Category கட்டுரைகள்

சோழர்களே கோயில் சீரமைப்பில் முன்னோடி

பழங்கால சின்னங்களைப் பாதுகாக்கும், Conservation மற்றும் Renovation எனப்படும் பாதுகாப்பு பணிக்கு முன்னோடியாக, சோழர்கள் பண்டையக் கோயில் கட்டுமானங்களைப் போற்றி பாதுகாத்ததற்கான சான்று கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் தொன்மைச் சிறப்பு மிக்க பலத் திருக்கோயில்கள் உள்ளன. காலப்போக்கில் கோயில்களின் ஒரு பகுதியில் பழுதுபட்டால் அதனை திருப்பணி செய்ய வழிவகை செய்யப்பட்டிருந்தது. கோயில் திருப்பணிகளை மேற்கொள்ள நிலங்கள் தானமாக…

சேலத்தில் 400 ஆண்டுகளாக ஒலிக்கும் பாரீஸ் நாட்டு ஆலய மணி

சேலம் செவ்வைப் பேட்டையில் ஜெயராக்கினி தேவாலயத்தின் மணி கோபுரத்தின் உச்சி மாடத்தில் மாட்டப்பட்டிருக்கும், பாரீஸ் மாநகரத்து வெண்கலமணி. இத்தேவாலயம் இன்றைக்கு சரியாக 388 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்டதாகும். இந்தத் தேவாலயத்தின் வரலாறு தமிழ் உரைநடையின் தந்தை என்றும், தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு வித்திட்ட வித்தகர் என்றும் அழைக்கப்படும் தத்துவப் போதகர் சங்கை ராபர்ட்…

தமிழர்களின் வரலாறு என்ன? ஒரு பருந்துப் பார்வை

தமிழ் வரலாறு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து தொடங்குவது. தமிழ், மொழியும் சரி மக்களும் சரி, அறிந்த ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றுக்கு முந்தியவர்கள். ஆவணம் இல்லாமல் எப்படி வரலாற்றுக்கு முந்தியது என்று ஒன்றைச் சொல்ல இயலும்? கிடைக்கும் சான்றுகளை வைத்து, அதற்கு முன் என்ன / எப்படி இருந்திருக்கும் என்று ஊகிப்பதன் மூலம் அது சாத்தியம். அப்படிக் கிடைக்கும்…

பணப்பட்டி – பெருங்கற்கால ஈமக்காடு

கோவை திரு. விஜயகுமார் அவர்களால் பெருங்கற்கால ஈமக்காடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பணப்பட்டி கிராமமானது கோயமுத்தூரிலிருந்து உடுமலை செல்லும் பிரதான சாலையில் 26 கிமி தொலைவில் உள்ளது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட இடுகாடானது கற்குவியல்காக ஊரின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதனைப்பற்றி அவர் கூறுகையில், “இங்கு சில சிறுபாறைகள் வட்ட வடிவில் அடுக்கப்பட்டு ஓடகற்களால் நிரப்ப பட்டது…

புராதானச் சின்னங்களான கோவில்களில் செய்யக்கூடாதவை

புராதானச் சின்னங்களான கோவில்களில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, நவம்பர் மாதம் 19 முதல் 25 தேதிகளில் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடும் வேளையில் நாம், நம் அருகில் உள்ள மரபு சின்னங்களான கோவில்களை பாதுகாப்பது குறித்து அறிவது நலம். 1. பண்டை காலத்துக் கலை முறையை மதியுங்கள். அக்காலத்து கலைஞர்கள், சிற்பிகள் மிகுந்த பக்தியுடன் கலை நுணுக்கத்துடனும்…

தமிழர்களின் தொன்மையைப் போற்றும் தொல்லியல் திருவிழா படுவாசி ரகுநாத், மதுரை

பசுமை நடை’ பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் ‘பசுமை நடை’ மதுரையுடைய சின்னமான யானைமலையைச் சிற்ப தலைநகரமாக மாற்ற வேண்டும் என்பதே. ஆனால் அரசு அந்த மலையை கிரானைட் மாஃபியாவுக்கு கைமாற்றிவிடப் போகும்போது அந்த ஊர் மக்கள் போராடியதன் விளைவாக தற்போது அந்த யானைமலை பாதுகாக்கப்படுகிறது. அதைப் பற்றி முத்துகிருஷ்ணன் வந்து ‘உயிர்மெய்யில், “யானைமலையைச் சூழ்ந்த…

கீழடியில் கட்டடக்கலை மாணவர்கள்

பழந்தமிழரின் நகர் நாகரிகத்தை வெளிப்படுத்தும் கீழடி அகழாய்வைக் காண, கட்டடக் கலையையும், கட்டடக்கலை மாணவர்கள், கீழடிக்கு சென்று காண்பதற்கான வாய்ப்பை, தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம், கீழடி என்ற கிராமத்தில், 2014ல், இந்திய தொல்லியல் துறை, அகழாய்வு செய்தது. அங்கு, சிறந்த கட்டடக்கலை திறனுடன் கூடிய வீடுகள் அமைந்த 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய…