சாணார் தம் பேய் வழிபாட்டின் பூர்வீகம்

சாணார் தம் பேய் வழிபாட்டின் பூர்வீகம் :

சாணார்களின் பேய் வழிபாடு ஆழங்காண முடியாத பழைமையில் அதாவது பரம்பொருள் அல்லது வானுலகினர் வழிபாட்டிற்கு இணையான பழைமையில், வேர்கொண்டிருக்கிறது. எப்போதும் கெடுதி செய்யும் விரோதிகளான மூலப்பேய்களின் வெற்றிகள், அவை பற்றி வேதங்களில் காணும் மறைமுகக்குறிப்புகள், ஒரு வரலாற்று உண்மையின் புராணக் கருத்தாகக் கருதப்படும் பட்சத்தில் பேய்வழிபாடானது வேதிய வழிபாட்டு அமைப்பிற்கு முந்தியதாகும். தமிழ் மக்களில் எந்தவொரு சாராரின் வரலாறு, மொழி, வழக்காறு என்று எதுவாக இருந்தாலும் அவற்றில் பரம்பொருள் வழிபாட்டிற்கான தடயங்கள் இல்லை. பிராமணர்கள் இந்திய தீபகற்பத்தில் குடியேறியதைத் தொடர்ந்து அவர்களின் சமய அமைப்பில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. அவர்கள் அறிமுகப்படுத்திய சமயம் மாயையும் கட்டுக்கதைகளுடன் கூடிய புராணியச் சிந்தனைகளை உள்ளடக்கிய சிவனியத்தை (rudimental of sivism) அடிப்படையாகக் கொண்டது. வேதிய வழிபாடு அல்லது பரம்பொருள் வழிபாடு ஆகியவை உள்ளூர் சமயமென்றும் அது பிராமணர்கள் அறிமுகம் செய்தது என்றும் தமிழ்நாட்டினர்க்குத் தெரியும். தமிழ் மக்களை நாகரிகப்படுத்தியவர்கள் பிராமணர்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களை குடியேற்றத்திற்குவழி நடத்தி வந்த மரபு வழிப்பட்ட தலைவனான அகத்தியன் தமிழ் மொழியை ஒழுங்குபடுத்தி அதற்கு இலக்கணம் வகுத்தான். மேலும் பரம்பொருள் அல்லது வானுலகினர் (heavenly bodies) பற்றிய எந்தவொரு பழந்தமிழ் பெயரும் இயற்கையின் செயல்பாடும் ஆணாகவோ பெண்ணாகவோ இல்லை, வேதத்தில் காணப்படும் எளிய விதிகளின்படி அவை சமஸ்கிருதம் சார்ந்தவை. எக்காலத்திலும் தனிப்பட்ட அறிவினால் உருவானவை என்று கருதப்படுகிற பரம்பொருள், அதில் இயற்கையின் கூறுகள் அல்லது அதன் ஆற்றல்களுக்கான தடயங்கள் கொஞ்சமும் இல்லை. வேதிய மற்றும் பேய் வழிபாட்டு அமைப்புகளைக் கண்டு பிடித்த இருவருமே ஒழுக்க உணர்வில் வறியவர்கள். தான். ஒவ்வொருவரும் நலம் தராத சக்திகளை அலங்கரித்தார்கள், பண்பற்ற செயல்களைச் செய்தார்கள், முன்னவர் இயற்கை நிகழ்வுகளை தெய்வங்களாக ஆக்கியபோது பின்னவர் வானுலகின் சக்திகளை பேய்வழிப்படுத்தினார்கள்.

பேய் வழிபாடு ஏதேனும் ஒரு வடிவத்திலாவது பிராமணியத்தில் கால் கொண்டிருந்தது என்னும் கூற்று பொருத்தம் அற்றது. காலத்திற்குக் காலம். குறிப்பாக தொடக்க நிலை வழிபாடு, உள்ளுணர்வுச் சிந்தனையாக மாறியதையும் வீரத்தலைவர் வணக்கம் பயங்கரமானதாக ஆக்கப்பட்டதையும் தொடர்ந்து பிராமணியச் சிந்தனைகளில் சில சாணார்களின் பேய் வழிபாடுகள் இணைக்கப்பட்டிருக்கலாம். அல்லது ஏற்கனவே விவேகிகளாக (Prudent) இருந்த சில பேய்களின் தடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவை சிறு தெய்வங்களுக்குச் சேவகர்களாக ஆக்கப்பட்டிருக்கலாம். அல்லது கடவுள் என்று அடையாளப்படுத்தப்பட்டிருந்த ஒரு குறிப்பிட்ட பேய் தகுதியில் உயர்ந்த பேய்க்கு மரியாதை செய்யாத காரணத்தால் தகுதி இறக்கம் செய்யப்பட்டிருக்கலாம். அல்லது இப்பகுதியில் ஒவ்வொருவகுப்பினருக்கும் இலக்குகளையும் வழிபாட்டுப்பாங்கையும் தீர்மானித்தவர்களான பிராமணர்கள் கீழ்த்தரமான உள்ளூர்க் குடிமக்களை நாகரிகப்படுத்தும் பொருட்டு வட்டாரப்பிசாசுகளையும் பேய்களையும் அனுமதித்திருக்கலாம். ஆனால் இவ்வுண்மைகள் யாவும், பேய் வழிபாட்டின் தோற்றத்தைக் கருத்தில் கொள்ளாமல், அதன் முன்னிருப்பையே (Previous Existence) கருத்தில் கொள்கிறது. ஆனால் பிராமணியத்தோடு சேராத பேய் வழிபாட்டிற்கான தோற்றமும் தமிழ் நாட்டிலும் ஏன் இந்தியாவிலும் அது அறிமுகப்படுத்தப்படுவதற்கு முந்தியே இருந்தது என்பதற்கு ஏராளமான தடயங்கள் இருக்கின்றன.

திருநெல்வேலி சாணார்கள் – டாக்டர் கால்டுவெல்
விலை: 200/-
Buy this book online: https://www.heritager.in/product/thirunelveli-sanar/
WhatsApp to Order: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
Website: www.heritager.in

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு

#books #tamilbookstore #Heritager wwww.heritager.in

Buy History and Heritage Related book online:

Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/