: நாட்டுப்புற மக்களால் தொன்று தொட்டு வழிபடுகின்ற கிராம தெய்வங்களே நாட்டுப்புற தெய்வங்கள் அல்லது நாட்டார் தெய்வங்கள் அல்லது சிறு தெய்வங்கள் என்று அழைக்கப்படுகிறது. இவை நாட்டுப்புற மக்களின் காவல் தெய்வங்களாக நோய் நீக்கி நலம் மற்றும் வளம் தருபவையாகக் கருதி வணங்கப்படுகின்றன. வணங்கினால் நன்மையும் வணங்காவிட்டால் தீமையும் நேரிடும் என்ற நம்பிக்கையில் மக்களால்…

சாதி மற்றும் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள்

சாதி மற்றும் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள் : இந்தியாவில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சாதி முறை ஏற்பட்டது. இந்துக்களிடம் மட்டுமல்ல, முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள். சீக்கியர்கள் ஆகியோரிடமும் சாதிப் பிரிவினை உள்ளது. சாதி முறைக்குப் பல அம்சங்கள் இருந்தாலும், உயர் சாதியினர் கீழ்ச் சாதியினரைச் சுரண்டுவதையும், நாட்டு வளங்களைக் கீழ்ச் சாதியினர் அனுபவிக்க விடாமல் உயர்…

வீரப்ப நாயக்கர் மீட்ட பள்ளிவாசல் நிலம்

வீரப்ப நாயக்கர் மீட்ட பள்ளிவாசல் நிலம் : மதுரை நகரில் உள்ள கோரிபாளையம் பள்ளிவாசலில் வீரப்ப நாயக்கர் (1572-1595) கல்வெட்டொன்று உள்ளது. ‘சிவமயம்’ என்று தொடங்கும் அக்கல்வெட்டு ஒரு அரிய தகவலைத் தருகிறது. அப்பள்ளிவாசலில் நல்லடக்கமாயிருக்கும் புனிதர் டில்லிப் பேரரசர் வாரங்கல்லில் ஆட்சிபுரிந்த சுல்தான் ஆவார். உலுக்கான் அல்லது துக்ளக் என்பது அவர் பெயர். அவர்…

குரங்கின் பெயர்கள்

குரங்கின் பெயர்கள் : சங்க இலக்கியத்தில் குரங்கும், அதன் வகைகளான கடுவன், மந்தி, கலை, முசு,ஊகம் என்பனவும் சுட்டப்பட்டுள்ளன. குரங்கு : குரங்கு, குரங்கினங்களின் பொதுப் பெயராகும். குரங்கு என்ற பெயர் “குர்…உர்+கு என அதன் சத்தத்தின் அடிப்படையில் அமைந்ததென்பர்”(39) தி. முருகரத்தினம். இச்சொல் நான்கிடங்களில் குறிக்கப்பட்டுள்ளது. கடுவன் : கடுவன்- மந்திக் குரங்கின் ஆண்.…

இலக்கியங்களில் ஒப்பாரிப் பாடல்களின் தாக்கம்

இலக்கியங்களில் ஒப்பாரிப் பாடல்களின் தாக்கம் முன்னுரை மனிதன் பிறப்பதும் வாழ்வதும் இறப்பதும் இயற்கையின் செயல்பாடுகளாகும். பிறப்பது இன்பத்துடன் வரவேற்கப் படுகின்றன. இறப்பது துன்பத்துடன் வெறுக்கப்படுவது. முன்னது தாலாட்டாகவும், பின்னது ஒப்பாரியாகவும் இருவேறு நிலைகளில் மக்களால் பாடப்பட்டு வருகிறது. ஒப்பாரிப் பாடலில் துன்பச் சுவை எளிய நடையில் அமைவதால் இறப்பிற்குத் தொடர்பற்றவரையும் தொடர்புடையவராக்கும் ஆற்றல் ஒப்பாரிக்கு உண்டு.…

