நாட்டுப்புறத் தெய்வங்கள்

நாட்டுப்புறத் தெய்வங்கள்:

நாட்டுப்புற மக்களால் தொன்று தொட்டு வழிபடுகின்ற கிராம தெய்வங்களே நாட்டுப்புற தெய்வங்கள் அல்லது நாட்டார் தெய்வங்கள் அல்லது சிறு தெய்வங்கள் என்று அழைக்கப்படுகிறது. இவை நாட்டுப்புற மக்களின் காவல் தெய்வங்களாக நோய் நீக்கி நலம் மற்றும் வளம் தருபவையாகக் கருதி வணங்கப்படுகின்றன. வணங்கினால் நன்மையும் வணங்காவிட்டால் தீமையும் நேரிடும் என்ற நம்பிக்கையில் மக்களால் இவைகள் வழிபடப்பட்டு வருகின்றன.

நாட்டுப்புறத் தெய்வங்களின் வகைப்பாடு:

வீட்டுத் தெய்வம் குலதெய்வம் இன தெய்வம் ஊர் தெய்வம் வெகுசனத் தெய்வம் என்று பல்வேறு வகைப்பாடுகள் இருக்கின்றன.

நமக்கான தெய்வங்கள்

1.வீட்டு தெய்வம்

தங்களுக்குள் வழிகாட்டியாய் விளங்கி, வாழ்ந்து மறைந்த முன்னோர்களையோ, கன்னியாக இருந்த நிலையில் வாழ்ந்து மறைந்த பெண்களையோ, தங்களின் வீட்டுத் தெய்வமாக வழிபடும் மரபு காணப்படுகிறது. இது பெரும்பாலும் பெண் தெய்வமாகவே இருக்கும். இதனை வீட்டுச் சாமி, குடும்பத் தெய்வம், கன்னித் தெய்வம், வாழ்வரசி என்று கூறுவதுண்டு.

2. குல தெய்வம்

ஒரு குறிப்பிட்ட மூதாதையின் மரபில் தோன்றியதன் வாயிலாக ஒருவருக்கொருவர் உறவு கொண்டுள்ள குழுவே ‘குலம்’ (clan) ஆகும். இரத்த உறவுடைய பங்காளிகள் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவர். இவர்களுக்குள்திருமண உறவு நடைபெறாது. இவ்வாறு அமையும் ஒவ்வொரு குலத்திற்கும் தனித்தனித் தெய்வமும் கோயிலும் இருக்கும். இதுவே குலதெய்வம் என்றும் குலதெய்வக் கோயில் என்றும். குறிப்பிடப்படும். பூப்புச் சடங்கு, திருமணம், காதணி விழா அழைப்பிதழ்களில் குலதெய்வத்தின் பெயர் தவறாது இடம் பெறுவதை நீங்கள் காணலாம். )

3. இன தெய்வம்

பல குலங்கள் சேர்ந்தது ஓர் இனம், ஒரு சாதி (caste) என்று கூறப்படும். ஒரு குறிப்பிட்ட சாதிக்கென்று உள்ள தெய்வங்கள் இனத்தெய்வங்கள், இனச்சார்புத் தெய்வங்கள், சாதித் தெய்வங்கள் என்ற பெயர்களில் வழங்கப் படுகின்றன. ஒரு குறிப்பிட்ட இனத்தாரின் தனித்துவத்தைக் காட்டும் வகையில் இத்தெய்வங்களின் வழிபாடுகள் சிறப்பாக அமையும். மிகுதியும் பெண் தெய்வங்களே இனத் தெய்வங்களாக இருக்கும். ஒரே மரபு வழிப்பட்ட குலத்தாரை ஒன்றிணைக்கும் சக்தியாக இனத் தெய்வங்கள் விளங்குகின்றன.

4.ஊர் தெய்வம்

வீட்டைக் காப்பது வீட்டுத் தெய்வம், குலத்தைக் காப்பது குல தெய்வம், இனத்தாரைக் காப்பது இனத்தெய்வம் என்றாலும் ஓர் ஊரில் வாழும் மக்கள் அனைவரையும் காப்பது ஊர்த்தெய்வமே ஆகும். ஊர்ச் சாமி, ஊர்கு தேவதை, கிராம தேவதை, ஊர்க்காவல் தெய்வம் என்ற பெயர்களில் இவை குறிப்பிடப்படுகின்றன. ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து ஊர்த்தெய்வங்களுக்கு மிக விமரிசையாகப் பெரிய கும்பிடு நடத்துவர். தமிழகக் கிராமம் ஒன்றை நீங்கள் வலம் வந்தால் மேற்கூறிய தெய்வங்களை அடையாளம் காணலாம்.

5.வெகுசன தெய்வங்கள்

சாதி, மதம், மொழி என்ற வேறுபாடில்லாமல் அனைவரும் சென்று வழிபடும் வகையில் அமைந்த சிறுதெய்வங்களே இங்கு வெகுசனத் தெய்வங்கள் என்றபெயரில் விளக்கப்படுகின்றன. சிறுதெய்வ மரபிற்கும் பெருந்தெய்வ மரபிற்கும் இடைப்பட்ட ஒரு கலப்பு வழிபாட்டு மரபாக இவை வளர்ந்தும் வளர்த்தெடுக்கப் பட்டும் வருகின்றன.

நிறைவாக:

மக்கள் நம்பிக்கை உடன் சிறு தெய்வ வழிபாட்டை வழிபடுகின்றனர். பண்டைய காலத்தில் நிகழ்ந்த நடுகல் வழிபாட்டின் வளர்ச்சியே குலதெய்வ வழிபாடாகக் கருத இடம் உண்டு போர்க்களத்தில் வீர மரணம் அடைந்த வீரனுக்கு நடுகல் இட்டு வழிபடுவது அக்கால வழக்கம் காலப்போக்கில் வீரர்களுக்காக நடப்பட்ட நடுக்கல் வணக்கம் குடும்பத்தில் இறந்தோர் இறந்தோர்களுக்கு எடுக்கப்படலாயிற்று இது பின்னாளில் குலதெய்வ வழிபாடாக மாறியது.

நம்ம குலசாமிகள் – பேரா. சு.சண்முகசுந்தரம் பேரா. சுதாகர் சிவசுப்பிரமணியம்
விலை: 850/-
Buy this book online: https://www.heritager.in/product/namma-kulasaamikal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in

Social Media Handles:
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
Website: www.heritager.in

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு

#books #tamilbookstore #Heritager wwww.heritager.in

Buy History and Heritage Related book online:

Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/