Category கல்வெட்டியல்

பல்லவர் காலக் கல்வெட்டுகள்

பல்லவர் காலக் கல்வெட்டுகள் மண்டகப்பட்டு : பழங்காலத்தில் கோவில்களைப் பெரும்பாலும் மண், சுட்ட செங்கல், மரம் ஆகியவற்றில் அமைக்கும் வழக்கம் இருந்தது. இதை மாற்றி குடைவரைக் கோவில்களாகக் கட்டத்தொடங்கியது இடைக்காலத்தில் இருந்த பல்லவர்களும் பாண்டியர்களும் தான். அதிலும் மகேந்திரவர்ம பல்லவன் பல கோவில்களை இப்படிக் கட்டியிருக்கிறான். அவன் அமைத்த முதல் கோவிலான மண்டகப்பட்டு கோவிலில் இதை…

கலாரசிகனின் கலைக்கோயில்

கலாரசிகனின் கலைக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டுமானம் என்கிற அளவில் இருந்த கோயில் கட்டும் பணி, சோழர் காலத்தில் இயக்க மாக மாறியது. ஆகச் சிறந்த உதாரணம்,பெரிய கோயில். பக்தி என்பது அக்கால மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்தது. கோயில்கள், புராணம் சார்ந்து இருந்தன. பக்தியைத் தங்கள் வாழ்வின் சித்தாந்தமாக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். தெய்வ உருவங்கள் வழியாக…

தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுக்கள்

தஞ்சாவூர் கோயில் கல்வெட்டுக்கள் : முதலாம் இராசராசன் தனது தலைநகரமான தஞ்சாவூரில் ஒரு பெரிய சிவன் கோயிலைக்கட்டி, அதில் தனது பட்டப்பெயரான இராஜராஜேஸ்வரர் என்ற பெயரிலேயே லிங்கத்தைப் பிரதிட்டை செய்தான் இக்கோயில் ஒருஅரசகோயில் என்றே அழைக்கப்பட வேண்டும். இதற்கு முன்பு கட்டப்பட்ட அரசர்களின் பள்ளிப்படைக் கோவில்களைவிட இக்கோவில் வேறுபட்டது. தனது அரசின் வலிமையைப் பறைசாற்றுவதற்காக இக்கோயிலை…

சோழர் காலத்து மறவர் கல்வெட்டுகள்

சோழர் கால கல்வெட்டுகள் சோழர் காலத்து மறவர் கல்வெட்டுகள்: பல்லவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவன் ஆதித்த சோழன், அவன் அபராஜித பல்லவனையும், முத்தரையனையும் போரில் வென்று சோழநாட்டையும் பல்லவ நாட்டையும் கைப்பற்றினான். சங்க இலக்கியங்கள் தொடங்கி பிற்கால சோழர்கள் வரை மறவர்கள் பெரும்பான்மையாகச் சோழப் பேரரசில் பணியில் படைமறவர்களாகவும் தளபதிகளாகவும் பழுவேட்டரையர், இருக்குவேளிர், வாணர்,…

கல்வெட்டுக்களால் அறியப்பெறும் அழிந்து போன மூன்று தமிழ் நூல்கள்

கல்வெட்டுக்களால் அறியப்பெறும் மூன்று தமிழ் நூல்கள் : நம் தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் வரையப் பெற்றுள்ள கல்வெட்டுக்களை ஆராயுங்கால் முற்காலத்தில் நிலவிய சில தமிழ் நூல்களின் பெயர்களும் அந்நூல்களை இயற்றிய புலவர்பெருமக்கள் செய்திகளும் வெளியாகின்றன. அவற்றையெல்லாம், ராவ்சாகிப் திருவாளர் மு.இராகவையங்காரவர்கள், சாசனத்தமிழ்க்கவிசரிதம் என்னும் அரிய ஆராய்ச்சி நூலில் வெளியிட்டுள்ளார்கள். அரசாங்கத்தார் அண்மையில் வெளியிட்ட கல்வெட்டிலா காவின் ஆண்டு…

சோழ, கேரளத் தொடர்புகள்

சோழ, கேரளத் தொடர்புகள் : சோழ, கேரளத் தொடர்புகளைப் பற்றிய முதல் செய்தியைத் தருவது தில்லைதானத்திலுள்ள இராசகேசரியின் கல்வெட்டு. 1 ஸ்வஸ்திஸ்ரீ தொண்டைநாடு பரவின சோழன் பல் 2 யானைக் கோக்கண்டனாயின ராசகேசரி பன்மனா 3 லுஞ் சேரமான் கோத்தாணு இரவியாலும் தவிசுஞ்சா 4 மரையும் சிவிகையும் திமிலையும் கோயிலும் போனக 5 மும் காலமும்…

கல்வெட்டியல் – கா.ராஜன்

கல்வெட்டியல் – கா.ராஜன் கல்வெட்டியல் என்பது பொதுவாக கல்லின் மேல் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்களையும், அவை தரும் செய்திகளையும் தொகுத்துப் படிக்கும் ஒரு இயலாகும். பழமையான எழுத்துக்கள் காலந்தோறும் பெற்ற வளர்ச்சியை உணர்ந்து, பின்னர் அவற்றை கால முறையாகப் படித்து கல்வெட்டுச் சான்றுகள் தரும் தரவுகளை வரலாற்றியல், மொழியியல், சமூகவியல், அரசியல், பொருளாதாரம் போன்றவற்றின் பின்புலத்தில் கண்டுணர்ந்து…