புது மண்டபம் வசந்த மண்டபம்

‘புது மண்டபம் வசந்த மண்டபம்’ திருமலைநாயக்கர் கட்டிய சிறந்த கட்டடங்களில் இதுவும் ஒன்று. இது மிகுந்த சிற்ப வேலைப்பாடு அமைந்த கல்மண்டபம். ஆண்டுதோறும் வைகாசித் திங்களில் நடைபெறும் வசந்தோற்சவத்திற்காகக் கட்டப்பட்ட மண்டபம் ஆகும் நாயக்கர் காலத்தில் இக்கட்டடம் கட்டப்பட்டதால் ‘புது மண்டபம்’ எனப் பெயர் பெற்றது. இம்மண்டபத்தை சிவபெருமான் கோயிலுக்கு முன் அமைக்க முடிவு செய்தார்.…

அமெரிகோ வெஸ்புகி

அமெரிகோ வெஸ்புகி : அமெரிக்காவை நிஜமாகவே கண்டுபிடித்தவர் ‘ஒரு வேலையை ஒழுங்காகச் செய்யத் தெரியாதா உனக்கு?’ அமெரிகோ வெஸ்புகியை அறிந்தவர்கள் அனைவரும் இந்தக் கேள்வியை அவரிடம் ஒருமுறையாவது எழுப்பியிருப்பார்கள். ஒரு வேலையில் அப்போதுதான் சேர்ந்திருப்பார். அடுத்தமுறை பார்க்கும்போது, அதை விட்டுவிட்டு இன்னொரு வேலையில் இருப்பார். நகைக்கடையில் சேர்ந்திருக்கிறேன் என்பார். இல்லை அது சரியில்லை இப்போது சொந்தத்…

சாணார் தம் பேய் வழிபாட்டின் பூர்வீகம்

சாணார் தம் பேய் வழிபாட்டின் பூர்வீகம் : சாணார்களின் பேய் வழிபாடு ஆழங்காண முடியாத பழைமையில் அதாவது பரம்பொருள் அல்லது வானுலகினர் வழிபாட்டிற்கு இணையான பழைமையில், வேர்கொண்டிருக்கிறது. எப்போதும் கெடுதி செய்யும் விரோதிகளான மூலப்பேய்களின் வெற்றிகள், அவை பற்றி வேதங்களில் காணும் மறைமுகக்குறிப்புகள், ஒரு வரலாற்று உண்மையின் புராணக் கருத்தாகக் கருதப்படும் பட்சத்தில் பேய்வழிபாடானது வேதிய…

மாரநாட்டுக் கருப்பு

மாரநாட்டுக் கருப்பு : கோவில் அமைந்துள்ள இடம்: திருப்புவனத்தில் இருந்து ஒன்பது கிலோ மீட்டர் தொலைவிலும் திருப்பாச்சேத்தியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஊர் மாரநாடு. கேரளத்தில் இருந்து வந்த கருப்பர் நிலையாகத் தங்கிய இடம் இந்த மாரநாடு ஆகும். மாரநாட்டுக் கருப்பர் என்றாலே சிவகங்கை மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெரியாதவர்கள்…

தேவதாசி முறையின் வீழ்ச்சி

தேவதாசி முறையின் வீழ்ச்சி (கி.பி.1310-1378) தேவதாசி முறையின் உள்ளுறைந்து வளர்ந்து வந்த பலவீனத்தை வெளிச்சமிட்டுக் காட்டுவதாக முஸ்லிம் இடையீடு அமைந்தது. முந்தைய காலத்தில் அது அரச ஆதரவைப் பெற்று ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை கிளைத்துத் தழைத்து வளர்ந்தோங்கியிருந்தது. ஆனால், இப்போது அது அந்த ஆதரவை இழந்ததோடு, சரிவையும் சந்திக்க நேர்ந்தது. கி.பி.1310 முதல் 1378…