இடைக்காலச் சோழர்களின் நிர்வாக முறைகள்
நாட்டின் பெயராக அமைந்த ஊர்கள் பல பிற்காலத்தில் பிரமதேயமாகவும், நகரமாகவும் தேவதானமாகவும் மாற்றம் பெற்றுள்ளது. நாடுகளுக்கு பெயரிடுவதில் வேறு வகையும் இருந்திருக்கின்றன. அவை கூற்றம், வளநாடு, ஆற்றுப்போக்கு, குளக்கீழ் என்ற பெயர்களில் வழங்கப்படுகின்றன. இவை இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற முறையில் இடம்பெற்ற பெயர்களாகும். ஆனால் நாடு, கூற்றம் போன்ற வழக்கமே அதிகளவில் இருந்திருக்கின்றன. குளகீழ், ஆற்றுப்போக்கு…