Category கட்டுரைகள்

மீண்ட புத்தர், மீளும் தொல்லியல் தடயங்கள்

சில மாதங்களுக்கு முன்பு சமண பௌத்த தடய தேடலை திருச்சி லால்குடி பகுதியில் பல்லபுரம் மற்றும் நகர் ஆகிய கிராமங்களில் நடத்தினோம். திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் கணகம்பீரமாக அமர்ந்து இருக்கும், இ.வெள்ளனூர் அருகில் இருந்த புத்தரைத் தேடுகையில் அவர் களவு போன விசயம் கேள்விப்பட்டு திரும்பிவிட்டோம். அடுத்த நாள் மீண்டும் அந்தக்…

சென்னையில் நடந்தப் போர்

வெயில் சாயும் நேரம் என்றாலும் கதிரவன் சற்று காட்டமாகவே இருந்தது. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில் ஏறி ஆவடி ரயில் நிலையத்தில் இறங்கினோம். இடது புற சந்தையைக் கடந்த பின் பேருந்து மற்றும் ஆட்டோக்கள் வந்தவண்ணம் இருந்தன. பச்சை அம்மன் ஆலயம் என்பதே அடையாளம். ஆட்டோவில் பத்து ரூபாய். சிறிது தூரம் கடந்த பின் இடம்…

ஐகொளெ

ஐகொளெ அல்லது அய்கொளெ (Aihole) கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள இவ்வூர் ஒரு  வரலாற்றுச் சிறப்புபெற்ற சிற்றூர். சென்னையிலிருந்து அனந்தபூர், பல்லாரி வழியாகச் சென்றபோது கிட்டதட்ட 825 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அய்கொளெ. கி.பி ஐந்தாம் நூற்றாண்டு காலத்திலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை கட்டப்பட்ட கிட்டத்தட்ட 70 க்கும் மேற்பட்ட கற்கோயில்களைக் கொண்டு சாளுக்கிய கட்டிடபாணிக்குச்…

மறையும் தவ்வை வழிபாட்டு மரபுகள்

“தவ்வை”, இப்படிச் சொன்னால் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. ஜேஷ்டா அல்லது மூதேவி என்றழைக்கப்படும் மூத்த தேவி தான் தவ்வை. இப்பெயரிலேயே திருக்குறளில் வரிகள் வருகின்றது. பெண்தெய்வங்களில் மூத்தவள் இவளைப்பற்றிப் பல அமங்கல கதைகளும், நம்பிக்கைகளும் உலாவி வருகின்றன. அதனால்தான் தவ்வை இருக்கும் இடங்களில் பெயர்ந்து கோயிலுக்கு வெளியில் எறியப்பட்டு இன்று லக்ஷ்மியின் சந்நிதி அங்குக் காணமுடிகிறது. பெரும்பாலான…

சமணர்களுக்கு அளித்த சோழர் காலப் பள்ளிச்சந்தம்

ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலும், வேலூர் நகரிலிருந்து 30 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது பஞ்சபாண்டவர் மலையில் அமைந்துள்ள விளாப்பாக்கம் குடைவரைக் கோயிலைப் பற்றிக் காண்போம். ஆற்காடு மற்றும் கண்ணமங்கலம் இடையே நெடுஞ்சாலை வழியாக உள்ள ஒரு சிறிய கிராமம் விளாப்பாக்கம், இந்த மலைப்பகுதி 8 ஆம் மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில்…

விஜயநகரத்தை நோக்கி

ஒரு முறை வரலாற்றுத்தேடலில் ஈடுபட ஆரம்பித்தால் அதற்கு முடிவே கிடையாது என்றே சொல்லலாம். புதியதாக ஒன்றைத் தேடத் தோன்றும். அறியாத ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்படும். அந்த வகையில் ஒரு வரலாற்றை தேடிச் சென்றபோது ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்புகள் தான் இந்தப் பதிவு. நம் அனைவருக்கும் ஒரு ஆசை இருக்கும்…

தற்சார்பு வீடுகள்

தமிழரின் இயல்பான தற்சார்பான வாழ்வியலில் ஒரு குறு விவசாயி தனது வாழ்வியல் தேவைகளுடன் வடிவமைத்து வாழ்ந்த சிறிய வீடு பழையூர், தெம்மாவூர் பஞ்சாயத்து, குன்றாண்டார் கோயில் ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டம். இதில் நாம் அறிந்து கொள்வது இந்த வீடு கட்ட பயன்படுத்திய பொருட்கள் யாவும் அந்தப் பகுதியில் கிடைப்பவை. செம்பாரங்கல், நாட்டு செங்கல், மண் காரைக்…

தமிழகத்தின் சப்த கன்னியர்களும் சப்த மாதர்களும்

நாட்டார், கிராம தெய்வ வழிபாடு சங்க காலத்திலும் அதற்குப் பின்பும் தொடர்ந்தது. கிராமங்களில் இன்றும் வழிபாட்டில் இருக்கும் கன்னிமார் சாமிகளின் தொடர்ச்சியே வைதீக காலத்தில் சப்தமாதர் வழிபாடு. குடும்பங்களில் இறந்த கன்னிப்பெண்கள் கடவுளாக, குலதெய்வமாக, காவல் தெய்வமாகவே வணங்கப்பட்டனர். இவர்களே பின்னாட்களில் சப்த கன்னியர்களாக மாறினர் என்ற கருத்தும் உள்ளது. சங்ககால மக்கள் பல தெய்வத்…

அருகன் அல்லது முருகனைத் தேடி

எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து இக்கோயிலானது மொட்டையாண்டி கரடு என்றே அறிந்திருக்கிறேன். “குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்” என்றக் கருத்துக்கேற்ப, இங்குள்ள ஒரு குன்றில் மொட்டையாண்டியாக வள்ளி தெய்வானையுடன் முருகன் நின்று காட்சியளிக்கின்றார் என்று அங்குள்ள மக்கள் கூறுங்கின்றனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் புங்கம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கணக்குவேலன்பட்டி கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார அனைத்து…

சங்ககால தமிழர் அறுசுவை விருந்துகள்

நவிர மலை(பர்வத மலை) நாட்டை ஆண்ட நன்னனைப் பார்க்கப்போகும் கூத்தன் ஒருவனுக்கு, வழியில் நேரக்கூடும் சில அனுபவங்களை அவனுக்கு எடுத்துரைப்பதே ‘மலைபடுகடாம். அப்படிச் சொல்லும்போது, கூத்தனுக்கும் அவன் உடன் செல்பவர்களுக்கும் கிடைக்கக்கூடும் சில உணவுகளை இந்த நூல் விவரிக்கிறது.. திருமண வீடு போல மணம் கமழும் பெரிய மலைச் சாரலில் உள்ள கானவர்களின் வீடுகளில் தங்கினால்,அவர்கள்…