தோற்கருவி- இசைக்கருவி இலக்கணம்
பண்டைத் தமிழர் வாழ்வில் மிக முக்கிய இடம் பெற்ற தோற் கருவிகளுக்கு ஒரு தனி இலக்கணம் வகுத்துரைக்கப் பட்டுள்ளது. அனைத்துத் தாளக் கருவிகளுக்கும் முதன்மையாக விளங்கிய பறையின் முக்கியத்துவத்தை இசை நூலான பஞ்ச மரபு நூலில் வகுக்கப்பட்டுள்ள வகைப்பாட்டின் மூலம் அறியலாம்.
“ஓதிய கீத நிருத்த வழியிசையாய்ச்
சோதியாய் நின்றியங்கு மம்முழவை – நீதியாய்ப்
பேரும் முறையும் பிண்டமும் பேரெழுத்தும்
பாரு னறிவிப்பேன் பார்த்து”
(வாச்சிய மரபு – (உட்பிரிவு), முழவு மரபு – க)
எனப் பஞ்சமரபில் தோற்கருவிக்குரிய இலக்கணம் வழங்கப் பட்டுள்ளது. இவ்விலக்கணப்படி ‘பறை’ எனும் இசைக் கருவி முழவு மரபில் இடம் பெறுகிறது.
‘தோல்கருவிகள் இந்திய சங்கீதத்தில் அவநத்த வாத்தியங்கள் எனப்படுகின்றன. அவநத்தம் என்றால் மூடப் படுவது என்று பொருளா கையால், ஒரு பாத்திரமோ, மரத்தா லான கூடோ தோலினால் போர்த்தப்பட்டால் அது ‘அவநத்தம்’ ஆகிறது. இது பொதுப்பெயர் ஆயினும் பறைகளுக்கு ‘புஷ்கரம்’ என்ற சாதாரணப் பெயரும் உண்டு” என வட இந்தியத் தோற்கருவிகளைப் பற்றி பி.சைதன்யதேவ குறிப்பிடு கிறார்.
1.பெயராவது
தோற்கருவிகளாற் செய்யப்பட்ட முழவினை வரையறுக்கு மது” இவ்விலக்கணப்படி பறை எனும் தோற்கருவி முழவு மரபில் இடம் பெறுகிறது.
2. முறைமையாவது
‘வன்மை,மென்மை,சமம், முதல், இடை, கடை, உத்தமம். மத்திமம்,அதமம்,நாள், காலம், வீரம், அகம், அகப்புறம், புறம், புறப்புறம், பன்மை, என்கிற முறைமைகளும் இவற்றது அதி தேவதை களையும் அறிவிக்குமது” இவை அனைத்து முறைமை களிலும் பறையின் அதனதன் வேறுபட்ட இயல்புக் கேற்ப இடம் பெற்றுள்ளன.
3. பிண்டமாவது
‘முழவுகளுடைய அளவும், நீளமும், உறுப்பும் இவற்றைச் சொல்லுவது’. ‘பறையின் வகைகள் ஒவ்வொன்றும் அதனதன் தனித்தன் மைக்கேற்ப அளவு, நீளம், உறுப்பும் உடையன. முழவு மரபில் அடங்கும் அனைத்து வகையான தோற்கருவிகளுக்கும் இவ்விலக்கணம் பொதுவாகும்.
4.பேரெழுத்தாவது
“பேரிகை படகம் இடக்கை யுடுக்கை
சீர்மிகு மத்தளஞ் சல்லிகை கரடிகை
திமிலை குடமுழாத் தக்கை சுணப்பறை
தமருகந் தண்ணுமை தாவில் தடாரி
யந்தரி முழவொடு சந்திர வளையம்
மொந்தை முரசே கண்விடு தூம்பு
நிசாளந் துடுமை சிறுபறை யடக்கம்
ஆசில் தகுணிச்சம் விரலேறு பாகம்
தொக்க வுபாங்கி துடிபெரும் பறையென
மிக்க நூலோர் விரித்துரைத் தனரே”
என்றாராகலின், முழவுகளுடைய ளுடைய பெயர்களை யுணர்த்திற்று”
பேரிகை, படகம், இடக்கை,உடுக்கை மத்தளம்,சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை. தாவில்தடாரி (தவில்), அந்தரி, முழவு, சந்திர வளையம், மொந்தை, முரசு, கண்விடுதூம்பு, நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம் (அடக்கப்பறை ), விரலேறு, பாகம், தொக்கு உபாங்கி (தொக்கவு பாங்கம்), துடி, பெரும்பறை என முழவில் அடங்கும் 30 தோற் கருவிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பறை என்னும் பிரிவில் உடுக்கு, சல்லிகை, கரடிகை, கணப்பறை, தண்ணுமை, தடாரி, துடுமை, சிறுபறை, அடக்கப்பறை, பாகம், துடி, தகுணிச்சம், பெரும்பறை ஆகியன இடம் பெறுகின்றன.
இவையாவும் ஓசை எழுப்பும் முழவுக் கருவிகளாகும். முழக்கப் படும் அனைத்துக் கொட்டு கருவிகட்கும் முழவு என்பது பொதுச்
சொல்லாகக் குறிப்பிடப்படுகிறது. கொட்டு கருவிகளின் பொதுமை சுட்டும் சொல் ‘முழவு’ எனக் கூறலாம். மேலும் இவையாவும் ஒரே மாதிரியான ஒலியைத் தருவன அல்ல. ஓசை, ஒலி ஆகிய இரு சொற்களும் வேறுபாடு உடையன. ‘ஒசை என்பது அளவும் பொருளும் அற்றது. ஒலி என்பது பொருளடிப் படையில் அளவுடன் எழுவது, ஓசை ஒழுங்கும் இனிமையு மற்றது. ஒலி அவற்றை உடையது” இந்த ஓசையை ஒலியாக மாற்றுவது தாளம். குறிப்பிட்ட அளவுகளைக் கணக்கிட்டுக் கையால் கொட்டியும், தட்டியும், பகுத்துக் காட்டும் பொழுது இந்த ஓசை, இசையொலியாக மாறுகிறது. இவை வன்மை ஒலியாகவும், மென்மை ஒலியாகவும் நம் காதுகளை எட்டுன்றன.
பறை தமிழர் கலை வரலாற்றின் முகம்
₹170
இந்நூலினை எப்படி வாங்குவது?
1. எங்களது WhatsApp ல் 097860 68908 தொடர்பு கொள்ளலாம், அல்லது
2. எங்கள் இணைய தளத்தில் Heritager .in வாங்கலாம்.
இணையதள பக்கம் பின்னூட்டத்தில் உள்ளது.