தாராசுரம் (நேரிசை ஆசிரியப்பா) -கவிஞர். வெண்கொற்றன்

குடந்தை மாநகர் குடபுறம் தாரா சுரமெனும் பதியில் சொல்லுக் கடங்கா வடிவுடை சிற்பக் கடலினைக் கல்லில் ஐரா வதீசர் அழகுத் தளியெனச் செய்ராச ராசன் சிந்தை ஊறிய…………………5 அழகியற் காதலை அணுவினும் சிறிதாய் அறியவும் நமக்கு ஆவ தாமோ? பெரிய கோயிலின் சிறிய வடிவாய் அரிய கலையின் அன்னை மடியாய் அளவில் உயர்வு ஆக்கி டாது…