கொள்ளிடம்
தமிழ்நாட்டின் பெரிய ஆறு என்றால் என்னைப் பொருத்த வரை கொள்ளிடந்தான். காவிரி, வைகை, தாமிரபரணி போன்ற ஆறுகளைப் பக்கம் பக்கமாக பதிவு செய்துள்ள இலக்கியங்கள் ஒற்றை வரியில் கூட கொள்ளிடத்தை நினைவு கூர்ந்ததில்லை. கொள்ளிடக் கரையில் உள்ள என்னுடைய ஊர் நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதன் சுருக்கமே இந்த நூல். அப்போது…